Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராமாயணத்தில் ராமனுக்குப் பெயர் வைத்தவர் யார்? அரிய தகவல்!

ராமாயணத்தில் ராமனுக்குப் பெயர் வைத்தவர் யார்? அரிய தகவல்!

ஆண் குழந்தைக்கு ‘சிவசாமி’ என்று தன் அப்பா பேர் வைக்க, தகப்பனார் ஆசைப்பட்டார். ‘கிரு ஷ்ணசாமி’ என்ற தன் அப்பா பேர் சூட்ட, மனை வி ஆசைப்பட்டார். ஆசை, சண்டை வரைபோ னது. எதிர்வீட்டுக்காரர் உ ள்ளே வந்தார். பிரச் னைக்குத் தீர்வு சொன்னார். ‘சிவராமகிருஷ்ண ன் என்று பேர் வைத்தால் சிவசாமி, கிருஷ்ணசாமி இரண்டு சாமியும் வந்து விடுவார்கள்!’ என்றார். ஒரே சந்தோஷம்!

ஒரு வாரம் கழித்து

கணவன் – மனைவி பேசிக்கொண்டிருந் த போது, ‘சிவராமகிருஷ் ணன்’ என்ற பே ரைப்பற்றி ஆராயத் தொட ங்கினார்கள்.

”சிவசாமி எங்க அப்பா. கிருஷ்ணசாமி உங்க அப்பா. நடுவுல ராமசாமி வந்துட் டாரே? அவரு…” என்று கணவர் இழுத் தார்.

”அதுவா… ராமசாமி, எங்க அப்பா!” என் று எதிர் வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.

ஒரு குழந்தைக்கு யார் பேர் வைக்கலா ம்? அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அப்பா-அம்மாவைப் பெற்ற அவர்கள் அப்பா-அம்மா பேர் வைக்க லாம். அல்லது அவர்கள் ஸ்தானத்தில் இரு க்கிற மாமா, பெரியப்பா, சித்தப்பா பெயர் சூ ட்டலாம். கண்டவனும் பெயர் வைக்கலா மோ?

பெற்றவர்களைத் தவிர வேறு யார் பேர் வைக்கலாம் என்றால், அவர்களின் குரு, குலகுரு, ஆச்சார்யர்களுக்கு இந்த உரிமை உண்டு.

உயிர் அல்லது ஆன்மாவை நமக்குப் புரிய வைப்பவர் குரு, ஆச்சா ர்யர். ‘உயிர் இறைவனே’ என்று உணர்த் தி, முக்திக்கு வழிகாட்டும் குரு, இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கத் தகுதி உடையவர்.

உடம்பு ப்ளஸ் உயிர் சேர்ந்த கூட்டணிக் கு, உடம்புக்கு உரிமை உடைய பெற்றோ ர் அல்லது உயிருக்கு உடைமை உடைய குரு… இவர்கள்தான் பெயர் வைக்கலா மே ஒழிய, தெருவில் போகிற, வருகிற வர் எல்லாம் பெயர் வைப்பது நல்ல கலாசாரமாகத் தோன்றவில்லை.

ராமாயணத்தில் ராமனுக்குப் பேர் வைத்தவர் யார் தெரியுமோ? வசிஷ்டர். பரதன், லட்சுமணன் , சத்ருக்னன் என்று தசரதன் பிள்ளைகளுக்குக் குலகுரு வசிஷ்டர்தான் பேர் வைத்தார். இதிலிரு ந்து என்ன தெரிகிறது? அரசியல் தலைவனுக்கு க்கூட குருதான் பேர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?

இராமன் எனப் பெயர் ஈந்தான்…
பரதன் என்று பன்னினான்…
இலக்குவன் என்று இசைத்தனன்…
சத்ருகனன் என்று சாற்றினான்…
என்கிறது கம்ப ராமாயணம்.

நான்கு வேதம் மாதிரி பிறந்த நான் கு அரச குடும்பத்துத் தலைவர்களுக்கு ம் நான்மறை பயின்ற குலகுரு வசிஷ்டர் பேர் வைத்தார். அதனா ல்தான், இன்றுவரை அந்தப் பெயர்கள் நிலைத்து நின்று ள்ளன.

ஞானம், தவம், சீலம், நிறைநலம் மிக்க குருமார்கள், பிறந்த சிசுக்களைத் தீண்டி, செவிவழி உரக்கச் சொல்லி, உடம்பும் உயிரும் சேர்ந்த கூட்டணிக்குப் பெயர் வைக்கும் பாரத மரபைப் பாதுகாக்க வேண்டி யது நமது கடமை.

– நிகழ்ச்சி ஒன்றில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் உதிர்த்த‍ சில வரிகள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: