Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரண்யா மோகனைப் பற்றி பிரஸ்மீட்டில் போட்டுடைத்த‍ இயக்குநர் செல்வபாரதி!

நடிகை சரண்யா மோகனைப் பற்றி பிரஸ்மீட்டில் போட்டுடைத்த‍ இயக்குநர் செல்வபாரதி!

1990களில் நடிகர் விஜயர், நடிகை ஷாலினி நடித்து, பாசில் இயக்கத்தில் காத லுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் நடிகை ஷாலினியின் அண்ண‍ன் குழந்தைகளில் ஒருவராக சரண்யா மோகன் நடித் தார். பின் பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்-நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக

டித்து தனது சிறப்பான நடிப்பாற் றலை வெளிப்படுத்தினார் நடிகை சரண்யா மோகன். அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, ‘வெண் ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதி ரை’ உள்பட சிற்சில திரைப்படங்களி ல் நடித்துள்ளார். தற்போது செல்வ பாரதி இயக்கியுள்ள, ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ என்ற தி ரைப்படத்தில் ‘சாட்டை’ யுவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரை ப்படத்தை செல்வபாரதியே தயாரிப் பதால் பெரிய அளவில் சம்பளமும் கேட்காத சரண்யா மோகன், படப் பிடிப்பு தளத்தில் தனக்கு எந்தவித சிறப்பு கவனிப்புகளையும் எதிர்பார் க்கவில்லையாம்.யூனிட் நபர்கள் சாப்பிடும் உணவுகளையே சாப்பிட்டாராம்.

முக்கியமாக, கத்திரி வெயில் கொளுத்தும் இடங்களில் படப்பிடிப்பு நடந்தபோதும் கேர வன் இருந்தால்தான் ஸ்பாட்டுக்கு வருவேன் எனறு சொல்லாமல், தனது உதவியாளரை குடைபிடித்துக்கொள்ளச்சொல்லி நடித்திரு க்கிறார். மதிய இடைவேளைகளில்கூட ஓய் வு என்று மேக்கப் அறையில் சென்று குட்டித் தூக்கம் போடாமல், ஸ்பாட்டிலேயே நின்று நடித்துக்கொடுத்திருக்கிறார். சரண்யா மோகனி ன் இந்த அருமை பெருமைகளைப்பற்றி அப்பட த்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார் செல்வ பாரதி. அதுமட்டுமா? எந்த நேரமும் தனது அருகில் யார் வந்தாலும் உடனே அவர்களிடமும் சரண்யா மோகன் புகழ் பாட ஆரம்பித்துவிடுகிறாராம். இதைக்கேட்டவர்கள் என்ன‍ இது! ஆள் இப்ப‍டி மாறிவிட்டாரே! என்று அவர் காதுபட கமெண் டும் அடித்துள்ளார்களாம்! ஆனால் இவரோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சரண் யா மோகனின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: