Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸில் விந்து முந்தி வந்து விடுவதற்கான "உயிரியல் காரணங்களும் மனோவியல் காரணங்களும்"!

கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கி றது. ஆனால், இருவருமே வெளிப்படையாக ப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச் சினை? ‘ என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?

விந்து முந்துதல்.

இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதி க்கும் பாலியல் பிரச்சி னையாகும். இதனா ல், தங்கள் ஆண்மையே பாதிப்புக்கு உள்ளா கிவிட்டதாகவும் மனைவியைத் திருப்திப்படு த்த முடியவில்லையே எனவும் பல ஆண்கள் மனம் புழுங்குகிறார்கள். இயலாமையால் ஆற்றாமையால்

மனப்பதற்றம், சோர்வு போன் றவற்றுக்கும் ஆளாகிறார்கள்.

அதேநேரம், அவர்கள் மனைவி மாரோ ` இவர் தன்ரை வேலை முடிந்ததும் நடையைக் கட்டி விடுகிறார். என்னைக் கவனிப் பதில்லை ‘ என மனத்திற்குள் சினம் எழத் தவிக்கிறார்கள். மெல்லவும் முடியாமல் விழுங் கவும் முடியாமல் இருவருமே துன்புறுகிறார்கள்.

இது ஒரு பரவலான பிரச்சினை ஆன போதும் இதற்கான அடிப்ப டைக் காரணம் தெளிவாகப் புரி யவில்லை. இருப்பினும் உயிரி யல் காரணங்களும் மனோவி யல் காரணங்களும் இணைந் தே இருப்பதை வைத்தியர்கள் உணர்கிறார்கள். இதனால்தான் , இதற்கான சிகிச்சையும் கூட பல் வழிப்பட்டதாகவே அமைகிறது.

உறவின் போது நிதானத்தைக் கடைப்பிடித்து, செயல் முறைகளி ல் துரித ஸ்கலிதத்திற்கு இடம் அளிக்காத மாற்று முறைகளைக் கையாள்வது நல்ல பலனைக் கொடுக்கிறது. இதுதவிர சில மரு ந்து மாத்திரைகளும் பயன்படுத்த ப்படுகின்றன.

இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது. விந்து முந்தும் பிரச்சினை உள்ள ஆண்களின் உறு ப்பின் முனையில் உள்ள மொட்டுப் பகுதியானது ஏனைய வர்களதை விட தூண்டப்படும் போது கூடியளவு உணர் வினை த்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு மருந்துகள் ( Topical anaesthetics) உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர் நிலையை ( Sensitivity ) சற்றுக் குறை ப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாம த ப்படுத்துகின்றன.

ஆயினும், விந்து வெளியாகும் உணர்வையோ, திறனையோ பாதிப் பதில்லை. பாவனையில் உள்ள இம் மருந்துகளின் ஆற்ற ல் பற்றிய சிறப்பான ஆய்வுகள் செய்யப்படாதபோதும் கிடைக் கும் ஆய்வு முடிவுகளானது இ வை ஓரளவு செயற்திறன் கொ ண்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

களிம்பு மருந்துகளைவிட விசிறப்படும் (Spray) மருந்துகள் உபயோ கிப்பதற்கு சுலபமானவை. அத்துடன், விசிறியவுடன் உலர்ந்து விடு வதால் பாவிப்பதும் வெளிப்படையாகத் தெரியாது. இது உறுப்பை மருந்தால் அசிங்கப்படுத்தவோ மனத் திடத்தை குறைக்கவோ செய் யாது என்பது சில நன்மைகளாகும். பக்க விளைவுகள் குறைவு என் பதும் தேவை ப்படும்போது மட்டும் உபயோகி த்து விட்டு நிறுத்தி விடலாம் என்பவையும் மேலதிக சிறப்புக ளாகும்.

ஏற்கனவே இத்தகைய பல மரு ந்துகள் பாவனையில் இருந்த போதும் புது மருந்துகள் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் செயற்திற ன் பற்றிய களப் பரிசோதனைகளும் இப்பொ ழுது செய்யப்படுகின்றன. இப்பிரச்சினைக்கா ன சிகிச்சையின் முதற்படிச் சிகிச்சை முறை யாக மாத்திரமன்றி மிகப் பொருத்தமான சிகி ச்சை முறையாகவும் இதுவே எதிர்காலத்தில் நிலை க்கும் எனவும் நம்பப்படுகிறது.

போட்டிகளின் போது முந்துவது முந்துபவரு க்கு மட்டுமே எப்போதும் வெற்றியையும் மகி ழ்ச்சியையும் கொடுக்கும். ஆனால், குடு ம்ப வாழ்வில் முந்துவதை விடவும் பிந் துவதை விடவும் இணைந்து ஓடுவதில் தான் இருவ ருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும்.

ஆனால், கணவன் மனைவி இடையே நம்பிக்கையும் புரிந்துணர்ம் விட்டுக் கொடுப்புகளும் நிலவினால் முந்துவ தும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போ கும் என்பதே நிஜமாகும்.

– டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: