தானாகவே புகைப்படங்களை எடுக்கும் அதிசயக் கண்ணாடி -வியப்பில் ஓர் அதிசயம் – வீடியோ
தானாகவே புகைப்படங்களை எடுக்கும் முகம் பார்க்கும் கண் ணாடிகளை iStrategy லேப் அறிமுகம் செய்துள்ளது. SELFIE Mirror எனும் இத்தொழில்நுட்பமானது கண்ணாடியின் முன்பாக நிற்பவரது உருவத்தை சுயமாகவே
அடையாளம் காணக்கூடியவாறும், அவரது சிரிப்பினை அடையா ளம் கண்டு புகைப்படம் எடு க்கக்கூடியவாறும் உருவாக்கப்பட்டு ள்ளது. இதன் உட்பகுதியினு ள் Apple Mac Mini சாதனம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதிலுள்ள பொத்தானை அழுத்திவிட்டு, நீங்கள், இந்த கண்ணாடியின் முன்பாக நின்றாலேபோதும், நீங்கள் தயாரா என் று கேட்டுவிட்டு, விதவிதமான புகைப்படங்ளை எடுத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது இதனோடு இணைக்கப்ட்ட தொடு திரைக் கணிணி மூலமாக உங்களது பெயரை குறிப்பிடலாம். மேலும் தொடுதிரைக் கணிணி என்பதால், உங்களது கைப்படவும் எழுத லாம் கையொப்பம்இடலாம். இந்த அதிசய கண்ணாடியைக்காண கீழுள்ள வீடியோவை காணுங்கள்.