Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிரே உன் விலையென்ன? – உரத்து சிந்தியுங்கள்

உயிரே உன் விலையென்ன? – தலையங்கம்

2014,ஜுலை (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிலிருந்து  .  . .

சென்னை மௌலிவாக்க‍த்தில் நிகழ்ந்த கட்ட‍டச் சரிவு தென்னிந்தியாவின் மிகப் பெரிய சரிவு என்கிறது சரித்திரம். சீட்டு க்கட்டைப்போல சில நொடிகளுக்கு ள் வீழ்ந்தது கட்ட‍டமல்ல‍ . . . மனிதநேயம். காணாமல் போனது கட்ட‍டமல்ல‍… கண க்கற்ற‍ மனித உயிர்கள். ஆறு நாட்களா கியும் அடையாளம் காணப்படாத மனித உடல்கள்… விதியின் விளையாட்டல்ல‍ …  விதிமுறையற் ற‍வர்க ளின் திட்ட‍மிட்ட‍

விபரீத சோதனை, முகவரி யில்லாமல்… உறவுகளில் லாமல் இருக்கும்போதும் இறந்த பின்னும் அநாதைக ளாய் அமரத்துவம் பெற்ற‍ அந்த உயிர்களுக்கு விலை தான் என்ன‍?

இடி விழுந்தது தான் காரண ம் என்கிறார் இரக்க‍மில்லா த முதலாளி, தரமற்ற‍ கட்டுமானம் என்று தப்பிக்க‍ நினைக்கிறது அரசு நிர்வாகம். அனைத்து மட்ட‍ங் களிலும் விதி மீறல்கள் என்கி றது முதல் தகவல் அறிக்கை. ஆளுக்கா ள் இனி ஆய்வு செய்து ஆகப் போவ தென்ன‍?

விளைநிலங்களை வீடுகளாக்கிய வர்கள், ஏரிகளை தங்கள் ஏரியா வாகவும், குட்டைகளை கோபுரங்க ளாகவும், களிமண் பூமி யைக் கூட கட்ட‍டங்களாகவும் மாற்றுகிறார்க ள். அரசும், அரசு சார்ந்த துறையும், அதன் அதிகாரிகளும், ஊழியர்களு ம் அனும திக்காமலா இவையெல்லாம் நடைபெறுகிறது?

அடுக்கு மாடி கட்ட‍ட நிகழ்வு அநி யாயத்தின் அகோர அடையாள ம். தங்களைக் கண்டு கொள்வதற்கா க எதையும் கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தின் பங்கு அரசு அதிகாரிகளின் கைங்கர்யம் இந்த அடுக்குமாடி அவலத்தில் இருக்கு மேயானால் அது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம்

வருமுன் காப்போம் என்கிற கோஷம் பிறப்புக்கும், வந்த பின் பார்ப்போம் என்கிற கோஷம் இறப்புக்கும் இருக்கும் அவலத் தை எப்ப‍டி எங்கே எப்பொழுது யாரால் சரிசெய்ய‍ப்போகிறோம்.

அம்மாவின் அரசு அதிரடி அரசு என்பது மெய்ப்பிக்க‍ப்பட வேண் டுமென்றால் இந்த விவகாரத்தி ல் முதல்வரே தலையிட்டு, ஆதி முதல் அந்தம் வரை விசாரிக்க‍ வேண்டும். தவறு செய்தவர்களு க்கு தேசத்தின் உச்ச‍க்கட்ட‍த் தண்டனையான மரண தண்டனை வழங்க வழிகாணவேண்டு ம்.

செங்கல் என்று எழுத தெரி ந்தால் போதும் என்ற பேரா சையோடும் மக்க‍ளின் உ ழைப்பை, உயிரை, உறிஞ்சு ம் நோக்க‍த்தோடும் புற்றீச ல்களாய் புறப்படும் தனியா ர் கட்டுமான நிறுவனங்கள் கண்காணிக்க‍ப்பட வேண்டும். எல்லா கட்ட‍ட கட்டுமான நிறுவ னங்களும் அரசின் அங்கீ காரம் பெற வேண்டும் என் கிற அவசர சட்ட‍த்தை உட னடியாக இயற்ற‍வேண்டும்.

உயிர்களைப் புதைக்கும் உயர்ந்த மாடிக்கட்ட‍டம் தே வைதானா? என்பதை விற் போரும். வாங்கு வோரும்… அனுமதிப்போரும்.. உரத்து சிந்திப்பதே பூமிக்குள் புதை ந்துள்ள‍ விலை மதிப்பில் லா உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண் மையான அஞ்சலி

உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)

தொடர்புக்கு கைபேசி 94440 11105

Leave a Reply