Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹோண்டா ஆக்டிவா 125 – இது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!

ஹோண்டா ஆக்டிவா 125 – இது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!

டிஸைன் – இன்ஜினீயரிங்

ஹோண்டா ஆக்டிவா-125 பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருந் தாலும், இது ஒரு ஆக்டிவா பிராண்டு ஸ்கூட்டர் என்ப தை வாடிக்கையாளர்களுக் குக்

காட்டவேண்டும் என்பதால், பாரம்பரிய ஆக்டிவா ஸ்டைலி ங்கை அதிகம் குறைக்காமல் இருக்கிறது ஹோண்டா. பைலட் லேம்ப் கொண்ட ஹாலோஜன் ஹெட் லைட், ஸ்கூட்ட ரின் ஹேண்டில்பாரின் முன் பக் கம் அமைக்கப்பட் டுள்ளது. ஷட்டர் டைப் சாவித் துவார ம் கொடுக்கப்பட்டுள்ள ஆக் டிவா 125-ல், இன்ஸ்ட்ரூமெ ன்ட் பேனல், ஓட்டும்போது எளிதாகப் படிக்கும் வகையில் இருக்கிறது. ஸ்பீ டோ மீட்டர் அன லாக்தான். டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் ஓடோமீட்டர் , ட்ரிப் மீட்டர், ஃப்யூல்கேஜ் போன்றவை கா ட்டப்படுகின்றன. மற்ற ஹோண்டா ஸ்கூட்டர்க ளைப் போலவே ஆக் டிவா 125 மாடலிலும் சுவிட்ச்சுக ள் தரமாக இயங்குகின் றன. கைப்பிடி க்ரிப் சூப்பர்!

ஆனால், ஒரு ஸ்கூட்டருக்கு முக்கியமான அம்சமான ரியர் பிரேக் லாக் கிளாம்ப்-ஐ, இதன் டாப் வேரியன்ட்டில் தராமல் விட்டு விட்டது ஹோண் டா. சீட்டுக்குக் கீழே நல்ல இடவசதி உள்ளது. ஆனால், ஸ்கூட்ட ரின் முன் பக்கமும் கொஞ்ச ம் இட வசதி ஏற்படுத்தித் தந் தி ருக்கலாம். பின் பக்கத்தில் இருந்து பார்க்கும் போது, சா தாரண ஆக்டிவா போலத்தா ன் இருக்கிறது. ஒட்டுமொத் தமாக, ஆக்டிவா 125 ஸ்கூட் டரின் தரமும், கட்டுமானமு ம் நன்றாக இருக்கிறது.

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்று ம் பெர்ஃபாமென்ஸ்

இதுதான் இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 125 சிசி ஸ்கூட்ட ர். என்றாலும், இன்ஜின் சத்தம் என்னவோ பழைய ஆக்டிவாவைப் போலத்தான் இரு க்கிறது. மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரியு டன் பட்டன் ஸ்டார்ட் இருந்தாலும், அவச ரத்துக்காக கிக் லீவரும் கொடுக்கப்பட்டு ள்ளது. ஆக்டிவா 125-ல் இருப்பது 124.9 சிசி, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின். சாதாரண ஆக்டிவா வை விட 0.6 bhp அதிகமாக, அதாவது 8.6 bhp சக்தியை 6,500 ஆர்பிம்-ல் அளிக்கிறது. ஆனால், இந்த சக்தி பழைய ஆக்டிவா வை விட 1,000 ஆர்பிஎம் கூடுதலாகவே வெளிப்படுகிறது. அதிகபட்சமாக 1 kgm டார்க்கை 5,500 ஆர்பிஎம்-ல் அளிக்கிற து. கார்புரேட்டர் மூலம்தான் இன்ஜின் எரி பொருளை எடுத்துக் கொள்கிறது.

ஆக்டிவா 125-ல் விஸ்கஸ் (Viscous) டைப் ஏர் ஃபில்டர் உள்ளது. எல்லா ஸ்கூட்டர்களிலும் உள்ள சிவிடி டிரான்ஸ்மி ஷன்தான் இதிலும். சக்தி அபரிமிதமாக வெளியாகா மல், குறைந்த ஆர்பிஎம் -ல் இருந்தே சீரான, ஸ்மூத் தான பவர் டெலிவரி இரு க்கிறது. குறைந்த ஆர்பி எம்-ல் திராட்டில் ரெஸ்பா ன்ஸ் சிறப்பாக இருப்பதா ல், நகர டிராஃபிக்கில் எளிதாக ஓவர்டேக் செய்து ஓட்ட முடிகிற து. 0-60 கி.மீ வேகத்தை 9.29 விநாடிகளில் அடைகிறது ஆக்டிவா 125. டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. மணிக்கு 80 கி.மீ வேக ங்களில் ஸ்மூத்தாக க்ரூஸ் செய்யவும் முடிகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளு மை

ஆக்டிவா 125-ன் இருக்கை அகலமாக, நீளமாக, அமர்வ தற்கு சொகுசாக இருக்கிறது . ஹேண்டில்பாரை முழுவதுமாக வளைத் தாலும் முழங்காலில் இடிக்கவில்லை. 5 ஸ்போக் அலாய் வீல்கள் பார்க்க உயர்தரமான உணர்வை அளிக்கின்றன. இதுவரை ஆக்டிவா மாடல் களில் எல்லாரும் கேட்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க் ச ஸ்பென்ஷனை 125 மாடலில் பொருத்தியிருக்கிறது ஹோ ண்டா. பின் பக்கம் ஒரு ஷாக் அப்ஸார்பர் இருக்கிறது. மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில், பழைய ஆக்டி வா கொஞ்சம் தூக்கிப் போடு ம். ஆனால், ஆக்டிவா 125 மாடலில் இந்தப் பிரச்னை இல் லை.

பிரேக்ஸ் விஷயத்திலும் சொன் னதைக் கேட்கிறது ஆக்டிவா 125. முன் பக்கம் 190 மீமீ டிஸ்க் பிரேக்கும், பின் பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளன. ஹோ ண்டாவின் கம்பைண்டு பிரேக்கி ங் சிஸ்டம் இதில் உண்டு. மணி க்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் போது, முழுமையாக நிற்க 16.65 மீட்டர் தூரத்தை எடுத்துக்கொ ண்டது. இதன் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர்களிலேயே சிறந்தது எனலாம்.

மைலேஜ்

ஹோண்டா ஆக்டிவா 125, நகரு க்குள் லிட்டருக்கு 44.1 கி.மீ, நெடு ஞ்சாலையில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் க்ரூஸ் செய்தால், லிட் டருக்கு 47.3 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

ஹோண்டா ஆக்டிவா 125, ஒரு நல்ல ஆல்ரவுண்டர். ஒரு சாதார ண ஸ்கூட்டர் வாடிக்கையாளர் எதிர்பா ர்க்கும் சிறந்த பெர்ஃபா மென்ஸும், அதிக மைலேஜும் உத்திரவாதம். கட்டுமானத் தர மும் நன்றாக இருக்கிறது. ஓட்டுதல் மற் றும் கையாளுமையைப் பற்றிச் சொல்ல தேவை இல்லை. இதில் அமர்ந்து ஓட்டினா ல், வேறு ஸ்கூட்டர்களை ஓட்டவே பிடிக் காது. ஹோண்டா ஆக்டிவா 125தான் இப் போது இந்தியாவின் சிறந்த ஸ்கூட்டர்!

இதன் உத்தேச விலை எவ்வ‍ளவு தெரியு மா?

ரூ.63,500- மட்டுமே!

– நன்றி மோட்டார் விகடன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: