Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்றுமுதல் இன்று வரை 'ஆணுறை'! – நெகிழ்வூட்டும் உண்மைச் சம்பவங்கள்

அன்றுமுதல் இன்று வரை ஆணுறை – நெகிழ்வூட்டும் உண்மைச் சம்பவங்கள்

புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வந்துசேரும் ஒரு பொருளை “ஒரு முழுச்சுற்று வந்துவிட்டது” என்பார்கள். ஆணுறையின் கதையும் அதுதான்! ஆரம்பத்தில் பால்வினை நோய்களை கட்டுப் படுத்த உருவாக்கப்பட்ட அயிட்ட ம் அது! “குடும்பக் கட்டுப்பாடுக் கருவியாக” அது மாறியது, தற்செயலாக நடந்த விஷயம். இப் போது எய்ட்ஸ் நோய் உருவாக்கிய பீதியில்

பழையபடி அது “நோய் கட்டு ப்பாடுக் கருவி”யாக அவதார ம் எடுத்திருக்கிறது.

ஆணுறையின் வரலாறு கி. மு. 1350-ல் ஆரம்பிக்கி றது. எகிப்து நாட்டில் வசித்த நாடோடிகள் ஆணுறுப்பை பூச்சிகள் கடிக்காமல் இருக் கவும், அதில் காயங்கள் ஏற் படாமல் இருக்கவும் ஓர் உறை மாட்டிக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்கினர். மனித இனம் கண்டுபிடித்த முதல் ஆணுறை இதுதான்!

ஃபிரான்ஸின் காம்பரெல்ஸ் குகைகளில் கி.பி.முதல் நூ ற்றாண்டில் வரையப்பட்ட தொல்லோவியங்கள் உள்ள ன. இவற்றில் ஆணுறை அ ணியும் காட்சிகள் இடம் பி டித்துள்ளன.

கி.பி. 1500-ம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல நாடுக ளை “சிபிலிஸ்” என்ற பால் வினை நோய் அச்சுறுத்தியது. செக்ஸ் எண்ணத் தோடு மனைவி யைத் தொடக்கூட பலரும் பயந்தனர். இவர்களுக்கு ஆ றுதல்தரும் விதமாக  இத் தாலியைச் சேர்ந்த புகழ்பெ ற்ற உடற்கூறியல் நிபுணர் கேப்ரியேல் ஃபெலோபியஸ், ஆணுறை போன்ற பையை உருவாக்கினார். மெல்லிய லினன் துணியால் இது செ ய்யப்பட்டது. நோய் பரவாம ல் தடுக்க இதை வேதிப் பொ ருட்களில் நனைத்துப் பிறகு காயவைத்து ஆண்கள் பயன்படுத் தினர். அப்போதுதான், “இது நோ யை மட்டும் தடுக்கவில்லை… விந் தணுக்களையும் பெண்ணுறுப்புக் குப் போகாமல் வடிகட்டி, கர்ப்பத் தையும் தடுக்கிறது” என்ற உண் மை தெரிந்தது.

ஆணுறைக்கு ஆங்கிலத்தில் “காண்டம்” என்று பெயர். எப்படி இந்தப் பெயர் வந்தது? இதற்கு இரண்டுவிதமாக சொல்கிறார்கள். இங்கிலாந்தை ஆண்ட இரண்டாம் சார்லஸ் மன்னரின் அரசவை டாக்ட ராக “காண்டம்” என்பவர் இருந்தார். அந்த மன்னர் தினமும் புதுப்புது பெண் களைத் தேடும் சபல புத்திக்காரர். இப்படி கண்ட இடங்களுக்குப் போய் மன்னர் ஏதாவது பால்வினை நோயை ச் சுமந்து வருவதைத் தவிர்க்கவும், மன்னரின் வாரிசுகளை ஏராளமான பெண்கள் வயிற்றில் சுமந்து கொண் டு ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுவ தைத் தடுக்கவும் டாக்டர் காண்டம், ஸ்பெஷலாக ஆணுறைகளைத் தயா ரித்துத் தினமும் இரவில் மன்னருக்கு க் கொடுத்தனுப்புவாராம். அந்த டாக்டரின் பெயரே ஆணுறைக்கு வந்துவிட்டது என்கிறார்கள் சிலர். லத்தீன் மொழியில் “காண்ட ஸ்” என்றால் கிண்ணம். ஆணு றை கிண்ணம் மாதிரி இருப்பதா ல், இந்த லத்தீன் பெயரே அதற்கு ஆங்கிலத்திலும் வந்தது என்கி றார்கள் வேறு சிலர். லினன் துணியை அடுத்து, கி.பி. 1700-களில் ஆட்டுக்குடல் சவ்வில் ஆ ணுறைகள் தயாரிக்கப் பட்டன. ஆ னால், இவற்றின் விலை அதிகம்! இப்போது “செகண்ட் சேல்ஸ்” என்ற முறையில் பழைய பைக்கு கள், கார்களை விற்பது மாதிரி அந்தக்காலத்தில் ஏற்கெனவே பயன்படுத்திய ஆட்டுக்குடல் ஆணுறைகளை கழுவி எடு த்துவந்து, திரும்பவும் கடை களில் விற்ற கூத்தும் நடந்த து.

ஐரோப்பாவில் இவ்வளவு புர ட்சிகளும் நடந்த அதே நேரத் தில் ஜப்பானில் மெல்லிய தோலையும், ஆமை ஓட்டின் உட்புற பகுதியையும் பயன்ப டுத்தி ஆணுறைகள்தயாரித் து வந்தனர்.

ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆணுறை அசுர வளர்ச்சி கண்ட து. 1840-ல் தொடங்கி ஏராள மாக ஆணுறைகள் ரப்பரில் செ ய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு வ ந்தன. 1930-களில் லேடெக்ஸ் ரப்பர் தொழில்நுட்பம் வந்தபிற கு, ஆணுறை இன்னமும் மெலி தானது. இருப்பதே தெரியாத அளவுக்கு அணியமுடிந்தது.

ஆண்களின் உடம்புச்சூடு ஆணுறுப்பு வழியாக பெண்களுக்குப் பரவும் போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்றும் ஆணுறை மாட்டினால் அது கர்ப்பத் தைத் தடுப்பது போலவே சூட்டையும் தடுத்துவிடும் என்றும் மக்களில் பெரும்பாலானோர் நினைத்தார்கள். ஆனால், அது உண்மையில்லை. சமீப காலத்தில் பாலியூரித்தேன் கொண்டு புதிய ஆணுறைகள் தயாரிக்கப்பட்டு ள்ளது. இப்படி தயாரிக்கப்பட்ட ஆணு றைகள் “டியூரான்”(duron) என்று அ ழைக்கப்படுகிறது. இதில் உடம்புச் சூடு பரவுகிற வசதி இருக்கிறது.

இப்போது செக்ஸ் இன்பத்தை அதிக ரிக்கிற விதமாக ஏகப்பட்ட ரகங்களி ல் ஆணுறைகள் வந்து விட்டன. சின்ன கம்ப்யூட்டர் சிப்பும், பாட்ட ரியும் இணைத்து, உறவின்போது அதிர்வுகளை ஏற்படுத்துகிற ஆணுறைகூட கிடைக்கிற து.

இதுதவிர, கடந்த சில ஆண் டுகளுக்கு முன்பு “ஃபெமி டோம்” எனப்படும் பெண்க ளுக்கான “பெண்ணுறை” கூட மார்க்கெட்டுக்கு வந்தி ருக்கிறது. ஆணுறைகளைவிட இது கொஞ்சம் சைஸ் பெரிதாக இருக்கும்.

ஆணுறைகளின் பயன்பாடு பற்றி சுவாரஸ்யமான ஒரு விஷயம் வளைகுடா போரின் போது நடந்தது. கடந்த 91-ம் ஆண்டு சதாம் உசேன் குவைத்தை ஆக்கிரமித்து இருந்தார். படைகளை வாபஸ் பெறச் சொல்லி ஐ.நா.சபை அவருக்குக் கெடு விதித்தது. குறிப்பிட்ட நாட்களில் இது நடக்கவில்லை என்றால் இராக் படைகளைத் தாக்கி, குவைத்தை மீட்க ஏதுவாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் சவூதி பாலைவன த்தில் தயாராக இருந்தன.

பல நாட்கள் இந்தக் காத்திரு ப்பு தொடர்ந்தது. இந்த சமய த்தில், “எங்களுக்கு ஐந்து லட்சம் ஆணுறைகள் வேண் டும்” என பிரிட்டிஷ் படைகள் அந்த நாட்டு அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பின. ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் ஓய்வெடுக்கும்போது விலைமாதர்க ளைத் தேடி ப் போவது உலகமெங்கும் சகஜமான விஷயம்தான்! ஆனால், யாருமில்லாத பா லை வனத்தில் இவர்களு க்கு எதற்கு இவ்வளவு ஆ ணுறைகள் என பிரிட்டிஷ் அரசு குழம்பியது. ஆனாலு ம் கேட்டதை அனுப்பி வைத்தது.

இருநாட்டு படைகளும் ஒன்றுசேர்ந்து களத்தில் இருந்ததால் பிரி ட்டிஷ் படைகளின் முகாமு க்கு ஆணுறைகள் பெட்டிப் பெட்டியாக வந்து இறங்குவ தைப் பக்கத்திலிருந்த அமெ ரிக்க ராணுவ அதிகாரிகள் பார்த் தனர். “நாமே இங்கு காய்ந்துபோய் கிடக்கிறோ ம். நமக்குத் தெரியாமல் பிரி ட்டிஷ் பார்ட்டிகள் பெண்க ளை எங்கு போய் பிடிக்கிறா ர்கள்?” என புரியாமல் தவித் த அதிகாரிகள், ராத்திரி நேரத்தில் பிரிட்டிஷ் முகாமை கண்கா ணிக்க உளவுப் படையின ரைத் தனியாக நியமித்தனர். நாட்கள் கடந்தன. ஆனால், பிரிட்டிஷ் வீரர்கள் எதுவும் தப்புதண்டாவுக்கு போகிற மாதிரி தெரியவில்லை.

இந்தச் சூழலில் கெடுமுடிந் தும்கூட, சதாம் படைகள் குவைத்திலிருந்து நகராததால் அவர்க ள் மீது தாக்குதல் தொடுக்குமாறு திடீரென கட்டளை வந்தது. அமெரிக்கப் படைகள் உடனே கிளம்ப முடியவி ல்லை. அவர்களிடமிரு ந்த துப்பாக்கிக் குழல்க ளில் எல்லாம் மணல் அப்பி மூடியி ருந்தது. இதை சுத்தம் செய்யவே பலமணி நேரம் ஆயிற் று. புத்திசாலி பிரிட்டிஷ் படையினர் இந்தக்குழல் களை ஆணுறைகளால் மூடியிருந்தனர். அதை மீறி மணல் உள் ளே போகவில்லை. அவர்கள் கட்டளை வந்த அடுத்த நிமிடமே ஆணுறைகளை அகற்றிவிட்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆணுறை இப்படி பல விஷயங்களைத் தடுக்கிறது.

– பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: