Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணின் உயிரைப் பறிக்கும் கருத்தரிப்புக்கள்! அதிர்ச்சித் தகவல்!

பெண்ணின் உயிரைப் பறிக்கும் கருத்தரிப்புக்கள்! அதிர்ச்சித் தகவல்!

கருக்கட்டல் அதாவது ஆணி ன் விந்தும் பெண்ணின் முட் டையும் சேர்வது கருப்பைக்கு வெளியே உள்ள பலோப்பியன் குழாய் போன்ற அமைப்பிலா கும்.இவ்வாறு கருக்கட்டப் பட்ட நுகம் எனப்படும் சிசுவின் ஆரம்ப நிலை அந்தக் குழாயி ன் ஊடாக கருப்பையின் உட்ப குதியை அடைந்து கருப்பையின் உட் புறத்தில் ஒட்டிக் கொண்டு வளர்ச்சியடையும். இதுவே சாதாரணமாக

எல்லோரிலும் நடைபெறும் செய ன் முறையாகும்.

சிலவேளைகளில் கருக்கட்டப் பட்ட சிசு கருப்பையின் உற்பகுதி க்கு வராமல் பலோப்பியன் குழா யினுள்ளே தங்கி விடலாம் அல் லது பலப்பியன் குழாய்க்கு வெளி யே வயிற்றுக் குழிக்குள் அல்லது சூலகத்திலே சென்று ஒட்டிக் கொள்ளலாம்.

இதுவே கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல் (Ectopic pregnancy) எனப்படுகிறது.

இந்த நிலைமை ஏற்பட்ட பெ ண்களிலே கரு வளர வளர அதற்குரிய போதிய இடம் கி டைக்காமல் போவதால் அது வெடிக்கலாம்.இது Ruptured ectopic pregnancy ( கருப் பைக்கு வெளியேயான கரு வெடிப்பு ) எனப்படும்.

இது சில நிமிடங்களிலேயே உயிரைப் பறித்து விடக்கூடிய பாரதூரமான நிலையாகும்.

ஆகவே கரு வெடிப்புக்கு முன்ன மே இதை கண்டு பிடிப்பது அவசி யமாகும்.

சாதாரணமாக வெடிப்படைவதற்கு முன் இது சிறிதளவு நோவினை (வயிற்று வலியினை) ஏற்படுத்தும் .இந்த நேரத்தில்உடனடியாக வைத் தியரை நாடுவது அவர்களின் உயி ரை இலகுவாக காப்பாற்றி விடும்.

ஆனாலும் சில பெண்களிலே ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல் லாமலேயே இந்த வெடிப்பு ஏற்படலாம். அவர்களும் மிகவும் விரைவாக வைத்திய சா லைக்கு செல்வதன் மூலம் உயிரைக் காப்பாற்றிக் கொ ள்ள முடியும்.

எவ்வாறானா சந்தர்ப்பத்தி ல் நாம் கருப்பைக்கு வெளி யேயான கருத்தரித்தல் ஏற் பட்டிருக்கலாம் என்று சந் தேகிக்க வேண்டும்?

உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எந்த பெண்ணும் தனக் கு அடிவயிற்று வலி ஏற்படும் போது முதலில் கவனத்தில் கொள் ளவேண்டியது இந்த நிலைமை யைத்தான். அதுவும் மாதவிடாய் பிற்போன பெண்கள் அல்லது கர் ப்பம் உண்டாகியுள்ளதாக சிறுநீர் மூலம் உறுதி செய்து கொண்டா லும் இதுவரை ஸ்கேன் செய்து கொள்ளாத பெண்கள் தங்களு க்கு வயிற்று வலி வந்தால் முத லில் கவனத்தில் கொள்ள வேண் டியது இந்த நிலைமையைத்தான்.

யாருக்கு இந்த நிலைமை ஏற்படுவதற்கான சந்தர்ப்ப ம் அதிகம்?

1.வயிற்றிலே முன்பு ஏதா வது சத்திர சிகிச்சை செய் து கொண்ட பெண்கள்

2.கருப்பை அலர்ச்சி அல்ல து பலோப்பியன் குழாய் அலர்ச்சி ஏற்பட்ட பெண்க ள்

3.கர்ப்பத்தடை லூப் போட் டுக் கொண்டபின் தவறுதலாக கரு உண்டான பெண்களிலே இந்த நிலை ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.

மேலும் ஏற்கனவே இந்த நிலை மையால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு அடுத்த முறையும் இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிக மாகும்.

இருந்தாலும் இவை எதுவுமே இல்லாத சாதாரண பெண்களி லே கூட இது ஏற்படலாம்.

இதன் ஆரம்ப அறிகுறிகள் எவை?

பொதுவாக இது கருத்தரித்து மூன்று மாத காலத்துக்குள்ளே யே பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரம்ப அறிகுறியாக பிற்போன மாதவிடாயுடன் தொடர்ச்சியா ன அடி வயிற்று வலி ஏற்படும்.

சில பெண்களிலே சிறிதளவா ன இரத்தம் பிறப்பு வழியூடாக வெளிவரலாம்.

சற்று தீவிரமடையும் போது மயக்கமடையும் உணர்வு, மூச்செடு க்கச் சிரமம் , தோள்ப்பட்டை வலி போன்றவை ஏற்படும்.

மேலே சொன்ன அறிகுறிகள் ஏற்படுவது கரு வெடிப்பதற் கு முன் கொஞ்சம் கொஞ்ச மாக இரத்தக் கசிவு ஏற்படுவ தால் ஏற்படுப வை.

கரு வெடிக்கும்போது சடுதி யாக அதிகரித்த வயிற்று வ லியுடன் மயக்கமடையலா ம். அந்த நிலையிலே சில நி மிடங்களிலே கூட உயிர் இழ ப்பு ஏற்படலாம்.

ஆகவே உடலுறவில் ஈடுப டும் எந்தக் பெண்ணும் வழ மைக்கு மாறாக வயிற்று வலி ஏற்படும் போது உடன டியாக வைத்தியரை நாடி இந்த நிலைமை இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமைக்கு அனே கமாக சத்திர சிகிச்சையே தீர்வாக அமையும். இருந்தாலும் இர த்தக் கசிவு ஏற்பட முன்னமே மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் இரசான மருந்து கள் மூலம் கரு சிதைக் கப்படலாம்.

சத்திர சிகிச்சை வயிற்றை வெட்டுவதன் (Laparotomy) மூலம் அல்லது குழாய் போன் ற அமைப்பி உட்செலுத்தும் லப்பிராஸ் கோ ப்பி (Laparascopy) முறை மூலம் மேற்கொள் ளப் படலாம்.

இதை நோயின் தீவிரத்தைப் பொறுத்து வைத்தியரே தீர்மானிப்பார்.

ஒருமுறை இந்த நோயி னால் பாதிக்கப் பட்ட பெ ண்களுக்குமீண்டும் ஏற் படுவதற்கான சந்தர்ப்ப ம் அதிகம். ஆகவே அடு த்தமுறை கருத்தரித்த வுடன் ஸ்கேன் செய்து கரு கருப்பையின் உள் ளேதான் தங்கியுள் ளது என்பதை ஆரம்பத்திலே யே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: