Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அனுஷ்கா! அக்காவா? ஆண்டியா? – புதிதாக முளைத்திருக்கும் சர்ச்சை!

நடிகை அனுஷ்கா! அக்காவா? ஆண்டியா? – புதிதாக முளைத்தி ருக்கும் சர்ச்சை!

தமிழ், தெலுங்கில் இருக்கும் நடிகைகளி லேயே கொஞ்சம் வயதான தோற்றத்தில் தெரிபவர் என்றால் அது அனுஷ்கா மட்டு மே. சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர் அக்கா மாதிரிதான் தெரிகிறார். இன் னும் சில ஹீரோக்களோடு நடிக்கும் போது அவர்களுக்கு ‘ஆன்ட்டி’ மாதிரியான தோற்ற த்திலும் இருக்கிறார். இருந்தாலும் கட்டுக் கோப்பான உடலமைப்புடன் அனுஷ்கா இரு ப்பதால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்க ள் இருக்கிறார்கள். எந்த ஆடையிலும்

அவர் அசத்தலாகவும், பொருத்தமாகவும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

அது புடவையாக இருந்தாலும் சரி, மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தாலும் சரி எந்தவிதமான ஆடையிலும் அனுஷ்கா அழகாகத் தெரிகி றார் என்பது ரசிகர்களின் கருத்து. அதே சம யம் அவர் முகத்தில் உள்ள மெச்சூரிட்டி அவ ருக்கு கொஞ்சம் வயதான ஹீரோயின் தோ ற்றத்தைத் தருகிறது என்பதில் பொய் எதுவு மில்லை. இப்போதுள்ள சில இளம் ஹீரோ க்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடிக்க முடி யாது என்பதே உண்மை. சரி, விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு சில பள்ளிச் சிறுவர், சிறுமி யர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர் களில் சிலர் அனுஷ்காவை ‘ஆன்ட்டி’ என்று அழைத்தார்களாம்.

அதனால் அனுஷ்கா கோபப்பட்டு வருத்தமடை ந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சிறுவர், சிறு மியர் தன்னை ‘அக்கா’ என்று அழைப்பதை அனு ஷ்கா எப்படி எதிர்பார்க்கலாம். அவர்கள் எல் லாம் ‘ஆன்ட்டி’ என்றுதானே அழைப்பார்கள் என அங்குள்ளவர்கள் கமெண்ட் அடித்திருக்கி றார்கள். ம்ம்ம்…சின்னப் பசங்க எப்பவுமே பொய் சொல்ல மாட்டாங்களே….அது கூடவா அனுஷ்காவுக்குத் தெரியாது.

Leave a Reply