Wednesday, May 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"4 வகை அரவாணிகளும்"! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்! – மருத்துவ/ அறிவியல் அலசல்

நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் – மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல்

அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய,

தைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்க ள் அரவாணிகள். பிச்சை எடுப்பதும், பாலியல் தொ ழிலும்தான் அவர்களது கடைசிப் புகலிடமாகிறது.

அவ்வளவாக தேர்ச்சி பெ றாத சாதாரண டாக்டர்க ளிடம் அறுவை சிகிச்சை செய்து தங்கள் ஆணுறுப்பை அகற்றிக்கொள்ளும் அரவாணிகளி ல் பலர், வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும் உண் டு.

சட்டம் இவர்கள் விஷயத்தில் இன் னமும் குழப்பமாகவே இருக்கிறது . தேர்தல் கமிஷனே அனுமதித்தும் பல மாநிலங்களில் இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ரேஷன் கார் டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றி லும் ஆண், பெண் என இருபாலின ங்கள் மட்டுமே இருப்பதுதான் பிரச் னை. மூன்றாவது வகையை மனத ளவில்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைதான்!

ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல அரவாணிகளை யும் சமூகம் நடத்த வேண்டும். அறி வியல் ரீதியாகப் பார்த்தால் அவர்க ள் அப்படித்தான்… பாலியல் ஊன முற்றவர்கள்!

மனிதசமுதாயம் இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்று ஆண்… இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாக வும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதே போல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமான அடை யாளங்களைக் கொண்டவர்கள், மூ ன்றாவது விதமான தோற்றம் கொ ண்டவர்கள். இவர்களை அறிவியல் பூர்வமாக “ட்ரான்ஸ்ஜெண்டர்” (Transgender) என்கிறார்கள். இத ற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்கு ரகங்களாகப் பிரி க்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியா ன வார்த்தைகள் இல்லை. “அரவா ணி” கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் கொள்ள லாம். ஆனால், அதுகூட அறிவியல் ரீதி யில் எந்த அளவுக்குச் சரி என்று சொல் ல முடியாது. காரணம்… அரவாணி என் பதற்கு சரியான பொருள் என்ன என்பது இங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அ தற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப் பட்டதாகவும் தெரி யவில்லை.

சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மே லை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்கு ரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதல் ரகத்தினர்,

“டிரான்வெஸ்ட்” என்று அழைக்கப்படுகி றார்கள். இவர்களின் செயல்பாடுகள் “டிரான்ஸ்வெஸ்டிஸம்” எனப்படும். இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண் டால்தான் செக்ஸ் உணர்வு எழும். மனைவியின் புடவையைக் கட்டினால்தான் “மூட்” வரும். செ க்ஸுக்கு முன்னதாகக் கட்டாய ம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப் பட ஆரம்பிப்பார். இதுதவிர வே றெந்த குறையும் இருக்காது. இ ந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, “நான் இயல்பான ஆண்” என்கிற உணர்வு இவர்களுக்கு இருக்கு ம். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடு கொண்ட பெண்களுக்கு அப்படியே உல் டாவாக ஆண் களின் உடைமீது ஆசை வரும். அது மட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியா சம் இருக்கும்.

இரண்டாவது ரகத்தினர்

“டிரான்ஸ் செக்ஸுவல்கள்”. இவர்களது உடலும், உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள். அதற்கான அடையா ளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்பு எல்லாம் இருக்கும். ஆனால், மனோ ரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள். “நான் பிறக்கும்போ தே ஒரு பெண்தான்! ஆனால், கடவு ள் ஏதோ ஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில் போட்டு விட்டார்” என நினைப்பார்கள். தன் னை அமுக்கிக் கொண்டிருக்கும் இ ந்த ஆண் உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பி ன் மீது வெறுப்பு வரும். பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆ ணாகப் பார்த்தாலும் “நான் பெண்தான்” என்ற உணர்வு இவர்களு க்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்கு சக ஆண்களைப் பார்த் தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோ தர பாவத்தில் பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப் பை அறுவை சிகிச்சை மூல ம் அகற்றிக்கொண்டு பெண் ணாக முயற்சிப்பார்கள். இ தேபோல பெண்ணாகப் பிற ந்தவர்கள், ஆணாகத் துடிப் பார்கள். மார்பகங்களை அக ற்றிவிட நினைப்பார்கள். மி குந்த சிரமப்பட்டு ஆண் குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்… ஆணாகப் பிறந்து, பெண் ணாகத் துடிப்பவர்கள்தா ன் அதிகளவில் அடையா ளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வ தன் மூலம் இவர்கள் முழு மையான பெண்ணாக வோ… ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.

மூன்றாவது ரகத்தினர்,

“இன்டர்செக்ஸ்” (நம்மூரில் “அரவாணிகள் என்று அழை க்கப்ப டுபவர்களை இந்த ரக த்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய் ச்சிகள் எதுவும் இங்கே நடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப் புகள் பரிபூரணமாக வளர்ச்சி அடைந் திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாக நினைக்கப்ப ட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும். முக்கியமாக விதை இருக்காது.

பெண்ணாக நினைக்கப்பட்டவர் களுக்கு… பெண் குறி முழுமை யாக இருக்காது. பக்கத்தில் ஆ ண்குறி போன்ற முழுமை பெறா த அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.

இந்த ரகத்தினர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக வே… அல்லது பெண்ணா கவோ மாறிவிட்டதாக சொல் வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக் ஸ் உணர்வு என்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடை க்காது. கர்ப்பப்பை என்பது இல்லாததால் குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடி யாது.

நான்காவது ரகத்தினர்

“யூனக்” என்று அழைக்கப் படுவார்கள். ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு. விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்து விடுவார்கள். இவர்கள் முழுமை யான ஆண்கள்தான் என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெ ட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகி ன்றன.

ஒன்று… அந்தக் காலத்தில் அந்தப் புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறி நீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது கார ணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத விஷயம் மட் டுமில்லை… சட்ட விரோத மும்கூட. மாட்டிக்கொண் டால் தண்டனைகிடைக்கு ம். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்… குரல் வளம். பிற ந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதை எட் டும்போதுதான் மாற்றம் அடை யும். அதாவது ஆணாக இருந்தா ல் கரடு முரடாக மாறும்.

இப்படி மாறாமல் மென்மையா ன குரலே வேண்டும் என்பதற் காக விதை மற்றும் ஆண் குறி யை வெட்டிக் கொள்வார்கள். அதாவது, ஹார்மோன் சுரந்தா ல்தான் பருவத்தை எட்ட முடியும். குறியை அகற்றிவிட்டால், ஹா ர்மோன் சுரப்பது குறைந்து… குரல் மாறாமல் அப்படியே இருக்கு ம்.

இப்படி வெட்டிக்கொள் வதன் மூலம் இவர்கள் பெண்ணாக முடி யாது என்பது முக்கியமான விஷயம்! சரி.. சராசரி ஆணாகவோ… பெண் ணாகவோ பிறந்தவர் கள்… “டிரான்ஸ் வெஸ் ட்” மற்றும் “டிரான்ஸ் செக்ஸுவல்கள்” ஆகி ய இரண்டு ரகங்களாக மாறக் காரணம்?

டிரான்வெஸ்ட் மற்றும் டிரான்ஸ் செக்ஸுவல்கள் என்று இரண்டு ரகங்களாக, மனிதர்க ளில் சிலர் மாறுவதற்கு உளவியல் நிபுணர்கள் பல காரணங்க ளைச் சொல்கிறார்கள். குழந்தையி லிருந்து வளர்க்கப்பட்ட முறையில் தப்பு இரு ப்பதுதான் முக்கிய காரண மாகப் பல ருக்கும்படுகிறது. சின்ன வயசிலிருந்து பையன் அம்மாவிடம் நெருக்கமாகப் பழகி வளர்வான். அவனுக்கு ரோல்மாடலே அம்மா தான்! கோலம் போடுவது, சமைப்ப து என அம்மாவை மாதிரியே செய்ய ஆரம்பித் து, கடைசியில் தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்து விடுகி றான் என்பது ஒரு தியரி.

இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தை வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். ஆனால், வரிசை யாக ஆண்குழந்தைகள் பிறக்கும் . இதில் ஏதாவது ஒரு குழந்தை யைப் பெண் மாதிரி உடை போட் டு, சடை பின்னி, பொட்டு வைத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கப் படும் குழந்தை, தன்னைப் பெண் என்றே கற்பனை செய்து கொள்கி றது… அதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்பது இன்னொரு தியரி.

இதைத் தவிர, சின்ன வயதில் செக்ஸ் சித்ரவதையை அனுபவிப் பது, செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளோடு வளர்வது, ஹோமோசெக்ஸ் ஆசையை அடக்கி வைத்துத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது… இப்படி பல கா ரணங்களும் சொல்லப்படு கிறது. டிரா ன்ஸ்செக்ஸுவல்களில் பலர் சீரியஸா க ஆபரேஷன் செய்து, தங்களை மாற் றிக்கொள்ள விரும்புகிறார்கள். வட இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குடு ம்பத்தைச் சேர்ந்த அபர்ணா, நாற்பது வயதில் ஆபரேஷன் செய்து அஜய் என்ற பெயரோடு ஆணாக மாறிய பிறகு, இந்த ஆபரேஷன் பற்றி அதிகம் செய்திகள் வருகின்றன.

ஒருகாலத்தில் உலகம் முழுக்க இந்த மாதிரி பாலினம் மாற்றும் ஆபரேஷன்கள் சட்ட விரோதமா கக் கருதப்பட்டது. ஆனால், ரகசி யமாக டாக்டர்கள் இதைச் செய்த படிதான் இருந்தார்கள். இதை பாப் புலராக்கியது, ஜார்ஜ் ஜார்ஜென்ச ன் சீனியர் என்ற அமெரிக்க ராணு வ வீரர். சின்ன வயதிலிருந்தே இவருக்குத் “தான் ஒரு பெண்” என்ற உணர்வு இருந்தது. இருந்தா லும் இவர் தேர்ந்தெடுத்தது, ராணுவ வேலையை! ஒன்ற ரை வருஷம் ராணுவத்தில் வேலை பார்த்த ஜார்ஜ், உடம்பு சரியில்லாததால் ராஜினாமா செய்தார். அப்போது டென்மார்க்கில் மட் டும் அரசு அனுமதியோடு இந்த ரக ஆப ரேஷன்கள் செய்யப்பட்ட ன. தனது இருபத்தாறாவது வயதில் டென்மா ர்க் போன ஜார்ஜ், ஆபரேஷன் செய் து கொண்டு கிறிஸ்டி ஜார்சென் சன் என்ற பெயரோடு பெண் தோற் றத்தில் திரும்பி வந்தார்.

அது 1952-ம் வருஷம். இவரது ஆபரேஷன் பற்றி “நியூயார்க் டெய்லி நியூஸ்” பத்திரிகை முதல் பக்க த்தில் செய்தி வெளியிட்டது. “முன்னா ள் ராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்” என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம் முழுக்கப் பற்றிக்கொ ண்டது. கிறிஸ்டி அழகாக வேறு இருந் தார்… அதனால் ஒரு பத்திரிகை விடாம ல் அவரது போட்டோ வந்தது.

இந்த பாப்புலாரிட்டியை அவர் புத்திசா லித் தனமாகப் பயன்படுத்திக் கொண் டார். கல்லூரிகள், சமூக சேவை அமை ப்புகளின் கூட்டங்கள் என பல இடங்க ளில் போய் அரவாணிகளுக்கு ஆதரவா கப் பேசினார் (ஒரே ஒரு தடவை டி.வி. “டாக் ஷோ” ஒன்றில் மட்டும் கிறிஸ்டி அவமானப்பட நேர்ந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர், தடாலடியாக ஒரு கேள்வி கேட்டார். ஆபரேஷனுக்கு முன் ஜார்ஜாக இருந் தபோது அவர் ஒரு பெண் ணைத் திரு மணம் செய்து கொண்டிருந்தார். “கிறி ஸ்டி என்ற பெண்ணாக மாறியபிறகு உங்கள் மனைவியுடன் எப்படி ரொமா ன்ஸ் செய்கிறீர்கள்?” என கேள்வி வந் தபோது, அவர் திகைத்துப் போனார். ஒன்றும் சொல்ல தெரியாமல் அவமான த்தோடு வெளிநடப்பு செய்தார்).

மேடைகளில் பாடுவது, இரவு விடுதிக ளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நட த்துவது என சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த கிறிஸ்டியின் கதை, ஹாலிவு ட் படமாகவும் வந்து நன்றாக ஓடியது.

ஆனால், எல்லோருக்கும் கிறிஸ்டி மாதிரி அமைந்து விடுவதில் லை. அமெரிக்கரான ரீனி ரிச்சர்ட்சன் ஒரு கண் டாக்டர். ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற பெயரோடு ஆணாகப் பிறந்தவர். கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு பாலின மாற்று ஆபரேஷன் செய் துகொண்டு பெண்ணாக மாறினார். டென்னிஸ் விளையாட்டில் அவரு க்கு உயிர். பெண்ணாக மாறிய பிற கு அமெரிக்க ஓபன் பெண்கள் பிரி வில் அவர் விளையாடப்போனபோ து தடுத்து விட்டார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டுத் தன் உரிமை யை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு விளையாட வந்தார் அவர். ஒரு தடவை வெற்றியும் பெற்றார். ஆனால், தன் வாழ்க்கையின் கடை சி நாட்களில் ஒரு டி.வி. பேட்டியில், “ஆபரேஷன் செய்துகொண்டு பெண் ணாக மாறியதற்கு இப்போது வருத்தப் படுகிறேன்” என மனம் நொந்து சொ ன்னார்.

சமூகம் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ளாது. ஆப ரேஷன் செய்து தனது பாலின அடையா ளத்தை மாற்றிக்கொண்டு, சமுதாயத்தி ன் கேலிப் பார்வைகளை சகித்துக்கொ ண்டு வாழ, உறுதியான மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாத பலர், தற்கொ லை செய்துகொண்டு இறந்து போகிறா ர்கள். சிலர் அனுபவமற்ற டாக்டர்களி டம் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இதில் தப்பு நடந்து இற ந்துபோகிறவர்கள் நிறைய பேர்.

இந்த ஆபரேஷனுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் உளவியல் பரிசோ தனை செய்வார்கள். ஆபரே ஷனுக்குப் பிறகு அவர்களா ல் சமுதாயத்தில் வாழமுடி யுமா என்பதை அறிய இந்த சோதனை. இதன்பிறகு அவ ர்கள் இதற்கு சட்டப்படி கோ ர்ட் அனுமதி வாங்க வேண் டும். இதைப் பெற்ற பிறகே ஆபரேஷன் செய்யலாம். இ து ஒருநாளில் செய்து முடிக் கிற ஆபரேஷன் இல்லை.

ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்பும் ஒருவருக்கு, பெண் களின் ஹார்மோ ன்களை செலுத்து வார்கள். இதுதவிர முகத்தில் மீசை, தாடி ஆகியவற்றை அகற்ற லேசர் சிகிச் சை தரப்படும். இந்த சிகிச்சை தரப்படும் இரண்டு ஆண்டுகளும் அந்த ஆண், பெண்களின் உடையை அணி ய வேண்டும். அரைகுறையாக முகத்தில் இருக்கும் தாடி, மீசை யோடு பெண்களின் உடை அணிந்து பொது இடங்களுக்குப் போ கிறபோது, மற்றவர்களது விசித் திரமான பார்வைகளைத் தாங்கி க்கொள்ள வேண்டும்.

இதன்பிறகே பிரதான ஆபரேஷ ன்! பிளாஸ்டிக் சர்ஜன், உளவிய ல் நிபுணர் அல்லது செக்ஸாலஜி நிபுணர், ஹார்மோன் ஸ்பெஷ லிஸ்ட், சிறுநீரகவியல் நிபுணர் இப்படி ஒரு குழுவே சேர்ந்து ஆப ரேஷன் செய்யும். ஆபரேஷனுக் குப் பிறகும் நிரந்தரமாக ஹார் மோன் மருந்துகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை இப்படி ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு திரும்பவும் பாலினம் மாற முடியாது. அது மட்டுமில்லை… இப்படி ஆபரேஷன் மூலம் முழுமை பெற்ற பெண்ணாகவோ, ஆ ணாகவோ ஒருவர் மாறிவிட முடியாது. ஆண், பெண்ணா க மாறும்போது வெளிப்புற தோற்றங்களில்தான் மாற்ற ம் நிகழும். அவர்களுக்குக் கருப்பை கிடையாது என்ப தால், குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. இதே நிலைதான் பெண்ணாக இரு ந்து ஆணாக மாறுபவர்களுக்கும். சிகிச்சை முறையும் அதே போ லத்தான். இருந்தாலும் விதை, விந்து தயாரிப்பு இல்லாததால் இவர்க ளால் தந்தையாக முடி யாது.

ஒட்டுமொத்தமாக நாம் ஒரு விஷயத்தை உண ரவேண்டும்… அரவா ணிகளாக இருப்பவர்க ளைசமூகம் கேலிப்பார் வையோடுதான் பார்த் துக் கொண்டிருக்கிற து. அவர்களும் மனிதர்கள்தான். இயற் கைதான் அவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. சக மனிதர்களான நாம் செயற் கையாகவேறு தண்டனைகள் கொடுத்துத் துன்புறுத்தாமல் இரு க்க வேண்டும்.

– பா லி ய ல்   ம ரு த் து வ ர்   நா ரா ய ண   ரெ ட் டி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: