Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாலைமலர் இணையத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய்தி இது!

மாலைமலர் இணையத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய்தி இது! – மாலைமலர் இணை யத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய் தி இது!

கோவை மாவட்டம், உடுமலைபே ட்டைஅமராவதி பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). இவர் கேரளா மாநிலம் மூணா று மாட்டுப்பட்டியில் உள்ள ஒரு பால்பண்ணை யில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு அவர் அமராவதியில் இருந்து உடுமலைக்கு

சென்றார். பின்னர் அங்கிருந்து மூணாறு செல்வதற்கு கேரளா அரசு பஸ்சில் ஏறினார். அப் போது மறையூர் மாசிவய லை சேர்ந்த வடிவேல்(28) என்பவர் மனைவியுடன் அந் த பஸ்சில் ஏறினார்.

ஏற்கனவே வடிவேல் இடம் பிடித்து இருந்த இருக்கையி ல் சுப்பிரமணியன் அமர்ந்து இருந்தார். எனவே அவரை வேறு இருக்கையில் அமரும் படி வடிவேல் கூறினார். சுப்பிரமணியன் மறுக்கவே தகராறு ஏற் பட்டது. இறுதியில் வடிவேல் மனைவியுடன் வேறு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். கோபம் தணியாமல் இருந்த வடி வேல் தன்னுடைய ஊர் வந்ததும் இறங்கி மனைவியை வீட்டில் விட்டு அரிவாளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றார்.

மறையூர் லக்கம் நீர்வீழ்ச்சி பகுதியில் சென்ற போது பஸ்சை முந்தி சென்று மறித்தார். டிரைவரும் வேறு வழியின்றி பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய வடிவேல், சுப்பிரமணியனை வெட்டினார். கையில் பலத்த வெட்டுப்பட்ட சுப்பிரமணியன் தப்பித்து ஓட முயன்றார். ஆத்திரத்தில் இருந்த வடிவேல் அவரை பிடித்து சரமாரியாக வெட்டினார்.

இதில் சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனை பார்த்த பயணிகள் அலறியடித்து கொண்டு பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். வடிவேல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதுகுறித்து பஸ் மறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தப்பி சென்ற வடிவேலுவை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: