Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு: அழகாக, ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புக்கள்

1.மூக்கு மேல ப்ளாக்ஹெட்ஸ் இருக் கா? 

மூக்கும் முழியுமாக பெண் இருக்கி றாள் என்பார்கள். அந்த அளவிற்கு முகத்தின் அழகிற்கு மூக்கு மிக முக் கியமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மூக்கினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் முக த்தில் தேவையற்ற அழுக்குகள் படிந் து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்க மாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை

கூறுகின்றனர் அழகியல் நிபுண ர்கள். மூக்கின் பராமரிப்பு மிக வும் எளிது. வீட்டில் செய்து கொள்ளும் வழக்கமான பேஷி யல் கூட போதும்.மூக்கில் ஏற் படும் முக்கிய பிரச்சனை பிளா க் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படு ம். அதிக எண்ணெய் உணவுக ளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்ம ல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவு.

2.மூக்கிற்கு மசாஜ்:

முகம் அழகாக இருந்து மூக்கு மட்டும் பிளாக் ஹெட்ஸுடன் இருந்தால் சிரம மாக இருக்கும். எனவே மூக்கின் பிரச் சினையை தீர்க்க முறையான கவனி ப்பு அவசியம். நாள்பட்ட பிளாக் ஹெட் ஸுக்கு மிகவும் சரியான சிகிச்சை, ஆவி பிடித்தல் தான். வீட்டிலேயே பே ஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெ ய்ப் பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலு ம், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திர த்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்கவேண்டு ம். இப்போ து வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களி ல் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷிய ல் கிட்டில் இருக்கும்.  கிடைக்கா விட் டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனி ன் முனை கொண்டு நீக்கலாம்) மெது வாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடுவரும் பிளாக்ஹெட்ஸை  டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக அகற்றி விடலாம். இப்போது குளிர்ந்த நீரால் மூக்கி னை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றா லும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண் ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

3.பிளாக் ஹெட்ஸ் நீக்கம்:

கடைகளில் விற்கும் பிளாக் ஹெட் ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்க ளாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியா து. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழு தும்நீக்கிவிட்டு) வழக்கமான  பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம். வழக் க மாக வாரம் ஒரு முறை முகத்தி னை ஸ்க்ரப் செய்யும்போது மூக் கு பகுதியில், பக்கவாட்டில் மசா ஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.மூக்கின் உள்ளே ஒரு சில ருக்கு அதிகமாக முடிகள் இருந் து, வெளியில் லேசாக எட்டிப் பார் க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லே சாக ட்ரிம் செய்துவிடலாம்.  இத ற்கென்று பிரத்யேகமான கத்தரிக் கோலும் கடைகளி ல் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொது வாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதி கம் இருக்கும்.

4.குளிக்கும் போது கவனம்:

பெரும்பாலான பெண்களுக்கு மூக் கின் மீது சில வெண்ணிற திசுக்கள் வெளிவரும். இதனை நகங்களால் சுரண்டி பெரிய வடுக்களை ஏற்படுத்தி விடு வார்கள். மூக்கின் இரண்டு பக்கத் திலும் நமது நகங்கள் பட்டு பட்டு கருநிறமே வந்திரு க்கும். கடைக ளில் இதற்கென்று சில பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனா ல் அதெ ல்லாம் வேலைக்கு ஆகாது என்று எல்லோருக்கும் தெரியும். குளிக் கும் போது மூக்கின் மீது சோப்பினைப் போட் டுவிட்டு அதிகமாக 1 நிமிடம் மூக்கினை சுற்றி சுத்தம் செய்தால் போதும் . முக்கியப் பி ரச்சினை அகன்று போகும். இதனால் நமது தோலும் எந்த பாதிப் பும் அடையாமல், வர வேண்டிய திசுக்களும் வெளிவந்து விடும். தினமும் செய்ய வேண்டாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் கூட போதும் மூக்கின் கரும்புள்ளி ஒடியே போய்விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: