Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தடை சாதனங்கள் கடந்துவந்த (சுவாரசியமான) அரிய வரலாறு!

கருத்தடை சாதனங்களும் குடும்ப கட்டுப்பாடும் கடந்துவந்த (சுவாரசியமான) அரிய வரலாற்றுப் பாதை!

நாம் இருவர் நமக்கு இருவர்” என குடும் பக் கட்டுப் பாடு பிரசாரம் செய்துவந்த அரசு இப்போது, “ஒன்று பெற்றால் ஒளி மயம்” என சொல்லி வருகிறது. “நாமே இருவர், நமக்கு எதற்கு ஒருவர்?” என அரசாங்கம் கேள்வி கேட்கும் காலம் சீக்கிரமே வரக்கூடும்.

நாகரிகம் கற்ற காலத்திலிருந்தே குடும் பக் கட்டுப்பாடு குறித்த அக்கறை மக்க ளுக்கு இருந்து வந்திருக்கிறது. விதம் விதமான தடுப்பு முறைகளைப் பல நாடு களில் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக் கு முன்புவரை பலவித உபகரணங்களை மக்கள் பயன்படுத்தின ர். ஆனால்,

இவை நூறு சதவிகித ம் நம்பகமானவை எ ன்று சொல்ல முடியா து. இவற்றை மாட்டிக் கொண்டு உறவு கொ ண்டும்கூட பல பெண் கள் கர்ப்பமாகி, குழந் தை பெற்றனர்.

1960–ம் ஆண்டுகளில் கருத்தடை மாத்திரையும், காப்பர் “டி” போ ன்ற கருத்தடை வளையங்களும் அறிமுகமான பிறகுதான், குடும் பக் கட்டுப்பாடு மகத்தான முன்னேற்றம் கண்டது. பெண்களும் கர்ப்பம் பற்றிய பயத் தை உதறித்தள்ளிவிட்டுத் தைரியமாக இரு க்க முடிந்தது. குறிப்பாக, நடுத் தர வர்க்கத் தினரின் செக்ஸ் செய ல்பாட்டில் பெரிய மாற்றம் வந்தது. அதேசமயம், “இந்தக் கரு த்தடை சாதனங்கள் மக்களைக் கெடுக்கு ம். கள்ளத்தனமான உறவுகளைத் தேடுகிற வர்களின் எண் ணிக்கை இதனால் அதிகமாகும் ” என கலாசார பாதுகாவலர்கள் ஒருபக்கம் எதிர்ப்பு தெரிவித்தபடிதான் இருந்த னர்.

பழங்காலத்திலிருந்து இந்த நவீன யுக ம் வரை கர்ப்பத்தைத் தவிர்க்கும் பொ றுப்பு பெண்களின் தலையில்தான் வி ழுகிறது. இப்போதும்கூட அரசாங்கத்தி ன் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெண் களை மையப்படுத்தியே இருக்கிறது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்குதான் அதிகமாகக் கருத்தடை ஆபரேஷன்செய்கிறார்கள். ஆண்களுக்கு செய்கிற “வாசக்டமி” ஆபரேஷன் ரொம்ப சிம்பிளானது. ஆனால், செய்து கொள்கிற வர்கள் குறைவு .

Cleopatra Costume

முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட கருத்தடை மருந்து, முதலை சாணம் தான். கி.மு. 1800-ம் ஆண்டு இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்தவர், அழகி கிளியோபாட்ரா. முதலை சாணத்தை காய வைத்துப் பொடி யாக்கி, அத்துடன் சமையல் சோடா மாவு, தேன் ஆகிய இரண்டையும் கலந்து நன்றாகக் குழை த்து பசை மாதிரி ஆக்கி, செக்ஸுக்கு முன்னால் உபயோகிப்பாராம் கிளியோ பாட்ரா. உறவின்போது விந்தணுக்கள் உள்ளே நுழைந்ததும், அவற்றின் வேக த்தை இந்த மருந்து தடால டியாகக் கு றைத்து, எல்லா வற்றையும் கொன்று விடுமாம். கி.மு. நான்காம் நூற்றாண் டில் வாழ்ந்த அரிஸ்டாட்டில், “ஆலிவ் ஆயிலையும், தேவதாரு மர எண்ணெ யையும் கலந்து, செக்ஸுக்கு முன்னா ல் உபயோகித்தால் கர்ப்பம் ஆகாது” என எழுதி வைத்திருக்கிறார். கி.பி. இரண் டாம் நூற்றாண்டில் கி ரேக்க நாட்டில் வாழ்ந்த சொரானஸ் என்ற மகப்பேறு நிபுணர் கர்ப்பத்தைத் தடுக்க ஒரு டிப்ஸ் கொடுத்தார். இரு ம்பு அடிக்கும் கொல்லுப் பட் டறைகளில், இரும்பை பழுக் கக் காய்ச்சிய பிறகு அதை சுத்தியலால் அடித்து, தேவை யான வடிவத்துக்கு வந்தபிறகு தண்ணீரில் போட்டுக் குளிர வைப்பார்கள். “இப்படி காய் ச்சிய இரும்பைக் குளிரவைக்கப் பயன்படு த்திய தண்ணீரைக் குடிக்கும் பெண்கள் கர்ப் பிணி ஆக வாய்ப்பில்லை” என்பது தான் சொரானஸ் கொடுத்த டிப்ஸ்.

அரேபிய பாலைவன நாடுகளில் வியாபாரி கள் மாதக்கணக்கில் ஒட்டகங்களின் முதுகில் மூட்டைகளை வைத்து எடுத்துப்போவார்கள். அப்படி சுமை தூக்கிச் செல்லும் ஒட்டகங்கள் கர்ப் பமாகிவிட்டால், அவற்றால் பயணம் செய் ய முடியாது. அதனால் ஒட்டகத்தின் ஆசன வாய் வழியாகக் கூழாங்கற்களை அதன் கருப்பைக்குள் போட்டு விடுவார்கள். கருப் பையில் இப்படி வேறு ஏதோ ஒரு பொருள் இருக்கும்போது ஒட்டகம் கர்ப்பமாகாது (இந்த “ஒட்டக டெக்னிக்”தான் இப்போது உலகம் எங்கும் பாப்புலராக இருக்கும் கரு த்தடை வளையங்களுக்கு அடிப்படையாக இருந்தது!).

கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் வட இந்தியாவில் பெண்கள் ஒரு விநோதமான உபாயத்தைக் கையா ண்டனர். கல் உப்பை தேன் அல்லது எண்ணெயில் நனைத்து, உறவுக்கு முன் உபயோகித்தனர். இப்படி செய் தால் கர்ப்பம் தரிக்காது என்று அவர் கள் நம்பி னர். அரேபிய பெண்களும் இதேபோல எண்ணெயை ஒரு மிருதுவான துணியில் நனைத்து உபயோகிப்பது வழக்கம். சீனா போன்ற ஆசிய நாடுகள் பலவற்றி ல் துணிக்குப் பதிலாக பேப்பரில் எண்ணெய் தடவி, பெண்கள் பய ன்படுத்தினர்.

ஐரோப்பிய நாடுகள் பலவ ற்றில் வேறொரு பழக்கம் இருந்தது. தேன் கூடு இரு க்கிறதே… அதில் தேனைப் பிழிந்து எடுத்தபிறகு மெழு கு மாதிரி பொருள் மிச்சமி ருக்கும். அதைப் பயன்படுத் தினால் கர்ப்பமடைய வாய் ப்பில்லை என அங்கு பெ ண்கள் நினைத் தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை “புருஹத்ரண்யக உபநிடதம்” என் ற நூலில் கர்ப்பத்தைத் தடு க்க மந்திரம் சொல்லப்பட்டு இருக்கிற து. காமசூத்திரம், கர்ப்பத்தைத் தடுக்கும் மருந் துகளைத் தயாரிக்கும் முறை கள் பற்றி சொல்கிறது. எந் தெந்த நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டால் கர்ப்பத்தைத் தவிர்க்கலாம் என மனு தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது.

இப்படி வரலாற்று காலத்திலிருந்து குடு ம்பக் கட்டுப்பாடு தொடர்பாக நிகழ்ந்த ஆராய்ச்சிகளுக்குப் பதினெட்டாம் நூற் றாண்டில் ஒரு பிரேக் விழுந்தது. தொ ழிற்புரட்சி ஆரம்பித்த நேரம் அது! பல நாடுகளும் படையெடுப்புகளை நிகழ்த் தித் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்து வதில் பிஸியாகின. “நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருந்தால்தான் ப டையில் சேர வீரர்கள் கிடைப்பார்கள்… தொழிற்சாலைகளுக்குக் குறைந்த கூ லியில் தொழிலாளர்களும் கிடைப்பார் கள்” என தலைவர்கள் நம்பினர். அத னால் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிக ளை அவர்கள் தேசவிரோத செயலாகக் கருதினர்.

ஆனால், கருத்தடை சாதனங்களை கலா சார பாதுகாவலர்கள் எதிர்த்தால்-சமூக ஆர்வலர்களோ இதை ஆதரித்தனர். “மக்க ள் தொகை குறைவாக இருக்கும்போதுதா ன் வாழ்க்கைத் தரம் மேம்படும். எண்ணி க்கையைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு எ ல்லா வசதிகளும் கிடைக்கும்படி செய்தா ல் மட்டுமே ஒரு நாடு முன் னேறும்” என்றனர் இவர்கள்.

Thomas Malthus

1798-ல் தாமஸ் மால்தூஸ் என்ற பாதிரியார், “மக்கள் தொகை தத்து வம் பற்றிய ஒரு கட்டுரை” என்ற நூலை வெளியிட்டார். “உ லகத்தின் மக்கள் தொகை எப்போதும் இரட்டி ப்பாகப் பெருகுகிறது. ஒன்று இரண் டாக, இரண்டு நான்காக இப்படி அதி கரிக்கிறது. ஆனால், உற்பத்தியாகு ம் உணவின் அளவு இந்த வேகத்தில் அதிகரிக்கவில்லை. ஒரு கட்டத்தில் உற்பத்தியாகும் உணவை விட, உண் பதற்கு தயாராக இருக்கும் மக்கள் பெருகி விடுவார்கள். அந்த நிலையி ல் விளைநிலங்கள் சக்தியிழந்து தரிசாகும்… பஞ்சமும், நோய்க ளும் தலை விரித்தாடும்… பிண க்குகள் பெ ருகி சமூக ஒழுங்கு குலைந்து போர்மூளும்” என்று  எச்சரித் தார் அவ ர்.

இதன்பிறகு அவரது பெயரில் “மால்தூசியன் லீக்” என பல நாடுகளில் அமைப்புகள் தோ ன்றின. அமைப்புரீதியாகக் குடு ம்பக் கட்டுப்பாடு பிரசாரம் செ ய்த முதல் கோஷ்டியினர் இவ ர்கள்தான்! இதில் இந்தியாவும், குறிப்பாக தமிழகம் காட்டிய வேகமும் பிரமி க்க வைப்பது!

குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வு உலகம் முழுக்கக் கிளம்பிய அதே வேகத்தில் இந்தியாவி லும் பற்றிக் கொண்டது. சொல்லப் போ னால், இந்த விஷயத்தை அரசாங்க திட் டமாக எடுத்துக்கொண்டு செயல்படுத் திய முதல் நாடு இந்தியாதான்!

புதுமையான விஷயங்களுக்கு எப்போ தும் கிளம்பும் எதிர்ப்பு இதற்கும் வந்தது. ஆனால், டாக்டர்களுக் கு இணையாக சமூக அக்கறை கொண்ட பல தனிநபர்களும் குடு ம்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார்கள். ஒரு வேளை, இவர்களின் முயற்சி வெற்றிபெறாமல் போயிருந்தா ல் இப்போது உலகத்தின் மக்கள் தொகை சுமார் அறுநூறு கோடி யே சொச்சம் என்றில்லாமல், ஆ யிரம் கோடியைத் தாண்டி எல் லோருக்கும் மூச்சுத் திணறியிரு க்கும்.

1820-ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் பிளேஸ் என் பவர், கருத்தடை முறைகளைப் பற்றி ஒரு துண்டுப் பிரசுரம் வெ ளியிட்டார். இதுதான் முதல் “குடும்பக் கட்டுப்பாடு” அட்வைஸ் முயற்சி. இவ ருடைய நண்பரான டாக்டர் வேக்லிக்கு இது பிடித்துப் போனது. புகழ்பெற்ற மரு த்துவ இதழான “லேன்செட்” பத்திரிகை யை நிறுவியவர் இந்த வேக்லி. கருத் தடை மற்றும்

குடும்பக் கட்டுப்பாடு பற்றி இவர் மருத் துவரீதியாகப் பத்திரிகைகளில் எழுதி னார்.

ஆனால் “குடும்பக் கட்டுப்பாடு” என்ற வார்த்தையை பிரிட்டனில் பிரபலமாக் கியது, ஒரு விநோத வழக்குதான்! அ மெரிக்காவில் அந்த சமயத்தில் பலரும் இதுபற்றி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டபடி இருந்தனர். இதில் ஒன்றை லண்டனைச் சேர்ந்த பிராட்லா, பெசன்ட் என்ற இரண்டு பேர் பிரிட்டனில் மறுபிரசுரம் செய்தனர். 

Queen Victoria

அது 1877-ம் ஆண்டு. பிரிட்டனை விக்டோ ரியா மகாராணி ஆட்சி செய்த காலம். குடு ம்பக் கட்டுப்பாடு பற்றி பேசுவது, எழுதுவ து எல்லாமே அரசாங்கம் வரையறுத்து இ ருந்த சமூக ஒழுங்குக்கு எதிரான விஷய ம்! அதனால் மக்களைக் கெடுப்பதாகக் குற்றம்சாட்டி பிராட்லா, பெசன்ட் இருவ ரையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவர் களை நீதிமன்றம் விடுதலை செய்துவிட் டது. இந்த வழக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பக் கட்டுப்பாடு பற்றி தெருமுனைகளில்கூட விவாதம் நடக்க இது காரணமாக அமைந்தது.

பெண்களும்கூட இந்தப் பிரசா ரக் களத்தில் குதித்தனர். இதில் முன்னோடி, அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் சாங்கர். நியூ யார்க்கில் நர்ஸாக இருந்தவர் இவர். குடிசைப்பகுதி பெண்கள் பலர் பிரசவத்தில் உடல்பலத் தை இழந்தே படுத்த படுக்கை ஆகி விடுவதை இவர் கண்கூ டாகப் பார்த்தார். பலர் பிரசவம் சிக்க லாகி இறந்தே போனார்கள்.

பதினோரு குழந்தைகளைப் பெற்றெடுத்து தனது அம்மா பட்ட க ஷ்டங்களையெல்லாம் கூட வே இருந்து பார்த்தார் சாங்கர். அடுத்த தலைமுறையை உரு வாக்கும் வேகத்தில், பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை சீர ழித்துக் கொள்வதை உணர்ந் தார் அவர். “ஒரு பெண்ணின் வாழ்க்கை நன்றாக அமைய, பிரசவத்தின் மீது அவளுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்” என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

நர்ஸ் வேலையை ராஜினாமா செய் துவிட்டு இதுபற்றி புத்தகங்க ள் எழு த ஆரம்பித்தார். அப்போது அமெரிக் காவில் “காம்ஸ்டாக் சட்டம்” அமலி ல் இருந்தது. ஆபாசப் புத்தகங்களை த் தடுக்க உருவான இந்த சட்டம், சா ங்கரின் புத்தகங்களையும் ஆபாசம் என்றது. “குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்கள் மத்தியில் ஆபாசத்தைப் பரப்புகிறார்” என்று சாங்கர் மீது வழக்குப் போட்டார்கள். அவர் தலைமறைவாகி ஐ ரோப்பாவுக்குத் தப்பி ஓடினார்.

ஒரு வருஷம் கழித்து அமெரிக் கா திரும்பியபோது, சாங்கர் கை து செய்யப்பட்டார். ஆனாலும் கு டும்பக் கட்டுப்பாடு பிரசாரத்தை அவர் நிறுத்தவில்லை. ஒரு மாத ம் ஜெயிலில், ஒரு மாதம் வெளி யில் என அவர் வாழ்க்கைபோன து. பெண்ணுரிமை அமைப்புகள் அவருக்காகக் குரல் கொடுக்க, கடைசியில் சட்டத்தை மாற்ற முயற்சி நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்.

அமெரிக்காவுக்கு சாங்கர் என் றால் பிரிட்டனுக்கு மேரி ஸ் டோப்ஸ். பிரபுக்கள் குடும்பத் தில் பிறந்தவர் இவர். கண்ணி யமான குடும்பத்தில் பிறந்த ஒரு பிரபுவுக்கு இவரைத் திரு மணம் செய்து வைத்தார்கள். திருமணமாகி பதினைந்து ஆ ண்டுகள் கழித்துதான் மேரிக் கு ஓர் உண்மை தெரியவந்தது … “கணவர் ஆண்மையற்றவர் .” செக்ஸுக்கு முக்கியத்துவம் தராத மணவாழ்க்கையை அரசாங்கம் வலியுறுத்திய காலம் அது! அதனால் அவர்கள் ஒரு முறைகூட செக்ஸ் அனுபவிக்காமல் பதினைந்து ஆண்டுகளைக் கழி த்துவிட்டனர். இதேபோல நாட் டில் எத்தனை பெண்கள் இருப் பார்கள் என யோசித்த மேரிக்கு செக்ஸைப் பற்றி தெரிந்துகொ ள்ளும் ஆர்வம் வந்தது. பிரிட்டிஷ் மியூஸியத்தில் போய் புத்தகங் களைத் தேடிப் படித்தார். அதை வைத்து, “திருமண வாழ்க்கையில் காதல்” என்ற புத்தகத்தை எழுதினார். “செக்ஸ் இயற்கையானது… ஆரோக்கி யமானது” என்று சொன்ன மேரி, ” குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே செக்ஸின் நோக்கம் இல்லை. கர்ப்பத் தடை முறைகளைப் பெண்கள் பின்பற் ற வேண்டும்” என்றும் எழுதினார். அந் தப் புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற் றது. பல மொ ழிகளுக்குப் போனது. ஐரோப்பாவே பரபரப்பாக, மதகுருக்கள் பயந்து போனார்கள். மேரியைக் கைது செய்ய வேண்டும் என அர சாங்கத்தை வற்புறுத்தினர். ஆனால், அவர்மீது சட்ட ம் பாயவில்லை. ஆத்திரம் கொண்ட ஒரு குழுவினர், அவரது வீட்டைக் கொ ளுத்தினர்.

மேரி ஸ்டோப்ஸ் அசராமல் லண்டனில் ஒரு ஆலோசனை மைய ம் திறந்தார். கருத்தடை முறைகளை நர்ஸ்களுக்குக் கற்றுத்தரும் இடமாக அது இருந்தது.

இதன்பிறகு பல நாடுகளிலும் படிப் படியாக இந்தப் பிரசாரம் பரவி யது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடியா க இருந்தது.

அப்போதைய சென்னை மாகாணத்திலும், புதுக்கோட்டை சம ஸ்தானத்திலும் இதற்காக ப் பல அமைப்புகளைத் த மிழர்கள் உரு வாக்கினர். மார்கரெட் சாங்கர் இந்தி யா வந்தபோது மகாத்மா காந்தியையும், தாகூரையு ம் சந்தித்துக் குடும்பக் கட் டுப்பாடு பற்றி பேசினார். காந்தி எதுவும் ரியாக்ட் செ ய்யவில்லை. ஆனால் தாகூர், “பெண்களின் ஆரோ க்கியத்துக்கு இது மிக முக்கியம்” என்றார். 1931-ம் ஆண்டு இந்தியாவில் முதல் தடவையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு குடும்பக் கட்டுப் பாடின் அவசியம் எல்லோ ருக்கும் புரி ந்தது. ஆனால், சுதந்திரத்துக் குப் பிறகே முயற்சிகள் வேகமெடுத்தன. 1952-ம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சர் வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந் தது. இதனை “இந்திய குடும்பக் கட்டுப் பாடு அமைப்பு” ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொள்ள கூப்பிட்ட போது மத்திய சுகாதார அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் வரமறுத்து விட்டார். “குடும்ப க் கட்டுப்பாடு” பற்றி பேசுவதே அவரு க்கு அதிர்ச்சியான விஷயமாக இருந் தது.

ஆனால், பிரதமர்நேரு வாழ்த்துச்செ ய்தி அனுப்பியிருந்தார். துணை ஜனா திபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வந் து பேசினார். அவரது பேச்சுதான் அர சாங்கத்தை உலுக்கியது எனலாம்.

“குழந்தைகளை, பெண்களின் கருப்பைக்கு கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்… அவரது விருப்பத்தில் நாம் எப்படிக் குறுக்கிடுவது என்று சிலர் கேட்கிறார்கள்… குழந்தையை க் கொடுக்கும் அதே கடவுள், நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன் படுத்துவ தற்குதான் அறிவு! எதி ர்கால விளைவுகளையும், பெண்க ளின் ஆரோக்கியத்தையும் கருதி நா ம் இதை செய்தாக வேண்டும். இதற் கு அறிவைப் பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்து விடும்” என்றார் ராதாகிருஷ்ணன்.

இந்தியர்களின் மன சாட்சியை உலுக் கி எடுத்த பேச்சு அது! இதை த் தொட ர்ந்து நேரு, சுகாதார அமைச்சகத்து க்கு 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி னார். நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீர்மா னித்தது.

இப்படி பொறுப்பை அரசாங் கம் ஏற்றது உலகிலேயே மு தலாவதாக இங்குதான்! இன் னமும்கூட அமெரிக்காவில் “குடும்பக் கட்டுப்பாடு” தனிந பர்களின் பொறுப்பாகவே இ ருக்கிறது.

புறப்பட்ட இடத்துக்கே திரும் ப வந்துசேரும் ஒரு பொருளை “ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது” என்பார்கள். ஆணுறையின்கதையும் அதுதான்! ஆரம்பத்தில் பால்வினை நோய்களை கட்டுப்படுத்த உருவாக் கப்பட்ட அயிட்டம் அது! “குடும்பக் கட்டுப்பாடுக் கருவியாக” அது மாறி யது, தற்செயலாக நடந்த விஷயம். இப்போது எய்ட்ஸ் நோய் உருவாக் கிய பீதியில் பழையபடி அது “நோய் கட்டுப்பாடுக் கருவி”யாக அவதாரம் எடுத்திருக்கிறது.

– பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: