Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், உடலழகை பேணிக் காத்திட இயற்கை முறை அழகு குறிப்புக்கள்

பெண்களின் உடலழகை பேணிக் காத் திட இயற்கை முறை அழகு குறிப்புக்கள்

தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப் படுத்திக்காட்டுவதில் பெண்களுக்கு அதி க ஆர்வமும், போட்டியும் இருக்கிறது.. ஒவ்வொருவரும் தன்னைவிட அழகான வர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே  கதாநா யகியாக உருவகித்துக் கொண்டு வாழ்ந் துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொது வான எண்ணங்கள்தான். இருப்பினும் இயற்கையை மீறி

சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்து ப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.. இயற் கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.

இயற்கையான அழகு குறிப்புகள்

முதலில்நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதிநோ ய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த் திருப்போம். காரணம் மனிதர் களுக்கு கிருமிகள் பெரும்பா லும் கை களின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்து கிறது. அதனால் தான்கைக ளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் எ ன்றும், அடிக்கடி நகத்தை கடிக் க கூடா தென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்க ள்.

நகத்தைப் பராமரிக்க:

பாலில் பேரிச்சம் பழத்தை கலந் து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணை யை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக் கும்.

இதழ்களை பராமரிக்க:

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்க ளுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவ தைப்போல அழுத்தி தேய்த் து வந்தாலே போதும். உங்க ளுக்கு இயற்கை கொவ் வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும். பலரையும் கவ ர்ந்திழுக்கும் இயற்கையா ன செந்நெறி உதடுகளைப் பெறலாம். கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

முகத்தைப் பராமரிக்க:

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்ன வோ சுலபமான வேலைதான். நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். பயற்ற ம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச் சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி. இந்த இர ண்டு முறைகளை நீங்கள் பின்பற்றி னாலே உங்கள் முகம் “பளிச் பளிச்” போங்க..!

கழுத்தை பராமரிக்க:

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இது தான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரி ந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். சிறிதளவு ரோஸ்வாட்டர், சி றுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசி விடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழு த்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொட ர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க:

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளு ங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சரு மம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கரு மை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததை விட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

கருவளையம் நீங்க:

கருவளையம் என்றாலே கண்ணு க்கு கீழ் உள்ள கருவளையத்தைத் தான் குறிக்கும். கருவளையம் நீங் க இதுதான் சிறந்த வழி. வெள்ளரி க்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப் போல (Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதி யில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளை யம் இருந்த இடம் காணா மல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க:

சிலருக்கு முகத்தில், மூக்கி ல், கண்ணங்கள் என அசிங் கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடு வார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங் கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப் போல தடவுங்கள். சில முறை இந்த முறை யை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தி ல் உள்ள அசிங்கமான மங்கு (கருந்திட்டு) மறைந்துவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: