Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரியோதனனும்! ஓர் அரிய நிகழ்வு

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரி யோதனனும்! ஓர் அரிய நிகழ்வு

மகாபாரதத்தில் ஒரு காட்சி …

பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திரு க்கும் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட் க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிட மும் கிருஷ்ணனை போய் பாருங் க. அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குற தை தவறாமல் நிறை வேத்துவார்னு சொல்லி அனுப்புறார்..

முதல் ஆளாக

துரியோதனன் கிருஷ்ணரை பாக்க போய்டுறார் .கிருஷ்ணன் நித்திரையில் இருக்க அவர் தலைக்கு பக்கத் துல இருக்குற இரு இரு க்கைகளில் ஒன்னுல உக்கார்ந்து கிருஷ்ணர் கண் திறக்குறதுக்காக காத்திருக்கா ர். அடுத்து வரும் அர்ஜுனன் ஆழ்ந் த நித்திரையில் இருக் கும் கிருஷ்ணரை பாக் குறார்.. அவர் தலைக்கு பக்கத்துல ஒரு இருக்கை காலியா இருக்குறதையும் பார்க்குறார் .ஆனா அதுல உட்காராமல் கிருஷ்ணரின் பாதங்களு க்கு பக்கத் துல கீழ உக்கார்ந்து கிருஷ் ணர் கண் திறக்குறதுக்காக காத்திரு க்கார்.

கிருஷ்ணரின் பாதம் அர்ஜுன ன் மேல தவறுதலா பட்டு உட னே கிருஷ்ணர் கண் முழிக் குறார்..அப்போ அவர் முதல் ல பாக்குறது அர்ஜுனனை. “பார்த்தா !! ஏன் நிலத்தில் அமர்ந்துள்ளாய்”னு கேக்குற துக்கு அர்ஜுனன், “யாசிப்பவன் நிலத்தில் அமர்ந்துதானே யாசிக்க வேண்டும்”னு பதில் சொல்றார்.பின்னர் யுவராஜன் துரியோதன னும் உங்களுக்காக காத்திருக்கிறார்னு சொல்றார். “அப்படியா!! துரியோதனா நீ என் சிரத்தில அமர்ந்ததால் உன்னை கவனி க்கவில்லை ..மன்னித்துவிடு”னு சொல்றா ர் கிருஷ்ணர்.

“நான் சிரத்தில அமரவில்லை ..சிரத்திற்கு அருகில் அமர்திருந்தேன். நான் தங்களிட ம் யாசகம் பெற வந்துள்ளேன்”னு துரியோ தனன் சொல்றார்.மேலும் யார் முதல்லவ ராங்களோ அவங்களுக்கு நீங்க கேட்ட தை கொடுப்பீங்கன்னு வாக்கு கொடுத்தீங் களேனு துரியோதனன் கேட்க… கிருஷ்ண ர், “முதல்ல வரவங்களுக்கு நான் அவங்க கேக்குறதை கொடு ப்பேன்னு சொல்ல. என்னுடை ய பார்வை யார் மேல முதல்ல படு தோ அவங்க கேக்குறதை நான் கொடு ப்பேன்னுதான் சொன்னேன். நீங்க ரெ ண்டுபேரும் வரும் போது நான் நித்தி ரையில் தான் இருந்தேன்.. நீ முதல்ல வந்திருக்கலாம் ஆனா அர்ஜுனன் அம ர்திருந்த ஸ்தானமானது நான் நித் திரையில் இருந்து எழுந்ததும் முதல்ல அவனை பார்க்க வைத் தது “னு பதில் சொல்றார்..

அதாவது நமக்கு ஒரு உதவி ,யாசகம் அல்லது நமக்கு ஒன்னு வேணும்னா தலைக்கனத்தோடவோ அல்லது அதி காரத் தோட வோ அதை அவங்ககிட்ட (இறைவனிடமும் தான்) கேக்காம பணிவோட ஒரு தாழ்மையோட கேட்கனும்னு அழகா எடுத்து சொல்ற காட்சி..என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச காட்சி..

– விகடன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: