Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்ரீராமரின் அழுகையும், லட்சுமணனின் திகைப்பும் – ஓர் அரியதொரு செய்தி

ஸ்ரீராமர்! கண்ணீர் விட்டு அழுத காட்சியும்! லட்சுமணன் செய்வ தறியாது திகைத்த‍ காட்சியும்! – ஓர் அரிய நிகழ்வு

இராவணன், சீதாவை வலுக்கட்டாய மாக கடத்திக்கொண்டு போகும் போ து, சீதையை மீட்கும் பொருட்டு இரா வணனுடன் போரிட் டு வீர மரணம் அடைந்த ஜடாயு, இராமரிடம் சீதை யை இராவண ன்தான் கடத்திக் கொ ண்டு போனான் என்பது சொல்லிவிட் டு இறந்து விட்டது. ஸ்ரீராமரும் ஜடாயு வின் இறுதி சடங்கை தானே நடத்தி னார்.

அதன்பின் அனுமனை அனுப்பி கட லைத் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறா ன் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக்கூறினான். அதே போல

எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள்.

ஸ்ரீலங்காவில் அனுமனின் காலடித் தடம் பதிந்த பாறை இது

பகவானிடம் அவன் கொண் டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலை த் தாண்டி இலங்கையை அடை ந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான் .கடைசியாக அசோக வனத் திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீ ராமரை நினை த்து வருந்தி அழுது கொண்டிரு ந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தி னார். அவளைச் சுற்றி காவலில் இருந்த பெண் கள் அயர்ந்து தூங்கிக் கொண்டி ருந்தபொழுது சீதாதேவியை நேரில் பணிந்துதொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். மேலும் தங்களைத் தான் நான் தேடி வந்துள் ளேன், அதற்கு அடையாள மாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியை க் கொடுத்து வணங்கினா ன். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டாள் சீதா. எம் பெருமானுடைய கணை யாழியைப் பெற்று மகிழ்ந் த சீதா தன்னிடமிருந்த சூடா மணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எ டுத்துக் கூறி, பிரபுவை தயவு செய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண் டாள். அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்ப வில்லை. ராவணன் கோட் டைக்குள் இருக்கிற நிலை மையையும் தெரிந்து கொ ண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோ கவனத்தை அழிக்கும் வேலை யில் இறங்கி னான். இந்த சேதி ராவணன் காது க்கு எட்டியது. உடனே அந்த வான ரத்தை பிடித்து வருமாறு தன் பேர னும், தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமை யில் ஒரு சேனையை அனுப்பினா ன். அனு மன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்து விட் டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோக வனத்திற்கு வந்தான். அவன் தன்னு டைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவ னைப் பார்த்து ராவணன், அத் துமீறி அட்ட காசம் செய்யும் வானரமே நீ யார்? என்று வின வினான்.

என் பெயர் அனுமன். நான் கோ சலை நாட்டு மன்னன் ஸ்ரீராம னுடைய தூதன். அதோடு கிஷ் கிந்தை அரசன் சுக்ரீவனுடை ய தாசன் என்று தன்னை அறி முகம் செய்து கொண்டு, மேலும் ராவணனிடம் ஹே! ராவணா! நீ புத்திகெட்டுப் போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திரு க்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ் ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தரு வார்! என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொ ன்றுவிடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன். உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய் து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங் கள் என்று கட்டளை இட்டா ன். அனுமனோ வாலில் எரிந்த நெ ருப்பைக் கொண்டு இலங்கை யை எரித்து விட்டு மகேந்திர மலைக்கு திரும்பினான். அங்கி ருந்து எல் லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை! என்று அனுமன் ஸ்ரீ ராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடா மணியைக் கொடுத்தான். தேவியின் சூடா மணியைக் கண்டதும் ராமர் கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுதார். இதைக்கண்ட லட்சு மணன் உட்பட அனைவ ரும் இராமரை எப்ப‍டி தேற்றுவது என்று செய் வதறியாது திகைத்த னர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: