Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முக்கியமான சில மாற்றங்களுடன் T.V.S-இன் "STAR CITY PLUS" பைக் 2014

2014-ம் ஆண்டு முக்கியமான சில மாற்றங்களுடன் டி.வி. எஸ்.இன் ‘ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்

அன்றாடப் பயன்பாட்டுக்கான கம்யூட்டர் பைக் மார்க்கெட் டில் டிவிஎஸ், ‘ஸ்டார்’ என் னும் பைக்கை அறிமுகப்படு த்தி சுமார் 10 ஆண்டுகள் ஆகி ன்றன. டிவிஎஸ்-ன் ‘பிரட் வின்னர்’ பைக்கான இதில், தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்வது வாடிக்கை. இப்போது 2014-ம் ஆண்டு ஸ்பெஷலாக,

முக்கியமான சில மாற்றங்க ளுடன் ‘ஸ்டார் சிட்டி ப்ளஸ்’ எ ன்று அறிமுகப்படுத்தியிருக்கி றது டிவிஎஸ்.
எப்படி இருக்கிறது புதிய பைக்?
டிஸைன்

டிஸைனைப் பொறுத்தவரை புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் எந்த ப்ளஸ்ஸும் இல்லை என்றே சொல்லலா ம். ஏற்கெனவே பார்த் துப் பழகிய ஸ்டார் சிட்டி பைக் போலவே இருக்கிறது புதிய சிட்டி ப்ளஸ்.

புதிய பைக்கில் அலாய் வீல்களை ஸ்டா ண் டர்டு ஆக்கியிருப்பதோடு, அலாய் வீல், இன்ஜின் உட்பட பைக்கின் அடிப்பகுதிகளு க்குக் கறுப்பு வண்ணம் பூசியிருக்கிறார்க ள்.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பளி ச்சென இருக்கிறது. வெண்ணி ற பின்னணியில் ஸ்பீடோ மீட் டர் தெளிவாகப் பார்க்கும் வ கையில் வடிவமைக்கப்பட்டுள் ளது. பெட்ரோல் இண்டிகேட்டர் டிஜிட்டல் மீட்டராகக் கொடுக்க ப்பட்டுள்ளது. மேலும், டிவிஎஸ் -ன் முத்திரையான எக்கனாமி மோட் – பவர் மோட் இண்டிகே ட்டர்களும் உள்ளன. ஹெட் லைட், அதன்மீது வைக்கப்பட் டுள்ளவைஸர், பைக்கின் இயல்புக்குஏற்ற வகையில் அமைந்து ள்ளன. டெயில் லைட் தனித்தன் மையுடன் இருக்கி றது. கைப்பிடிகளு ம் லீவர்களும் சுவி ட்சுகளும் பெயின்ட் குவாலிட்டியும் தர மாக இருக்கின்ற ன. சைடு பேனலில் இருக்கும் ‘ஸ்டார் சிட்டி ப்ளஸ்’ லோகோவும் அதன் மேல்பக்கம் உள்ள ஏர் வென்ட் டிஸைனும் ஈர்க்கின்றன. தையல் வேலைப்பா டுகளுடன் இருக்கும் சீட், இருவர் தாராளமாக உட்காரும் வசதி யுடன் இருக்கிறது.

செல்ஃப் / கிக் ஸ்டா ர்ட்டர் வச தியுடன் இருக்கும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், சீட்டி ல் அமர்ந்து ஹேண் டில்களைப் பிடித்து ஓட்ட நன்றாக இரு க்கிறது. கி ராப் ரெயில், பில்லியன் ரைட ர் ஏறி இறங்கும்போது இடைஞ்சலாகஇல்லை என்பதுடன் வசதியாக இருக்கிறது. பின்பக்கக் கண்ணாடிகளைப் பொறுத்தவரை சிறப்பாக இல்லை என்றாலும் ஓகே.

இன்ஜின்

இன்ஜினைப் பொறுத்தவரை அதே ‘எக்கோ த்ரஸ்ட் சீரிஸ்’ 109.7 சிசி, 4 ஸ்ட்ரோக், ட்வின் வால்வ், ஏர் கூல்டு இன்ஜின்தான். ஆனால், இது பல மாற்றங்களுக்கு உள் ளாகியிருக்கிறது என்பது ஓட்டும்போது தெரிகிறது. ”மைலேஜு க்காக ஃப்ரிக்ஷ னைக் குறைக்கும் வகை யில் ராக்கர் ஆர்ம்  ரோலர் பேரிங், மாலிகோட் (Moly coat) பிஸ்டன், சைலன்ட் கேம் செயின் என மேம்படு த்தி இருக்கிறோம். அதே போல், அதிகக் காற்று உள் ளே வரும் வகையில், ஏர் ஃபில்ட்டரை மேம்படுத்தியதுடன் சிறந்த கம்பஷன் அளிப்பத ற்காக, ஸ்பார்க் ப்ளக்கையும் ட்யூன் செய்திருக்கிறோம்” என்றது டிவிஎஸ் தொழில்நுட்பக் குழு. இந்த மாற்றங்கள் பைக் கின் சைலன்ஸர் வரை தொ டர்கிறது என்பது ஸ்டார்ட் செய்ததும் புரிந்தது. ஸ்டார் சிட்டிக்கே உரிய இன்ஜின் சத்தம், இப்போது ஒரே சீராக ஒலிக்கிறது. அதனால், ஸ்மூ த் ஃபீலிங் கிடைக்கிறது. அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்-ல் 8.18 bhp சக்தி, 5,000 ஆர்பிஎம்-ல் 0.88 டார்க்கையும் அளிக்கிறது புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ்.

பெர்ஃபாமென்ஸைப் பொறுத்த வரை ஸ்டார் சிட்டி ப்ளஸ், சுமா ர்தான். இதன் 4 ஸ்பீடு கியர்பா க்ஸ் உடனுக்குடன் சக்தியை மா ற்றினாலும் வேகம் என்று சொல்ல முடியாது. ஆனால், திராட்டில் ரெஸ்பான்ஸைப் பொ றுத்தவரை அருமை. டிவிஎஸ்-ன் சின்ன டெஸ்ட் டிராக்கில், புதிய ஸ் டார் சிட்டி ப்ளஸ் பைக்கை அதிக பட்சமாக மணிக்கு 90 கி.மீ வேகம் வரை ஓட்டமுடிகிறது. கியர்பாக்ஸ் , கிளட்ச்செயல்பாடு ஸ்மூத்தாகவே இருக்கிறது.

– சாஹுல் ஹமீது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: