Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமரை முதலிரவில் சந்தேகித்த‌ சீதாதேவி! – அரியத் தகவல்

ஸ்ரீராமரை மணந்த சீதைக்கு, முதலிரவில் ஏற்பட்ட‍ சந்தேகம் ! – அரியத் தகவல்

இராமன்தான் சீதாதேவியை சந்தேக்கப்பட்டு தீக் குளிக்க‍ச் சொன்னான் என்பது எல்லோரும் அறி ந்த ஒன்று ஆனால் ராமனை மணந்த சீதாதேவி க்கு திருமணமான முதல் நாளில் அதாவது முத லிரவில் ஸ்ரீராமரை சந்தேகம் ஏற்பட்டுள்ள‍து.  அதை இங்கே போர்ப்போம். 

சீதையின் தந்தை சனகன் நடக்கும் யாகசாலையைப் பார்ப்பதற்கு விசு வாமித்திரர், இராமன், இலக்குமண ன் ஆகிய மூவரும் வந்த மர்ந்திரு ந்தனர். மன்னன் சனகன் அவையில் இருந்த இராம, இலக்குவரைப் பார் த்து அவர்கள் அழகால் கவரப்பட்டு, விசுவாமித்திரரை அணுகி அவர்க ள் யாரெனக் கேட்க விசுவாமித்திர ன் ‘இவர் கள் உன் விருந்தினர், உன் யாகத்தைப் பார்க்க வந்துள்ளனர். நீ வைத்திருக்கும் சிவதனுசையும் பார்க்க

வந்துள்ளனர். இவர்கள் அயோத்தி மன்னன் தசரதனின் புதல்வர் கள்.’ என்று அறிமுகப்ப டுத்தி, அவர்களின் குலப் பெருமையையும் கூறி வைத்தார். இவை கேட்ட தும் சனகன் மிக மகிழ் ந்து விசுவாமித்திரரிடம் ‘இச்சிவதனு வில்லில் நாண் ஏற்றினால் என் துன்பம் தீரும். என் மகள் சீதை க்கும் ஒரு வாழ்வு பிறக்கும். எத்தனையோ இளவரசர்கள் வந்த னர். வில்லைப் பார்த்ததும் சென்று விட்டனர். 

உன்னுடன் வந்தவர்கள் இந்த வில்லில் நாண் ஏற்றினால் என்  அருமை மகள் சீதையின் வாழ் வு மலரும்.’ என்று கூறி முடித் தார்.

இதைக்கேட்ட விசுவாமித்திரன் இராமனைப் பார்க்க இராமன் எழுந்து சென்று ஒரு பூமாலை யை எடுப்பதுபோல் அந்தச் சிவ தனு வை எடுத்து, அதில்; அம்பு தொடுத்து, நாண் வலித்து நிற் கையில் வில் முறிந்த பேரோ சை யாவருக்கும் கேட்டுத் திகைத்து நின்றனர். இராமன் சென்றதையும், சிவதனுவை எடுத் ததை யும் தான் கூடியிருந்தோர் கண்டனர். பின் சிவதனு முறிந்த ஓசை யை யும்தான் கேட்டனர். இராமன் அம்பு தொடுத்ததையும், நாண் வலித்ததையும் அவர்க ள் கண்டிலர். இதை ‘கையால் எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’–(34) என்று கவி புனைந்தான் கம்பன்.

சனகன் மட்டிலா மகிழ்ச்சி அ டைந்து, விசுவாமித்திரன் உத வியுடன் தசரத மன்னனுக்கு விரிவான ஒர் ஓலை அனுப்ப மன்னனும் அவனைச் சேர்ந்தோரும் மிதிலைக்கு வந்து சேர்ந்தன ர். தசரத மன்னனை வரவேற்றுக் குசலம் விசாரித்து அவர்களுக் கு மாளி கையும், இட வசதிகளையும் ஒழுங்கு செய்து வைத்தான் மன்ன ன் சனகன். இரு மன்னர்க ளும் இராமன், சீதை திரு மணத்தை ஒழுங்கு செய் தனர். மிதிலை நகரம் மணக்கோலம் பெற்றது. வசிட்ட முனிவர் தீ வளர்த்து மணவறை அமைத்தார். சங்கு முழங் க, அந்தணர் ஆசி கூற, மணவேள்வி மந்திரம் மூன்று முறை ஓத, சீதையின் கையை இராமன் பற்றி, இருவரும் மண வேள்வித் தீயை வலம் வந்து வணங்க மணவிழா இனிதே முடிவுற்றது. இராமன், சீதை இருவரும் பள்ளியறைக்குள் புகுந்தனர். இது அவர்கள் முதலிர வு. உற்சாகமாக இருந்தான் இராம ன். ஆனால் சீதையோ ஒரு மூலை யில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி யிருந்தாள். இதைக்கவனித்துவிட் டான் இராமன்.

இராமன்:-

என் உயிரான பெண்ணே சீதா! நாம் எங்கிருக்கிறோம் என்பதையும் மற ந்து விட்டு ஏன் இந்த மௌனம்? ஏன் இந்த ஆழ்ந்த சிந்தனை? கூறுவாய் கண்ணே!

சீதா:-

என் ஆருயிர் மன்னவ! என் சிந்தை சிறிது குலைந்து ஒரு சங்க டத்தில் மாண்டுள்ளேன் நாதா! தாங்க ள்தான் என்னை அதிலிரு ந்து மீட்டெ டுக்க வேண்டும். கருணை காட்டுங்கள் அன்பே!

இராமன்:-

பெண்ணே! நீர் ஓர் இளவரசி. நான் ஓர் இளவரசன். ஓன்றும்; ஒளிவு மறைவி ன்றிக் கூறு கண்ணே! என் சீதாவுக்கு எதையும் செய்யத் தயார்.

சீதா:

நாதா! நான் அணிந்திருக்கும் எல்லா ஆபரணங்களும் விலையுயர்ந்த கற்க ள் பதிக்கப்பட்டவை. இது என் தந்தையாரின் அன்பளிப்பு. உங்கள் கால் பட்டு ஒரு கல்லு மிக அழகிய பெண்ணாக அகலிகை என்ற பெயருடன் உயிர்த்து எழுந்த கதையை அண்மையில் கேள்விப் பட்டேன். நீங்கள் இன்று என்னைத் தீண்டும்போது நான் அணிந்திருக் கும் கற்களிலிருந்து அழகிய பல பெண்கள் உருவெடுத்து வந்து நிற் பார்கள். அப்பொழுது என் நிலை என்னாகும்? இதுவே என் தயக்க மும் ஐயுறவுமாகும் மன்னவ!

இராமன்:-

மயில் போன்ற பெண்ணே! கௌதம முனிவன் தன் மனைவி அக லிகையைக் கல்லாகும்படி சாபமிட்டு, என் கால் அக் கல்லில்பட் டதும் பெண்ணாகட்டும் என்றொரு விமோச னமும் கொடுத்திருந்தார். அதுவே அன்று நிக ழ்ந்தது. உண்மையில் கல்லைப் பெண்ணாக் கும் சக்தி என்னிடம் இல்லைக் கண்ணே.

சீதை:-

நாதா! மனம் தெளிந்து விட்டது. என்னைப் பொறுத்தருள் வீராக!

இந்நிலையில் இருவரும் தாம் ஏன் பள்ளியறைக்கு வந்தனர் என்பது புரி ந்து விட்டது. அக்கணமே நாணிக் கோணி வெட்கப்பட்டாள் சீதை. அ தைக் கலைத்துக்குலைத்துநின்றா ன் இராமன். அவர்கள் கடமை உந்தக் காதற் கப்பல் ஓடத் தொடங்கியது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: