Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்! – (அழகுக்கு அழகு சேர்க்கும் இவற்றை இன்றைய பெண்கள் மறந்தது)

பாரம்பரியமான அழகு குறிப்புக்கள்!

சீயக்காய் தேய்த்துக் குளிப்பது, விளக்கெண்ணெயைக் கண்களில் விட்டுக் கொண்டு தூங்குவது, மஞ்ச ள் பூசுவது போன்ற பாரம்பரியமான பல அழகு-ஆரோக்கியப் பழக்கங்க ள் இன்று இல்லை. காணாமல் போ ன அவற்றுடன் சேர்ந்து நாம் தொ லைத்தது நம் அழகையும் இளமை யையும்தான். அந்தக் காலத்தில் பின் பற்றிய எந்த விஷயமுமே அர்த்த மற்றவையல்ல என்பதைக் காலம் கடந்த பிறகுதான் உணர்கி றோம். ஆனாலும்,

இதுவும் தாமதமில்லை… பார ம்பரிய அழகுக் குறிப்புகளைப் பின்பற்றும் உங்கள் முயற்சி யை இன்றிலிருந்தே தொடங் குங்கள்!

எல்லோருக்கும் பயன்படக் கூடிய அத்தகைய அழகுக் குறி ப்புகள் சிலவற்றை விளக்குகி றார் அழகியல் ஆலோசகர் ராஜம் முரளி.

அந்தக் காலத்தில் காலை யில் எழுந்ததுமே, கொல் லைப் பக்கத்துக்குப் போய், அங்குள்ள புல் தரையில் கால்களை நன்கு தேய்த் துக் கழுவுவார்கள். அந்தப் புல்லின் சாறு பட்டால், கால்கள் சுத்தமாவதுடன், வெடிப்புகள் வராமல் தடுக்கும். இன்றோ கால் கழுவுகிற பழக்க மே இல்லை. அதனால்தான் சிறுவயதி லேயே பாதங்கள் வறண்டு, வெடித்துக் காணப்படுகின்றன.

உங்கள் வீட்டுக் குளியலறையில் கர கரப்பான கல் ஒன்றைப் பதி த்துக் கொ ள்ளுங்கள். குளிக்கும்போதும், ஒவ் வொரு முறை கால்களைக் கழுவும் போதும், அந்தக் கல்லில் தேய்த்துக் கழுவலாம். பாதங்கள் பட்டுபோல இருக்க வேண்டும் என விரும்பினா ல், அந்தக் கல்லை நன்கு சுத்தப்படுத்தி விட்டு, அதிலேயே நல்ல மஞ்சளை இ ழைத்துவிட்டு, அதன் மேல் கால்களை த் தேய்த்துக் கழுவலாம்.

ஆரோக்கியத்துக்காக நிறைய பேர் தினமுமோ, அடிக்கடியோ இளநீர் குடிக்கிறார்கள். 30 ரூபாய் கொடுத்து வாங்கும் இளநீரில் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, உள்ளே இருக் கும் வழுக்கையை கஷ்டப் பட்டு சாப்பிடுவது அல்லது தூக்கி எறிவதும்தான் நடக் கிறது. அதற்குப் பதில் அந்த வழுக்கையை அரைத்து உ டல் முழுக்கத் தேய்த்துக் கு ளித்தால் சருமம் பட்டு போல மென்மையா கும்.

தோட்டம் வைத்துப் பராமரிக்கி ற அளவுக்கு இன்று யாருக்கும் இட வசதியோ, நேரமோ இல் லை. ஆனாலும், சின்னச் சின்ன தொட்டிகளில் திருநீற்றுப் பச்சி லை, துளசி, நித்ய கல்யாணி போன்ற வற்றை வைத்துப் பரா மரிக்கலாம். இவற்றுக்கு மருத் துவக் குணங்கள் உண்டு. துளசி மற்றும் நித்ய கல்யாணியிலிரு ந்து வீசும் காற்றானது நம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

சாம்பிராணி போடுவது இன்று சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்ட து. தரமான சாம்பிராணியை வாங் கிப் பொடித்து, அத்துடன் சந்தனக் கட்டையின் சீவல் (கிடைத்தால்) சேர்த்து தணலில் போட்டுப் புகை யவிட்டு, ஒரு மூங்கில் கூடையா ல் கவிழ்த்து விடவும். 200 மி.லி. நல்லெண்ணெயில் பாதியை த லைக்கும், மீதியில் மஞ்சள் குழை த்து உடல் முழுவதிலும் தேய்த்து ஊறியதும், வெந்நீரில் குளிக்கவு ம். புகை வருகிற கூடையின் மேல் தலைமுடியை விரித்தபடி காட்டவு ம். சாம்பிராணிப் புகையானது கழு த்திலும் மண் டையிலும் உள்ள நீரை எடுக்கும். அந்த வாசனை நல்ல, ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.

ந்தக் காலத்தில் எல்லாம் சருமத்தின் ஈரப்ப தத்தைத் தக்க வைக்கவென சிறப்புப் பொருட் கள் ஏது? பால் காய்ச்சியதும் படிகிற ஏட்டில், சிறிது புளிப்பான தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதில் சிறிது கடலை மாவையும் சேர்த்துக் கு ழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து விடுவார்கள். இது சருமம் வறண்டு போவதை த் தடுத்து, சருமச் சுருக்கங்களையும் தள்ளிப் போடும்.

வெண்ணெய், தயிர், பாலாடை, சிறிது கஸ் தூரி மஞ்சள் ஆகியவற்றுடன் சில துளிகள் பாதாம் எண்ணெ யோ, ஆலிவ் எண்ணெயோ கலந்து உடல் முழுக்கத் தடவி, சிறிது நேரம் ஊறியதும் குளிக்கலாம்.

அரப்புத்தூள் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற் குப் பச்சையாக இருக்கும். ஒரு பங் கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீயக்கா ய் தூள் கலந்து தலையில் எண்ணெ ய் வைத்தோ, வைக்காமலோ, தலை க்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென் மையாகும். இன்று யாரும் கஞ்சி வடித்தெல்லாம் சாதம் வைப்ப தில்லை. தலைக்குக் குளிக்கிற நாட் களில் மட்டும், கைப்பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, நிறைய தண்ணீர் விட்டு, வெந்ததும் கஞ்சியை வடித்து, தலைக்குத் தேய் த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாவதுடன் வளர்ச்சியும் தூண் டப்படும்.

விளக்கெண்ணெயில் திரி போட் டு விளக்கேற்றவும். சந்தனத்தூ ளைக்கரைத்து ஒருதட்டில் தட வி, அதை விளக்கின் மேல் கவி ழ்த்துப் போட்டு, புகை அதில் படி யும்படி வைக்கவும். அதில் படிகி ற கருமையான படிவத்துடன், சிறிது விளக்கெண்ணெய் கலந் து கண்களுக்கு மையாக உப யோகிக்கலாம். இந்தக் கண்மை யில் ஒவ்வாமை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்களுக்கும் குளிர்ச்சி. கண்கள் பளபளப்பாகும்.

வெற்றிலைப்பாக்கு போடுகிற பழக்கமும் இன்று மறைந்து வருகிறது. அந்தப் பழக்கம் இருந்தவர்க ளுக்கு அதிலுள்ள கால்சியம் சத்து காரணமாக மூ ட்டுவலிகள் வராமலிருந்தது. வெற்றிலை போடுகி ற பழக்கமுள்ள தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் கால் சியம் குறைபாடு வராது. அஜீரணத்துக்கும் நல்லது… அழகுக்கும் உதவும்.

– குங்குமம் தோழி அதிதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: