Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இ ஃபைலிங் முறையில் வரித் தாக்கல் செய்வது எப்ப‍டி?

இ ஃபைலிங் முறையில் வரித் தாக்கல் செய்வது எப்ப‍டி?

ஒருவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர் வரிக்க ணக்கை எலெக்ட்ரானிக்முறை யில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம்.

இ-ஃபைலிங் செய்ய ஆரம்பிக்கு ம் முன், பான் கார்டு, ஃபார்ம் 16 (கம்பெனி வழங்கியது), ஃபார்ம் 16 ஏ (சம்பளம், ஃபிக்ஸட் டெபா சிட் போன்றவற்றுக்காக

டிடிஎஸ் பிடித்துக் கட்டப்பட்ட விவர ம்), வங்கிக் கணக்குகளின் மொத்த பரிமாற்ற விவரம், மூலதன ஆதா ய விவரம், வீட்டு வாடகை வருமானம், வரிச் சலுகைக்கான முதலீடு மற்று ம் செலவு விவரங்கள் போன்றவற் றைத் தயார் செய்து கொள்ள வேண் டும்.

இஃபைலிங் செய்ய இந்தியவருமான வரித் துறையின் இணைய தளமான https:// incometaxindiaefiling.gov.in/ க்கு சென்று பான் எண் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டு ம். ஏற்கெனவே பதிவு செய்தவர் கள் லாகின் செய்து உள்ளே சென்றுவிடலாம். சரியான படிவ த்தைத் தேர்வு செய்து, வரிக் கணக்கை தாக்கல் செய்வதற் கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

டவுன்லோடு செய்த படிவத்தில் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும். உங்களின் டிஜிட்டல் கை யெழுத்தை இ-ஃபைலிங் செய்ததற்கு ஆதாரமாக ஐடிஆர்V படிவம் கம்ப்யூட்டர் திரையி ல் தோன்றும். டிஜிட்டல் கையெழுத் து இல்லை என்றால் ஐடிஆர் V படிவத்தை பிரின்ட் எடுத்து கை யெழுத்துப்போட்டு உரிய‌ முகவரிக்கு சாதாரண தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அக்னாலெட் ஜ்மென்ட் இல்லாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் இ-ஃபைலிங் முறை யில் வரிக்கணக்கு தாக்கல்செய்யும் போது, டிஜிட்டல் கையெழுத்து பய ன்படுத்த வில்லை என்றால் இந்தப் படிவத்தை பெங்களூரில் உள்ள சிஇ சி அலுவலகத்துக்கு 120நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டு ம். இது பெங்களூரு அலுவலகத்துக்குச் சென் று சேராத வரையி ல் நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்தது கணக்கில் வராது.

இந்த இ-ஃபைலிங் செய்ய சுமார் 25 நிமிட ங்களே ஆகும். தவிர, இ- ஃபைலிங் முறையி ல் வரிக் கணக்கு தாக்கல் செய்தால் ரீஃ பண் ட் விரைவில் கிடைக்கும். மேலும், ஆடிட்டர் கள் மூலமும் இ-ஃபைலிங் செய்ய முடியும். இந்த வேலையை செய்துதர பல இணையத ளங்கள் இருக்கின்றன.

அவை கட்டணமாக சுமார் 250 ரூ பாய் தொடங்கி குறிப்பிட்ட தொ கை வரை வாங்குகின்றன. மொத் தமாக ஒரு நிறுவனத்தில் உள்ள அனைவரும் வரிக்கணக்கு தாக்க ல் செய்யும்போது இந்தக் கட்டணத் தில் சலுகை அளிக்கிறார்கள். இவ ர்களிடம் உங்களின் படிவம் 16 கொ டுத்தால் போதும். அவர்கள் உங்கள் சார்பாக

இ- ஃபைலிங் செய்துவிடுவார்கள். பெங்களூ ரில் உள்ள மத்திய பரிசீலனை மையத்துக்கு (சி.பி.சி) ஐ.டி.ஆர். V கூட அவர்களே அனுப்பி வைத்துவிடுவார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍!

Leave a Reply