Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (13/7/14): நிழலை காம முறுவதை விடுத்து, பெண்மையில் மூழ்கி, முத்தெடு

அன்புள்ள அம்மா —

வணக்கம். நான், 22 வயது இளைஞன்; கல்லூரி படிப்பை முடி த்து, தற்போது, தனியார் நிறுவனத் தில், நல்ல சம்பளத்தில், வே லை செய்து வருகிறேன். சிறு வயதிலி ருந்தே, நிறைய நன்னெறி மற்றும் அறநெறிக் கதைகளை என் பாட்டி, அம்மா மற்றும் அத் தை ஆகியோர் மூலமாக கேட்டு வளர்ந்தவன். என் குடும்பத்தில் நான் கடைசி பையன் என்பதால், என் மீது அவ ர்களுக்கு மிகுந்த பாசம். அதனால், சிறு வயதிலிருந்தே பெண்கள் மீது மரியாதை அதிகம். அதே சமயம், என் தாத்தா, அப்பா என்னைக் கண் டிக்கும்போது, அவர்கள் மீது, வெ றுப்பு வரும்.

அம்மா, நான் கொஞ்ச நாட்களாகவே மிகுந்த மன குழப்பத்தில்,

ஒரு உறுதியான, தெளிவான முடிவு எடுக்க முடியாமல், இருக்கி றேன். எல்லாருக்கும், ‘டீன்-ஏஜ்’ வயதில், காதல் தோன்றும். எனக் கோ, கல்லூரி இரண்டாமாண்டு செல்லும்போது, காதல் உணர்வு வந்தது. ஆனால், பெண்ணின் மீது அல்ல; ஒரு ஆணின் மீது. அவ ன் என் கல்லூரியின் ஜூனியர் மாணவன். இது, காதலா அல்லது ஹார்மோன் செய்யும் வேலையா அல்லது முன் ஜென்ம பந்தமா என்று தெரியவில்லை. தினமும், தூங்கி எழும் போதும், உறங்கச் செல்லும் போதும், அவன் நினைவு வந்து விடுகிறது.

நான் கருப்பு. அவன் நல்ல நிறம்; பார்ப்பவர்கள் மனதை, கொள் ளை கொள்ளும் பேரழகன். எனக்கு, அவனிடம் பிடித்தது, எல்லா ரிடமும் அன்பாக பழகும் குணமும், அனைவரையும் மதிக்கும் பண்பும், சுருங்க சொல்லி, தெளிவாக புரிய வைக்கும் அறிவும், என்னை மிகவும் கவரும். நான், அவனுடைய ஒவ்வொரு செய லையும் ரசிப்பேன். கல்லூரி வளாகத்தினுள் அவனுடைய முகத் தை, மற்ற மாணவர்கள் முன்னிலையில் காண முடியாதா என, ஏங்கிய நாட்கள் உண்டு. அவன் அமைதியான பையன் என்பதால் நானும், என்னை அமைதியானவனாக மாற்றிக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில், ஒன்றாக மூன்று மணி நேரம் பயணம் செய்வோம். அவன் அமரும் இருக்கையின் இடது புறம் அமர்ந்து, நான், அவன் அழகை ரசித்தபடி வருவேன். என் கல்லூரி படிப்பை முடித்து, வெளிவந்த அந்த இறுதி ஆறு மாதகாலம், ஒரு நடைபிணமாகவே வாழ்ந்தேன்; இனிமேல் அவ னை சந்திக்க முடியாது, பேச முடியாது என்ற ஒரே காரணத்தினா ல் தான். அவன் வீடு, என் மாமா வீட்டிற்கு பக்கத்தில் உள்ளதால், மாமா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம், அவனது வீட்டிற்கு செ ன்று, அவனை பார்த்து பேசி வருவேன்.

நான் வேலைக்கு சென்று பணம் சேர்த்து, ஒரு டூவீலர் வாங்கி னேன். அதை, அவன் தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என் றும் ஆசைப்பட்டேன்; அவ்வாறே நடந்தது. அவ்வப்போது, அவன் கல்லூரிக்கு செல்லும் போதும், அவனுடைய நண்பர்களை சந்தி க்கச் செல்லும் போதும் என்னுடைய டூவீலரை வாங்கிச் செல்வா ன். அதற்கு பெட்ரோல் போடக் கூட நான் தான் பணம் கொடுப் பேன். இதுபோக அவ்வப்போது அவனுடைய மொபைல் செலவுக ளையும், சினிமாவிற்கு சென்றாலும், சாப்பிடச் சென்றாலும் நான் தான் செலவு செய்வேன். காரணம் அவன் படித்துக் கொண்டிருக் கும் மாணவன். அதனால், பணம் இருக்காது என்ற காரணத்தால்.

இப்போது அவனும் படிப்பை முடித்து, வேலைக்குச் சென்று, டூ வீலர் வாங்கியுள்ளான். இதை, அவன் நண்பன் மூலம் தான் அறிந் தேன். அப்போதே, எனக்கு சிறு மன வேதனை. அதன்பின், ஓரிரு முறை சந்தித்த போது கூட, அவன் தன் டூவீலரை தொடவே விட வில்லை.

பணமோ, பொருளோ போனால் போகட்டும்; எங்களின் உண்மை யான நட்பு எந்த விதத்திலும் கெட்டு விடக் கூடாதென உறுதியாக இருக்கிறேன். ஆனால், இப்போது அவன் என்னை விட்டு விலகிச் செல்வதாக உணர்கிறேன். ஒரு வேளை தன்னுடைய சுயநலத்தி ற்காக என்னை பயன்படுத்திக் கொண்டானோ என்றும் தோன்று கிறது. நான், அவனை சந்தித்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. அதனால், எப்போது அவனை நேரில் பார்ப்பது, பேசுவது என்ற எண்ணங்களே மனதில் எழுகிறது. அவனை நினைக்காத நேரமில்லை. வேலை செய்யும் போதும், சாப்பிடும் போதும் கூட, அவனது நினைவாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் என்னா ல் சரியாக சாப்பிட முடியவில்லை; பேச முடிவதில்லை. படிக்க வும், வேலை செய்யவும் முடிவதில்லை; எப்போதும் அவன் நி னைவாகவே உள்ளது. என் எண்ணத்தை அவனிடம் மனம் திற ந்து சொல்லவா அம்மா.

— தங்களின் பதிலை விரைவில் எதிர்நோக்கும் மகன்,

அன்பு மகனுக்கு —

உன் கடிதம் கிடைத்தது. பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் இரு பெண்களுக்கிடையே, ‘லெஸ்பியன்’ பழக்கம் வந்து விடுகிற து. ஆண்கள் விடுதியில் தங்கியிருக்கும் இரு ஆண்களுக்கிடை யே, ‘சோடமி’ எனப்படும் ஒரு பால் புணர்ச்சி வந்து விடுகிறது. பலாக்காய் கிடைக்காத நேரத்தில், களாக்காய் கிடைத்தால் போ தும் என்கிற மனோபாவமே, இவ்வகை இயற்கைக்கு, புறம்பான உறவுகளுக்கு காரணம். காதலில் உதாசீனப்படுத்தப்படும் ஆ ணோ, பெண்ணோ கூட, இவ்வகை உறவுகளில் ஈடுபடுகின்றனர். ‘நான் மற்றவர் செல்லும் சாலையில் பயணிப்பவன் இல்லை; என் வழி தனி வழி…’ என்று கூறுகின்றவர்களும் இத்தகைய பழக்கத் தில் ஈடுபடுகின்றனர்.

வீட்டில் பாட்டி, அத்தை, அம்மா, சித்தி, அக்காக்கள் என, பெண்க ளின் அருகாமையிலேயே அவர்கள் முந்தானையை பிடித்துக் கொண்டே வளரும் ஆண் குழந்தைகளுக்கு, மனதில் சிறிது பெ ண் இயல்பு ஒட்டிக் கொள்கிறது. இதனால், இவர்கள் பெரியவர்க ளான பின்பு, தன் வயதை ஒத்த ஆண்களின் மனோபாவம் பிடி படாமல் போகிறது. இதனாலே கம்பீரமான, தன்னம்பிக்கையான, ஆளுமைப் பண்புடன் விளங்கும் ஆண்களைக் கண்டால், இவர்க ளுக்கு ஒருவித பிரமிப்பும், ஈர்ப்பும் ஏற்படுகிறது. உனக்கும், உன் நண்பன் மேல் இத்தகைய ஈர்ப்பு தான் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பெயர் காதல் இல்லை.

இப்படி எல்லாம் ஒரு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, தான், பல வீடுகளில் அப்பாமார்கள், ‘இவன் வயசு பசங்க எல்லாம் கிரவுண்ட்ல விளையாடிக்கிட்டு இருக்கையில், இவன் என்ன பொம்பளப் பிள்ள மாதிரி வீட்டையே அடைக்காத்துக் கிட்டிருக் கான்…’ என, திட்டுவர்.

மகனே… நீதிக் கதைகளையும், அறநெறிக் கதைகளையும் நீ, ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுள்ளாய். அதை மனதில் இருத்தி, வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அறிவை நீ பெறவில் லை என்பதையே, நட்புக்கும், காதலுக்கும் வேறுபாடு காண முடி யாத உன் அறியாமை காட்டுகிறது.

சரி… உன் விஷயத்திற்கு வருவோம்…

உன் ஈர்ப்பு எல்லைமீறி, ‘செக்ஸ்’ வரை போகவில்லை என்பது, ஆறுதலான விஷயம். உனக்கு, அவன் மீது இருக்கும் ஈர்ப்பு, அவ னுக்கு, உன்னிடம் இல்லை. உன் ஒரு தலைராகத்தை அவனிடம் கூறி, தேவையற்ற அவமானங்களை தேடிக் கொள்ளாதே. ஆயுட் காலம் முழுக்க, அவன், உன் பல நண்பர்களில் ஒருவன் என மட்டும் பாவி.

வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கிறாய். பெற்றோரிடம் தகுந்த வரன் பார்க்க சொல்லி, திருமணம் செய்து கொள். மனை வி மூலம் கிடைக்கும், ‘செக்ஸ்’ ஒரு பால் ஈர்ப்பை, நீர்க்குமிழி போல் ஆக்கிவிடும். ஜூனியர் மீதான காதல், வானவில் போன்று நிலையற்றது. கடவுள் தன்னுடைய படைப்பு தொழிலுக்காக, மரம், செடி, கொடி மட்டுமல்ல, புல், புழுவில் கூட ஆண் – பெண் இனத்தை படைத்து வைத்துள்ளார். அந்த படைப்பு ரகசியத்தை அனைத்து உயிர்களும் மதித்து நடக்கையில், மனிதர்களான நாம் தான் மீறத் துணிகிறோம்.

இயற்கைக்கு புறம்பான எதுவுமே அழகானதாகவும் இருந்ததில் லை; நிரந்தரமானதுமல்ல என்பதை புரிந்து கொள்.

உன் நண்பனையே அல்லும் பகலும் நினைத்து, காமத்தில், உன் ரத்தத்தை விஷமாக்காதே… இந்த உலகத்தில் கவலைப்பட எவ்வ ளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஓய்வு கிடைக்கும் போது, அருகில் இருக்கும் ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் இல்லங்களுக் கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்று பார்… வாழ்க்கை ஒவ் வொருவருக்கும் எத்தனை போராட்டமாக இருக்கிறது என்ற நித ர்சனத்தை அறிவாய்.

தினம் கண்ணாடி முன் நின்று, ‘நான் கம்பீரமானவன், அழகானவ ன், இயற்கைக்கு கட்டுப்பட்டவன்…’ என, உன்னை நீயே சுயவசிய ம் செய்து கொள். இசையை ரசி; குப்பை போன்ற புத்தகங்களை படித்து, மனதை குப்பையாக்கிக் கொள்ளாமல், நல்ல புத்தகங்க ளை தேடிப் பிடித்து வாசி. மனதை எப்போதும், சந்தோஷமாகவு ம், இலகுவாகவும் வைத்துக் கொள்.

மகனே… அசைவம் சாப்பிட ஆசை என்றால், சிக்கனோ, மட்ட னோ சமைத்து சாப்பிடலாம். தன் விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட்டால் சரியாகுமா… தன் மாமிசத்தை தானே சாப்பிடுவதும், ஒரு பால் புணர்ச்சியில் ஈடுபடுவதும் ஒன்று தான். இயற்கைக்கு முரணான விஷயங்களில் கிடைக்காத குழந்தை செல்வங்கள், முறையான உறவில் தான் கிடைக்கும். குழந்தைகள் தான், ஆண் – பெண் வாழ்க்கையின் அர்த்தங்கள். அதனால், நிழலை காம முறுவதை விடுத்து, பெண்மையில் மூழ்கி, முத்தெடு!

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: