Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடல் பருமனை எளிதாக குறைக்க உதவும் "G.M.D"

ஃபிட்னஸ்

உணவின் மூலம் எடை கட்டுப் பாட்டை எட்ட முடியுமா? சாப்பிடா மல் இருந்து பருமனை குறைக்க முடியுமா? காலை உணவை தவிர் ப்பதினால்  தொப்பை குறையுமா?  விரிவாகவும் தெளிவாகவும் விள க்குகிறார் டயட்டீஷியன் ரேவதி ராணி.

எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. எடை குறைக்க நிறைய பணம் செலவு செய்ய வேண்டிய அவசிய மும் இல்லை.  உடலை வருத்துவதாலோ, பணம் செலவழிப்பதா லோ கூடுதல் எடையும் பானை போன்ற

வயிறும் குறைந்து விடாது. உணவுக்கட் டுப்பாடு, உடற்பயிற் சி  – இரண்டும் இருந் தால்தான் எடையை குறைக்க முடி யும்.

பருமனுக்கு என்ன காரணம் என்று அறி யாமலே, மற்றவர்கள் சொல்லைக் கேட்டு என்னென்னவோ செய் கிறார்கள்.

பருமனுக்கு எவ்வளவோ  காரணங்கள் உண்டு. அவற்றில் சில…

1. வெளியே தெரியாத கோளாறாக இருக்கலாம் (உதாரணம்: தைராய்ட்).

2. நீர் உடலாக இருக்கலாம்.

3. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்தி ரையின் பக்கவிளைவாக இருக்கலாம்.

4. உடற்பயிற்சி இல்லாததால் இருக்க லாம்.

முதலில் பருமனுக்குச் சரியான காரண த்தை அறிந்துகொண்டு அதற்கான வழி களை பின்பற்றுவது நல்லது. காரணம் அறியாமல் நம்மை நாமே வருத்தி  உடலை மெலிய பண்ணுவ தில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உடற்பயிற்சி என்றைக்கும் நல்லதே! ‘ஒல்லியாக இருப்பதே அழ கு’ என்று  பெருமைப்படும் காலமிது. கட்டுடலா க இருப்பதோ இன்னும் அழகு. அத்த கைய கட்டுப்பாட்டை அடைவதற்கா ன வழிமுறைகளை அறிவதோடு,  மு றையாக பின்பற்றினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். அளவான உணவு, இடைவேளை விட்ட உணவுமுறை, ஒ ழுங்கான உடற்பயிற்சி  ஆகியவற் றைக் கொண்டு ஆரோக்கிய வாழ் வை மேற்கொள்ளுங்கள்.

எடை குறைக்க உண்ணும் பழக்க வழ க்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது . 

உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டுவாரு ங்கள். தடாலடியாக கடுமையான சோதனை முயற்சிகளில்  இறங் குவது பக்கவிளைவுகளை ஏற்ப டுத்தும். கர்ப்பிணிகள், குழந்தை கள், இளம்பெண்கள், நோயாளிக ள் மருத்துவர் ஆலோசனையின் றி எவ்வித  முறைகளையும் பின் பற்றக்கூடாது.  எடை குறைக்க கண்ட மாத்திரை, மருந்துகளை உண்ணக்கூடாது. ஒரே மாதத் தில் நீங்கள் எதிர்பார்த்த  அளவுக்கு எடை குறையவில்லை என் றாலும், விடாமல் உணவுக்கட்டு ப்பாட்டையும் உடற்பயிற்சியையு ம்  தொடர வேண்டும்.

எந்தஉடற்பயிற்சியாக இருந்தாலு ம் வியர்வை வெளியேறவில்லை யென்றால்,  மேற்கொள்ள வேண் டும். அப்போதுதான் தேவையற்ற அமிலங்கள் வெளியேறி பரும னை குறைக்கும்.  மதுப் பழக்கம் உள்ளவர்கள் அதைத்தவிர்க்க வோ, குறைக்கவோ வே ண்டும். அதிக மது  அதிக பருமனையே வ ழங்கும்.  உங்களைப் போலவே எடை குறைக்க விரும்புபவரின் நட்பைப்பேணுங்கள்… முடிந்தால் நடைப் பயி ற்சியில்  அவர்களை யும் உங்களுடன் பங்குபெறச் செய்யுங்கள்… வாழ்த்துகள்!

பருமனை எளிதாக கு றைக்க உதவும் ஜி.எம். டயட்(General Motors Diet)

முதல் நாள்:

எந்தப் பழங்களும் (வா ழைப்பழம் தவிர்த்து). தர் பூசணி சற்று அதிகமா க…

இரண்டாம் நாள்:

அவித்த, உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு. சமைத்த / சமைக்காத காய்கறிகள் (சாலடுக ள்) எவ்வளவு முடியு மோ அவ்வளவு…

மூன்றாம் நாள்:

பழங்கள் + காய்கறிகள் எவ் வளவு முடியுமோ அவ்வள வு…(தவிர்க்கவேண்டியவை : வாழைப் பழம் மற்றும் உருளைக்கிழங்கு)

நான்காம் நாள்: 

வாழைப் பழங்கள் + டம்ளர் பால் + இரவு வெஜி டபிள் சூப்…

ஐந்தாம் நாள்:

காலை: காய்கறிகள். மதியம்: ஒரு கப் சாதம், ஒரு பெரிய தக்காளி. இரவு: புரதம் நிறைந்த உணவு, ஒரு பெரிய தக்காளி. நாள் முழுது ம்  நிறைய தண்ணீர் குடிப்பது அவ சியம்.

ஆறாம் நாள்: 

காலை: காய்கறிகள். மதியம்: ஒரு கப் சாதம், நிறை ய காய் கறிகள். இரவு: நான்வெஜ் (விரும்பினால்), ஒரு கப் சாதம். 

ஏழாம் நாள்:

நிறைய பழச்சாறு, சமை த்த காய்கறிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு…

எந்த நோயும் இல்லாமலு ம் வேறு பிரச்னைகள் இல் லாமலும் இருந்தால்தான் இந்த 7நாள் டயட் எடுக்க லாம். ஒவ்வொரு நாளு ம் மூன்று லிட்டர்  தண்ணீர் குடிப்பது அவசியம்! இந்த முறையில் எடை குறைய மிக எளிய காரணம்… ஒவ்வொரு நாளும் உணவு மூலம் நமக்குத் தேவைப் படுவது 2  ஆயிரம் கலோரி. இந்த முறைமூலம் தினம் 1200கலோரி மட்டுமே கிடைப்பதால், ஒரே வா ரத்தில் 5கிலோ எடை குறைகிற து.  இதனைத்தொடர்ந்து கடைப் பிடித்தால் அனீமியா ஏ ற்படும். முதல் முறை எடை குறைக்கவு ம், அத ன்பின் உடற்பயிற் சிமூலம் தக்கவைக்கவும் மட்டுமே இது  பயன் படும்.

உணவுப்பழக்கம்…

முட்டைக்கோஸ், குடைமிளகா ய், பாகற்காய், கேரட், முருங்கை க்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடிச் சேர்த்து க்கொள்வது எடை  குறைக்க உதவும்.

தொலைக்காட்சி பார்த்துக்கொ ண்டே உண்பது, மொபைலில் பே சிக்கொண்டே உண்பது, புத்தகங்கள் வாசித்துக்கொண்டே உண்ப து போன்ற பழக்கங்களை  நிறுத்துங்கள்.

கிழங்கு வகை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவு கள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள், ஐஸ்கிரீம், நெய், சீஸ், வெண்ணெய், சர்க்கரை யில்  செய்த பதார்த்தங்களைத் தவிர்த்திடுங்கள். 3 வேளை அ திகம் உண்பதற்குப் பதில் 6 வே ளைகுறைவாக உண்ணுங்கள்.

சாப்பிடும் முன் 200 மி.லி. தண்ணீர் உண்டபின் உங்கள் உணவை ஆரம்பியுங்கள்.

காலை உணவுக்குமுன் தின மும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக் கக்கூடிய விஷயங்களை  வெளியேற்றும்.

ஒருநாளைக்கு 10 கப் தண் ணீர் அருந்துங்கள். காலை உணவைத் தவிர்க்காதீர்க ள். காலையில் அதிகம் உண்டு நடப்பது, அன்றைய நாள் முழுவதும்  பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

இரவில் வயிறு முட்ட உண் ணாதீர்கள். அரை வயிறு உ ணவும், கால் வயிறு தண்ணீ ரும், கால் வயிறு வெற்றிட மாகவும் இருக்க ட்டும்.

உணவு உண்டஉடனே உறங் கக்கூடாது. ஒருமணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங் கள். மா, வாழை, பலா, சப்போட்டா, பேரீச்சை, சீத்தா ஆகிய  பழ ங்களைத் தவிர்த்து விடுங்கள்.

உண்ட பின் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகிவிடும்… எடை கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரை மணி நேரமாவது  நடக்க வேண்டும் (பசிப்பதுபோல உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப்பொரு ட்கள் ஜீரணமாகிவிட்டது என்று பொருள்… எடை கூடாது).

காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக்கூடாது. அவற்றி லுள்ள கஃபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத் தைத் தாமதமாக்குகிறது.  அதற் குப் பதில் ஹெர்பல் டீ, லெமன் டீ, பழச்சாறு அருந்தலாம். நார்ச்ச த்து, புரதச்சத்து அதிகம் உட் கொ ள்ள வேண்டும்.

பச்சைக் காய்கறி சாலட்கள், பழ சாலட்கள் நிறைய சேர்த்துக்கொ ள்ளுங்கள். பொரித்த உணவுக ளைவிட ஆவியில் வேக வை த்த உணவுகள்  ஆரோக்கியத்துக்கு   உகந்தவை. இஞ்சிச் சாறு, இஞ்சி ரசம் என உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளு ங்கள். சமையல் செய்ய நான்ஸ்டிக்  பேன் பயன்படுத் துங்கள்… குறைந்த எண்ணெய் செலவாகும். வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் குக்கரில் சாதம் செய்து உண்ணா மல், சாதம் செய்து  கஞ்சியை வடி த்து ச்செய்யும் அந்தக்கால முறை யைப் பின்பற்றலாம்.

உடற்பயிற்சி…

சுறுசுறுப்பாக இருப்பது எடை கு றைக்க உதவும். காலையில் 45 நிமிடங்கள், மாலையில் 45 நிமி டங்கள் கண்டிப்பாக நடைப்பயிற் சி மேற்கொள்ளவேண்டும். புதி தாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவா கத்தான் அதிகமாக்க  வேண்டும். ந டைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் , மிதிவண்டி ஓட்டுதல் ஆகியனஎடை குறைப்புக்கு உதவும். ஆரம்ப நிலை யில் மெதுவாகவே உடற்பயிற்சி யை த் தொடங்க வேண்டும்.

தொப்பை ஓவரா இருக்கா? குறை க்க வழி இருக்கு!

எடைகுறைக்கசரியானவழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெ னில் காலை உணவுதான் அன்றைய தினத்துக்கு ஏற்ற எனர்ஜி யை தருகிறது.  அதைத்தவிர்த்தால், உடல் நலம்தான் பாதிக்கப் படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இரு க்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே,  மறக்காமல் காலை வேளையில் ஆரோக் கியமானவற்றை சாப்பிடவேண்டும். எடை குறைக்க தேன் ஒரு சிறந்த மருத் துவப் பொருள். காலையில்  எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச் சைச்சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் குடிக்க லாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: