Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘‘நாங்கள் சொல்லும் வரை செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்!’ – மருத்துவர் நாராயண ரெட்டி

‘‘நாங்கள் சொல்லும் வரை செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள்!’ – மருத்துவர் நாராயண ரெட்டி

மனித உடலில் செக்ஸ் உணர்வை அதிகம் தூண்டக்கூடிய பாகம் எது? இப்படி ஒரு கேள்வி கேட்டால் பல ரும் ‘செக்ஸ் உறுப்பு’ என்றுதான் பதி ல் சொல்வார்கள். ஆனால், செக்ஸ் உணர்வைத் தூண்டக்கூடிய மிகச் சிறந்த உறுப்பு தோல்தான். உச்சி முதல் உள்ளங்கால் வரை எத்த னையோ இடங்களில் கணவன் ஆசையோடு மனைவியைத் தொடும்போது

செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும்.

வாத்ஸாயனர் இதை அப்போதே புரிந்து வைத்திருந்தார். ஓர் ஆணும் பெண்ணும் செக்ஸில் ஒருமித்து ஈடுபட, இருவருமே உணர்வுக் கிளர்ச்சியோடு இரு க்க வேண்டும். அப்போது தான் உறவு முழுமை பெறும். ஆனால், அன்பான கணவன், மனைவி யாக இருந்தாலும்கூட இருவருக்கும் ஒரே சமயத்தில் ‘மூட்’ வரு வது இல்லை. கணவனுக்கு மட்டும் ‘மூட்’ இருந்து மனைவியைக் கட்டாயப்படுத்தினால் நன்றா க இருக்காது. மனித இனத்தி ல் வலுக்கட்டாய உறவுசட்ட விரோதம். மிருகங்கள் மட்டு மே இப்படி கட்டாயப்படுத்திப் புணர்ச்சியில் ஈடுபடும்.

கணவனுக்கு மட்டும் ஆசை இருக்கும்போது மனைவிக்கு ஆசையை வரவழைப்பது எப்படி? ‘ஆலிங்கன விசாரம்’ என்ற தலைப்பில் காதல் விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கி றார் வாத்ஸாயனர். இரண்டு பேரும் ஆடைகளைக் களை ந்து முகம் தெரியாத இருட்டி ல் அவசரமாக இயங்கி, சில நிமிடங்களில் முடித்து விடு வது அல்ல செக்ஸ் உறவு. சின்னச் சின்ன விளையாட்டு களில் ஆரம்பிக்க வேண்டு ம். தொடுதல், கட்டித் தழுவுத ல், முத்த மிடுதல், வலிக்கா மல் கடித்தல், நகத்தால் கீறி விடுதல் என விளையாடும்போது உடலும் உடலும் இணைகிறது. உதடும் உதடும் இணைகிறது. உணர்வு தூண்டப்படுகிறது. இதன் பிறகு உறவு கொண்டால் அது இனிக் கிறது. காமத்தின் அர்த்தம் புலன்களை நன்கு பயன்படுத்துவதில்தான் இருக்கி றது. ஐம்புலன் களும், கூடவே மனதும் அந்த உணர்வில் கலந்தால்தான் ஒரு வரால் முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியும். பெரும்பாலான செக்ஸ் பிரச்¬ னகளுக்கு அடிப்படைக் காரணம் உண ர்வு சிக்கல்தான். அவர்களது உடல் இய ந்திரத்தனமாக செக்ஸில் ஈடுபட முய லும்… ஆனால் மனசு வேறு ஏதோ யோ சனையில் இருக்கும். மனசும், உடலும் இணையாமல் உறவு சாத்தியமில்லை. ‘என்னால் இதை சாதிக்க முடியவில் லை. எனக்கு உடலில் என்னவோ பிரச் னை’ என நினைத்து அவர்கள் நொறுங்கிப் போவார்கள். மனதில் தான் பிரச்னை என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

செக்ஸில் ஈடுபட முடியாத மனக்குறையோடு என்னைப் போன்ற செக்ஸ் நிபுணர்களி டம் வரும் நபர்களுக்கு இப் போது தரப்படும் சிகிச்சை மிகவும் மேம்பட்டது. கிட்டத் தட்ட வாத்ஸாயனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம் என லாம். அந்தத் தம்பதிக்கு நா ங்கள் சொல்லும் முதல் அட் வைஸ், ‘‘நாங்கள் சொல்லும் வரை செக்ஸ் வைத்துக் கொள்ளா தீர்கள்!’’ என்பது தான். ‘அதில்’ பிரச்னை என்று வருகிறவர்களுக் கு, ‘அதைச் செய்யாதே’ என அட் வைஸ் செய்வது எப்படி சரியா கும் என்று நீங்கள் நினைக்கலா ம்?

ஆனால், அதுதான் சரி! மலை யேறுவது எப்படி எனத் தெரியா மல் சிகரத்தைத் தொடமுடியா து. அதுபோல தொடுதலிலும், உடலுறவுக்கு முந்தைய விளை யாட்டுகளிலும் இருக்கும் இன்ப த்தை உணராமல் பரவச நிலை யை அடைய முடியாது. பரவசப்படாத ஒருவரால் செக்ஸில் உச்ச கட்டத்தை அடைய முடியாது.

அதனால் அவர்களுக்கு முதலில் மனித உடலின் அமைப்பைக் காட் டி, பாடம் சொல்லித் தருவோம். உச்சிப் பொட்டில் ஆரம்பித் துப் பாதம் வரை மனித உடலில் எத் தனையோ இடங்கள் உணர் ச்சிப் பெட்டகமாக இருக்கின்றன. இந்த இடங்களில் ஒருபெண்ணை ஆண் தொட்டாலும், ஆணைப் பெண் தொட்டாலும் விரகதாபம் ஏற்படும். ஆனால், எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரி இருக்காது. நிறைய பெண்கள் இடுப் பைப் பிடித்தால் உணர்ச்சி மயமாவார்கள். சிலர் காது மடலை மிரு துவாக நெரு டினாலே முனகுவார்கள். கணவனும், மனைவியும் பரஸ்பரம் இந்த உணர்ச்சி ப் பிரதேசங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதை முதலில் செய்யச் சொல் வோம். ‘‘இப்போது வீட்டுக்குப் போங்கள். சில நாட்கள் சும்மா இப்படி தொட்டுப் பார்த்துக் கொள் ளுங்கள். ஆனால், கட்டாயம் உறவு வேண்டாம். எல்லை மீ றாமல் பொறுத்துக் கொள்ளுங் கள்’’ என அட்வைஸ் செய்வோ ம்.

ஊருக்குப் போனதும் அவர் கள் இதைச் செய்வார்கள். இருட்டு அறையில் இருவரும் ஆடை களைக் களைந்துவிட்டு மாறி மாறித் தொட்டுக்கொள்ள ஆர ம்பித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் உணர்ச்சி வசப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால், நான்தான் தடை போட்டுவிட்டேனே. ‘என்னடா, இந்த டாக்டர் இப்படிக் கை யைக் கட்டிப் போட்டு விட்டா ரே’ என புலம்ப ஆரம்பிப்பார் கள். இப்படியே இரண்டு மூன் று வாரங்கள் ஓடும். ஒவ் வொரு தடவையும் பரவசத் தை அனுபவித்து உச்சகட்டத் துக்குப் போகமுடியாத ஏக்க ம் மட்டுமே மனதில் மிஞ்சும்.

இதற்கு முன்பு வரை மனை வியுடன் படுக்கைக்குப் போ கும்போது கணவன் நினைப்பு, ‘ஏற்கெனவே என்னால் முடியாம ல் போச்சே… இப்போது முடியுமா… முடியாதா?’ என்ற கேள்வியி ல்தான் நிற்கும். இப்படி மனம் வேறு திசையில் பயணிக்கும்போது, அவரு க்கு மனைவி எங்கு தொ ட்டாலும் உணர்ச்சிவசப் பட முடியாது. பதற்றத்தில் அவரால் இயல்பாக இயங் கமுடியாது. இதனால் தோ ல்விதான் கிடைக்கும். ஆனால், எங்களுடைய அறிவுரைக்குப் பிறகு நிலைமையே வேறு. அவரது குறிக்கோள் செக்ஸ் இல்லை. சும்மா தொட்டு விளையாடுகிறார்… அவ்வளவு தான்! அதனால் டென்ஷன் இல்லாமல், முடியுமா& முடி யாதா என்ற கேள்வி எழாம ல் அவரால் ரிலாக்ஸாக இ ருக்க முடிகிறது. வெற்றி & தோல்வி பற்றிக் கவலைப் படாத தொடுதல் விளையாட் டு. இதில் முழு இன்பத்தையு ம் அவரால் அனுபவிக்க முடி கிறது. அதனால் பரவசப்பட முடிகிறது. பரவசமாகி விட் டோமே என்று உடனே செக்ஸை அவர் முயன்று பார்த்தால் ஆ பத்து. ஆரம்பிக்கும் நிமிடத்திலேயே கேள்வி திரும்பவும் வந்து ம னசில் உட்கார்ந்துகொள்ளும். அப்புறம் அவருக்குசிகிச்சை அளிப்பதே சிரமமாகி விடும் .

ஆனால், கட்டுப்பாடோடு இரு ந்து அடுத்த தடவை சிகிச்சை க்கு வருகிறவர்களுக்கு, ‘டாக் டர் எப்போது கட்டுப்பாட்டைத் தளர்த்து வார். நாம் சந்தோஷ த்தை அனுபவிக்கலாம்?’ என் ற கேள்வி மட்டும்தான் இருக் கும். பயமும், பதற்றமும் காணாமல் போயிருக் கும்.

இதில் பல நன்மைகள்… டாக்டர் ஓகே சொன்னதும் அவர் போய் உறவில் கலக்கும்போது தொடுதலில் இருந்து ஆரம்பிப்பார். ‘இ வ்வளவு நாள் டாக்டர் தடுத்தார், இனி என்னைத் தடுக்க யார் இருக்கிறார்?’ என்ற கேள்வி மட்டுமே மனதி ல் இருக்கும். ‘முடியு மா& முடியாதா என்ற நினைப் பு வராது. அதோடு இத்த னை நாள் பரவசமாகி கட்டுப்பாடோடு இருந்ததால், துரிதஸ்கலி தம் ஆகாமல் உறவில் நீடிக்க முடியும். இதனால் சந்தோஷம் அதிகமாகும்.

இதெல்லாமே வாத்ஸாயனர் சொல் லி வைத் திருப்பதுதான். எல்லாவற் றையும் இந்தியர்கள் மறந்ததால் இப்போது புதுசாக மேற் கத்திய அறி ஞர்கள் சொல்லி, இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

செக்ஸ் உறவில் கிடைக்கும் பரவச மான சுகம் எப்படி இருக்கும்? இதை வர்ணிக்க முயன்ற எல்லோருமே தோற்று விட்டார்கள். வாத்ஸாயன ரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ‘அது கிட்டத்தட்ட தும்மல் மாதிரி… ஆரம்பித்த பிறகு நிலை கொ ள்ளாமல் தவிக்க விடும். எப்போது வெளிப் படுமோ எனப் பதற்ற ம் அடைய வைக்கும்… முடிந் ததும் அடுத்த நொடி அமைதி யாகி விடும்’ எனச் சொல்கி றார் அவர்.

அப்படியும்கூட அவருக்கு சரி யாக சொன்னோமா என்று குழப்பம் வருகிறது. அதனா ல், ‘அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. இந்த சுகம் எப்படிப்பட்ட து என்று கேட்டால், யாராலும் பதில் சொல்ல முடியாது. ஆணுக் கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுப வம் எப்படி என்பது அவருடைய மனை விக்குத் தெரியாது. ஆனால், பெண்களு க்கு அப்படி எந்த திரவமும் வெளியேற வாய்ப்பில்லை. அவர்களுக்கும் சுகம் கிடைக்கிறது. அதுஎப்படிப்பட்ட பரவசம் என்பது கணவனுக்குத் தெரியாது. இப்ப டி இருக்க இதை எப்படி விவரிப்பது, என்ன எழுதுவது?’ என்ற கேள்வியோடு முடி க்கிறார். இதேபோல ‘செக்ஸ் உறவு எந்தக் கணத்தில் முழுமை பெறுகிறது’ என்பதையும் அலசுகிறார் அவர். ‘பரவ சம் கிடைத்த துமே பெண்ணிடமிரு ந்து ஆண் விலக முயற்சிப்பான். ஆனால், பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத் து, இன்னும் வேண்டும் என்பதுபோல செயல்படுவாள்’ என்கிறார் வாத்ஸாயனர். ‘செக்ஸ் உறவின் உச்சகட்டத் தில் ஆண்களுக்கு விந்தணு வருவதைப் போல பெண் களுக்கும் ஏதோ ஒரு திரவம் வெளியேறுகிறது’ என்று மேற்க த்திய நிபுணர் கள் ஐம்பது ஆண்டு களுக்கு முன்புவரைகூட நம்பினர்.

ஆனால், செக்ஸ் தொடர்பா ன ஆராய்ச்சியை நடத்திய வர்களான மாஸ்டர்ஸும், ஜான்சனும் நடத்திய படுக் கை அறை ஆராய்ச்சிக் குப் பிறகுதான் இது தவறு என்பது புரிந்தது.

‘ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல் லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல் லை’ என்ற அவர்கள், இன்னொ ரு விஷயத்தையும் சொன்னார் கள். ‘செக்ஸ் உறவில் ஆண்க ளுக்கும், பெண்களுக்கும் பெரி ய வித்தியாசம் உண்டு. ஆண்க ளுக்கு விந்து வெளியேறிய பி றகு கண்டிப்பாக ஓய்வு வேண் டும். திரும்பவும் அடுத்த ரவுண் டை ஆரம்பத்திலிருந்து துவங் க வேண்டும். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு த் திரவமாக எதுவும் வெளியேறுவது இல்லை என்பதால், ஒரே நிமிடத்தில்கூட திரும்பவும் இன்னொரு முறை உறவில் ஈடுபட்டு உச்சகட்டத்தை அ டைய அவர்களால் முடியும். இதனால் தான் உறவு முடி ந்ததும் விலக முயற் சிக்கும் ஆணை இறுக்கமாக அணை க்கிறாள் பெண்’ என்று அவர் கள் கண்டுபிடித்துச் சொன் னார்கள்.

இதையெல்லாம் பல நூற்றாண்டுக்கும் முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது மட்டுமில் லை, காம சூத்திரத்தின் சிறப் பு. கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இர ண்டறக் கலக்க நல்வழிக ளைச் சொல்லும் ஓர் ஆசா னாகவும் அது இருக்கிறது.

செக்ஸ் உறவு முடிந்த அடுத்த ஓரிரு நிமிடங்களில் குறட்டைவிடும் பழக்கம் பல பேருக்கு உண் டு. ‘இந்தியர்கள் தங்கள் மனைவியைத் தூக்க மாத்திரையாகப் பயன்படுத்துகிறார்கள்’ என்று செக்ஸாலஜி நிபுணர்கள் கிண்ட லடிப்பார்கள். வாத்ஸா யனர் ‘இது ரொம்பத் தப்பு’ என்கிறார். ‘செக்ஸ் முடிந்த பிறகு களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டித் திரும்பிப் படுக் கக் கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டிப்பிடித்து மு த்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தைத் தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை. ஒரு குழந் தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் கலந்திருக்க வேண்டும்.

செக்ஸ் உறவின் சிகரத்தைத் தொட்டுவிட்டு ஓய்வெடுக்கு ம்போ து மனம் அமைதியில் மூழ்கியிருக்கும். இதுபோன் ற அமைதி வேறெந்த சந்தர்ப் பத்திலும் கிடைக்காது. அந்த நேரத்தில் மனம் விட்டுப் பேச வேண்டும். இப்படி பேசுவது தான் பரஸ்பரம் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக் கும். பாசப் பிணைப்பை அதிகமாக்கும்’ என்கிறார் அவர். நவீன செக்ஸ் சிகிச்சையில் ‘ கணவன் & மனைவி சண் டையைத் தவிர்க் க’ இந்த விஷயத்தை தான் டாக்டர் கள் செய்யச் சொல்கிறார் கள். ‘செக்ஸில் ஆணுக்கு க் கிடைக்கும் இன்பத்தை விட பெண்ணின் திருப்தி தான் மிகவும் முக்கியம்’ என்பது வாத்ஸாயனர் கட் சி. இதற்காக அவர் நேர டியான செக்ஸ் உறவுக்கு மாற்று ஏற்பா டாக இருக்கும் பல முறை கள் பற்றி விளக்க மாகச் சொல்கிறார். இதில் முக்கிய மானது, இப்போது ‘வைப் ரேட்டர்கள்’ என்ற பெய ரில் மார்க்கெட்டில் விற்கப்படும் செயற் கை ஆண் உறுப்பு.

வாத்ஸாயனர் காலத்தில் இதற்கு ‘அப திரவியம்’ என்று பெயர். தங்கம், வெள்ளி, யானைத் தந்தம், பித்தளை, மரம் என வெவ்வே று பொருட்களில் செய்யப்பட்டு இவைக் கிடைத்தன. செக்ஸ் உற வில் பரவசம் அடைய முடியாத பெண்கள் இவற்றைப் பயன் படு த்தினர்

(நவீன கால வைப்ரேட்டர்கள் 1869 & ம் ஆண்டு அறிமுக மானது. நம் மண்ணில் இவை ஆறாயிரம் ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொட்டிலான ஹ ரப்பாவில் புதைபொருள் ஆரா ய்ச்சி செய்தபோது கிடைத்த புரா தன பொக்கிஷங்களில் செயற் கை ஆண் உறுப்புகளும் அடக்க ம்!).

அவர் சொல்லும் இன்னொரு வி ஷயம், ‘வாய்வழி உறவு.’ வழக்க மான செக்ஸில் பிரச்னை இருந்து, உறவு சாத்தியமில்லாமல் போ னால், இந்த முறையைக் கையாண்டு பார்க்கலாம்… (நிறைய பேர் ஜனன உறுப்புகள் சுத்தமி ல்லாதவை என நினைக்கிறார் கள்.

ஆனால், உண்மையில் வாய்தா ன் அசுத்தமானது. எந்த நேரத்தி லும் குறைந்தது நாற்பதாயிரம் பாக்டீரியாக்கள் வாயில் இருக்கு ம். ஜனன உறுப்புகளை, குளிக்கும்போது சுத்தம் செய்தால் போது ம்).

இதுபோன்ற பல விஷ யங்களை நாசூக்காக விவரிக்கும் வாத்ஸாய னர், ‘இவற்றைக் கண்டிப்பாக பின் பற்றுங்கள் என சொல்ல மாட்டேன். தேசம், சூழ்நிலை, வாழ்கிற காலம் ஆகியவற்றை மனசில் வைத்துக் கொண்டு, இது நல்லதா, கெட்டதா என தீர்மானியுங்கள்’ என முடிவெடுக்கும் பொறுப்பை வாசகரிட ம் கொடுத் து விடுகிறார்.

ஒப்பனைக் கலை பற்றியும் வாத்ஸாயனர் விவரிக்கிறார். ‘கணவ ன்&மனைவி உறவில் சந்தோஷம் நீடிக்க, ஒருவர் மீது இன்னொ ருவர் கொண் டிருக்கும் கவர்ச்சி நீடிக்க வே ண்டும். எனவே அலங்கரித் துக்கொள்ள மறக்காதீர்கள்’ என்பது அவரது அட்வைஸ். இ ன்னமும்கூட நிறைய பேர் தப்பு செய்வது இந்த விஷயத்தில்தான்.

திருமணத்துக்கு முன்பு அவர் கள் வெளியில்தான் சந்தித்து இருப்பார்கள். வாரிச் சீவிய தலை கலையாமல், பவுடர் பூச்சு, சென்ட் வாசனை என சந்திப்பு நிகழும். ‘இதுதான் தங்கள் ஜோடி’ என்ற பிம்பம் அவர்களது மனதில் பதிந்து விடும்.

ஆனால், திருமணம் நடந்த மறுநாளே கணவன் ஒரு அழுக்குக் கைலியோடும், கிழிந்த பனிய னோடும் வீட்டில் நடமாட, மனைவி தலைசீவாமல் சும்மா சுருட் டிக் கொண்டை போட்டுக் கொண்டு, எண்ணெய் வடியு ம் முகத் தோடு இருப்பார். இருவருக்குமே இது எதிர் பார்க்காத கோலமாக இருக் கும். தங்கள் மனதில் இருக் கும் பிம்பத்தோடு இந்த நிஜம் ஒத்துப் போகாத உறுத் தல், ஒவ்வொரு நாளும் அதிகமா கும். இந்த ஏக்கத்தில் இருக் கும் கணவன், ரோட்டில் மு ழு மேக்கப்போடு போகும் வேறொரு பெண்ணைப் பார்ப்பான். ‘அ ந்தப் பெண் அவரது சொந்த வீட்டில் எந்த கோலத் தில் இருப்பாள்’ என யோசிக்க தோன்றாது. ‘நம் மனைவியைவிட இவள் அழகு’ என்ற நினைப்புதான் வரும். சமயத்தில் இதே மாதி ரி மனைவிக்கும் தோன்றக் கூடும். கவர்ச்சி இல்லாவிட் டால், ஈர்ப்பு இருக்காது. செ க்ஸிலும் ஆர்வம் வராது. எப்போதும் ‘பளிச்’சென இரு ந்தால் பிரச்னை இல்லை.

இவ்வளவு வாழ்க்கை ரகசியங்களையும் சொன்ன வாத்ஸாயன ர், காமசூத்திரத்தைப் பெண்களும் படிக்க வேண்டும் என விரும்பி னார். ‘குடும்பப் பொறுப்பில் இருப்பது போல செக்ஸிலும் பெண்களுக்கு சமபங்குண்டு . அவர்களும் இதைப் படித்து க் கற்றுக் கொண்டால்தான் எப்படிப் பழக வேண்டும், எது செய்யக் கூடாத விஷயம் என புரியும். ஒரே நிபந்தனை … அவர்கள் தங்கள் கணவ ரிடம் அனுமதி பெற்ற பிறகே இதைப் படிக்க வேண்டும்’ என்றார் அவர்.

ஏன் அனுமதி? இல்லாவிட் டால் மனைவியின் நடத்தை குறித்துக் கணவன் சந்தேகப் பட வாய்ப்பு உண்டு என கவலைப்படுகிறார் அவர்.

இந்திய கலாசாரத்தில் காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் காமசூத்திரத்தை மறக்க டித்து விட்டது.

ஒரு பரிணாம விபத்தில் மனித இனம் தோன்றியது. வந்தநாள் முதல் மனித இனம் தனது அறி வு வழிநடத்தும் பாதையில் பயணி த்து, எல்லாவற்றிலும் மாற்ற ங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குக் கல்வியும், கலாசாரமும் அடிப்படையா க இருக் கின்றன.

கல்வியின் மூலம் கிடைக்கு ம் அறிவு எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் கலா சாரம்… அது ஒரேமாதிரியாக இருக்காமல் காலப்போக்கி ல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறுவிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. குழ ப்பம் இதனால்தான் வருகிறது. ஒரு இடத்தில் சரியாகப் படுகிற விஷயம், இன்னொரு இடத்தில் கிரிமினல் குற்றமாக கருதப்பட காரணம் இதுதான்! உதார ணமாக, காதலர்களின் தேச மான ஃபி ரான்ஸில் பொது இடங்களில் முத்தமிடுவது குற்றமில்லை. சாலைஓரங் களில், பூங்காக்களில், சுற்று லாத் தலங்களில், ஓடும் ரயில்களில்… இப்படி அநேக பொது இடங்களில் காதலர் கள் இறுக அணைத்தபடி, உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டுக் கிறக்கத்தில் மூழ்கி இருப்பார்கள். பார்க்கிறவர்கள் அதை கேஷுவலாக ரசித்தபடி போய் விடுவார் கள்.

நம்ம ஊரில் பிஸியான ரோடுகளி ல் ஆடு, மாடுகள் சாவதானமாக நடந்து டிராஃபிக் ஜாம் செய்வது மா திரி அங்கே இது சகஜமான விஷய ம். அது அவர்களின் கலாசாரம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஒரு பார்ட்டியில் தன் பாய்ஃபிரெண்டுக் கு உதட்டில் முத்தம் கொடுத்தது படம் பிடிக்கப்பட்டு, இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது அநாகரிகம்’ என கலாசாரப் பாது காவலர்கள் கண்டித்தனர்.

ஃபிரெஞ்சுக் காதலர்கள் இந்தியா வந்து இப்படி பொது இடத்தில் முத்த மிட்டுக் கொண்டால், நியூசென்ஸ் கேஸில் அவர்க ளை போலீஸ் உள்ளே தள்ளி விடும்.

இரண்டு நாடுகளிலும் இருப் பவர்கள் மனிதர்கள்தான்… அதே உதடுகள்தான்… அதே முத்தம்தான்! ஆனால், ஒரு கலாசாரம் இதை நாகரிகம் என்கிறது. இன்னொன்று குற்றம் என்கிறது.

இதில் எது தப்பு… எது சரி… இதை விவாதம் செய்வது புத்திசாலித் தனம் இல்லை. இருக்கும் சூழ்நிலைக்கு எதுசரி என புரி ந்து கொண்டு நடப்பது தான் கற்றக் கல்விக்கு அர்த்தம்.

கலாசாரம் என்பதற்கு டிக் ஷனரி ஒரு அர்த்தம் தருகிற து. ‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெருவாரியான மக்களால் கடைபிடிக்கப்படும் சடங்குகளும், நம் பிக்கைகளும், பழக்கங்களுமே கலாசாரம்’ என்பது அந்த அர்த்த ம். இதற்கு மொழியோ, இனமோ தடை போட முடியாது. ஆந்திரத் தின் சித்தூர் பகுதிக்குப் போனால் தமிழக மக்கள் மத்தியில் புழங்கும் எல்லா நடை முறைகளும் அங்கேயும் இருக்கும். கன் னியாகுமரி மாவட்டத்துக்குப் போனால் கேரள மணம் வீசும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கலாசார த்தின் அடிப்படை விஷய ங்கள் இரண்டு. ஸ்ருதி, ஸ்மிருதி என சமஸ்கிருதத்தில் இதை சொல்வார்கள். ஸ்ருதி என்பது அறிவு சார்ந்தது. மனித இனம் உ ருவாகி நீண்டகாலம் கழித்தே மொழிகள் தோன் றின. ஆனால் அதற்கு முன்பே வேட்டை யாடக் கற்ற மனிதன், குழுக்களாக வாழு ம் முறையையும் உருவாக்கினான். குழுவு க்கென்று ஒரு தலை மை… அதற்கென சில கட்டுப்பாடுகள்… இப்படி சட்டங்கள் தோன்றின. இந்த சட்டங்களைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமே! அப்போது கூச்சல், முனகல், ஆரவாரம் என சத்தங்களால் மனிதன் பேசினான். காலப்போக்கில் அவை மொழிகள் ஆகின.

ஒவ்வொரு பொருளையும் கண்களா ல் பார்த்து, தொட்டு, வாச னை பிடித்து, ருசித்து, ரசித்து அவற்றை வர்ணித்து நூல்களை உருவாக்கினர் நம் மூதா தையர்கள். அவை ஆரம்பத்தில் எழுத் து வடிவம் பெறவில்லை. மொழிகளு க்கு அப்போது பேச்சுவடிவம் மட்டுமே இருந்தது! செவிவழியாகவே இவை குருவிடமிருந்து சீடர் களுக்குத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. இதில் ஒலிக்குறிப்புகள் முக்கியமானவை. உச்சரிப்பில் சின்ன பிழை இருந்தாலும் அர்த்தம் மாறிவிடும் (இன்றைக்கும் ஒரிஸ்ஸாவில் பழங்குடி யினர் வசிக்கும் கிராமங்க ளுக்கு யாராவது அடையா ளம் தெரியாத சாமியார் போனால், அவ்வளவுதா ன்! அவரை மடக்கிக் கல் லால் அடித்து மேல்வரி சை முன்பற்கள் இரண் டை உடைத்துப் பிடுங்கி விடுவார்கள். மந்திரஜால ம் செய்து பிள்ளைகளைப் பிடிக்க வந்திருக்கும் சண்டாளர்களாக இவர்களைக் கருதுகிறார்கள் பழங்குடிகள். ‘முன்பற்கள் இல் லாவிட்டால் மந்திரங்க ளைத் தெளிவாக சொல்ல முடியாது… அர்த்தம் மாறி விடுவதால் அவை பலிக்கா மல் போய்விடும்’ என்பது அவர்கள் நம்பிக்கை!).

நூல்களே அறிவுப் பெட்டக ங்களாகவும், சட்டங்களாக வும் ஆகின . இதைதான் ஸ்ருதி என்கிறார்கள்.

அறிவு அப்படியே இருந்தால்என்ன புண்ணியம்? அதைப் பயன்படு த்தி னால்தானே மனிதகுலம் அறியும்! இப்படி பயன்படுத்துவதை யே ஸ்மிருதி என்கிறார்க ள். அறிவுசார்ந்த ஸ்ருதி மாறுவதில்லை . ஆனால், ஸ்மிருதி எனப்படும் பயன் பாடு காலப்போக்கில் மாற் ற ங்களைச் சந்திக்கிறது. அணுசக்தியை ஆரம்பத் தில் கண்டு பிடித் தபோது மக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. அமெரிக் கா, ‘அணுகுண்டு போடுவேன்’ என மிரட்டியபோது ஜப்பான் மசிய வில்லை. ஆனால், ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களை அணுகுண்டு நிர் மூலமாக்கிய பிறகு உலகத்து க்கே அதன் குணம் தெரிந்து விட்டது. அழிக்கப் பயன்படுத்தி ய அதே அணுசக்தியில் இப் போது மின்சாரம் தயாரிக்கி றார்கள்.

அறிவின் பயன்பாடு இப்படி மா றுவதைத்தான் கலாசார மாறு தல் என்கிறோம். ஓர் இடத்தில் இருக்கும் பழக்கம் இன்னோர் இடத்தில் மாறுகிறது. ஒரே இடத்திலேயே ஐம்பது வருஷங்களு க்கு முன்பு இருந்த பழக்கம் இப்போது மாறிவிடுகிறது. முன்பு இரு ந்ததுதான் சரி, இப்போது இருக்கும் பழக்கம் தப்பு என நினைக்கக் கூடாது. சூழ்நி லைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளா விட்டால், எந்த ஒரு இனமும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும்.

முன்னோர்கள் சொன்ன பல விஷயங்கள் இப்போது நம க்கு முரண்பட்டதாகத் தெரியலாம். ‘நிதானமே பிரதானம்’ என ஒரு பழமொழி இருக்கிறது. ‘எந்த ஒரு விஷயத்தையும் ஆற அமர யோசித்து, அதன் விளைவு களைப் புரிந்துகொண்டு செ ய்ய வேண்டும்’ என்பது இந்த ப் பழமொழி உணர்த்தும் நீதி. அதேசமயம், ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என இன்னொரு பழமொழியும் உண்டு. ‘எதை  யும் சீக்கிரமாக செய். இல்லா விட்டால், அது எதிர்பார்த்த மாதிரி நடக்காது’ என்று இதற்கு அர்த்தம் வருகிறது.

இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. இப்படி குழப்பமா கப் பழமொழி சொன்னால் எதைப் பின்பற்றுவது? எந்த ஒரு விஷ யத்தையும் சூழ்நிலையை அனுசரித்து செய்ய வேண்டும் என்பது பழமொழியின் பின்பக்கம் ஒளிந்திருக்கும் உண்மை.

இவ்வளவு பீடிகையும் எதற்காக என்றால், இனி நாம் பார்க்கப் போவது கொஞ்சம் நெருடலான சமாச்சாரங்கள். ‘செக்ஸ் விஷய த்தில் ஒவ்வொரு கலாசாரத்திலும் பழங்காலத்தில் என்னவித மான நம்பிக்கை இருந்தது? அது காலப்போக்கில் எப்படி மாறிய து?’ என்று பார்க்க, காலச்சக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கிப் பயணம் செய்து, திரும்பவும் நிகழ்காலத்துக்கு வரப் போகிறோம். நிறைய விஷயங்கள் அதிர்ச்சிதரும். சமயத்தில் கொஞ்சம் அருவ ருப்பாகக்கூட தோன்றலாம். இதில் ‘ஒரு சமுதாயம் செய்ததுதான் சரியானது… மற்றவர்கள் தப்பு செய்தார்கள்’ என நான் சொல்லப் போவதில்லை. நடந்த வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப்பார்த்து, அதை அறிவியல் கண்ணாடியால் அலசுகிறோம். இது தேவையா என்றால், ஆமாம். செக்ஸ் விஷயத்தில் அறிவியல் சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொண்டாலே மனிதவாழ்க்கை சுகமாக அமையும்.

– பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி

2 Comments

    • ஒரே நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை விடுத்து உங்களது கணவருக்கு ஏற்ற‍ நிலையில் பாலியல் உறவில் ஈடுபடலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: