Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறப்பதற்கு முன் பிரபலங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள்

இறப்பதற்கு முன் பிரபலங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் –  இறப்பதற்கு முன் பிரபலங்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் 

உலகில் பிறப்புகளும், இறப்புக ளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கை யாக ஏற்றுக்கொள்கி ன்றன. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை எல்லா உயிர்களை யும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக் கொ ள்கிறது.

மனிதன் மரணிக்கும் போது


அவன் உதிர்க்கும் வார்த்தைக ள் மதிப்பு மிக்கவை. அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்ப து உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை. இங்கு சில பிரபல ங்கள் இறக்கும் போது சொன் ன வார்த்தைகள் கொடுக்கப்ப டுகின்றன.

*

ஜூலியஸ் சீசர்

ஜூலியஸ் சீசர், தான் சாகும்போது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, ‘யூ டூ புரூடஸ்?’ என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோ கத்துக்கு இன்னமும் இந்த வார்த்தை யைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும்போது கூறிய ‘ஹே ராம்’அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ”வைரவா விளக்கை அனைத்து விடு”என்பது தான்.

தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசனோ இறக்கும்போது கூறி யது விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை “விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் போது வெளிச்சம் இருக்கட்டு ம்”.

மன்னன் காலிகுலா

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலி குலா, கடைசியில் தன்னை பாதுகா க்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங் கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. “நான் இன்னும் இறக்கவில்லை.”

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, “இறை வா … நான் ஒரு குற்றமும் செய்யாதவன்”.

டயானா

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானா வின் இறுதி வார்த்தை, “கடவுளே என்ன நடந்தது எனக்கு?”

கிளியோபாட்ரா

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூ நாகத்தை பிடித்துக் கொண்டு, “ஆஹா… இதோ… என் முடிவு இங் கே இருக்கிறது” என்றார், கடைசியாக.

பீத்தோவன்

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கு ம்போது “நண்பர்களே கை தட்டுங்கள் … இந்த நகைச்சுவை நாடகம் இன் றோடு முடியப் போகிறது” என்றார்.

மேரி க்யூரி

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை “என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.”

பெஞ்சமின் பிராங்க்ளின்

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெ ரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், “இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடி யாது” என்றார்.

பாபர்

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதி வார்த்தை ”இந்தியாவி ல் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே” என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

வின்ஸ்டன் சர்ச்சில்

மரணம் அடைவதற்குமுன்பு 9நாட்களாக கோமாவில்இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சி ல். கோமாவில் விழுவதற்குமுன் பேசிய கடைசி வார்த்தை “எனக்கு எல்லாமே போர் அடிக்குது” என்பது தான்.

எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும் போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இரு க்கிறார்கள்.

‘நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது’ – அது தான் விதி.

அது தெரியாமல் இருப்பது தான் நன்று …. 

பிரபலங்களின் கடைசி வார்த் தையை படித்த எனக்கு அதை சிறப்பித்துச் சொல்ல வார்த்தை கள் வரவில்லை, இறந்தவர்கள் சொல்லிய அத்துனை வார்த் தைகளிலும் அவர்களின் இதய ம் பேசியிருக்கிறது. இதயம் பே சும் போதுமௌனம்; ஒன்றுமட்டுமே அதற்கு சரியான மரியாதையா க இருக்கமுடியும்.என் இந்த கருத்து தவறென்றால் மன்னிக்க வேண்டுகிறேன்

இதில் பெரும்பாலனவை கற்பனை வளத்துடன் இப்ப டித் தான் சொல்லியிருப்பார் என்பதாக ஊகித்து எழுதப்ப ட்டவை

உதாரணமாக மகாத்மா காந்தி குண்டடிபட்டதும்  ” uh, என சத்தமிட்டபடி விழு ந்து விட்டார்…. ஹேராம் என சொன்னார் என்பது காங்கிரசாரா ல் பின்னர் பின்னப்பட்ட கற்பனை…

டயானா விபத்தில் ஒரு நொடியில் இறந்து போனார்… அவர் சொன்னதாக உள்ள அந்த வாக்கியமும் கற்பனையே…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: