Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகளை பேயும், தாயும் உரிமை கொண்டாடும் திகில் படத்தில் கதாநாயகியான தோழி

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக் கென்று சில நண்பர்கள் இருப்பார்க ள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்க ளாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணா கரன், விஜய் சேது பதி யெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள் தான்.

அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர் கள் காமெடி நடிகையாகவோ

அல்லது ஹீரோயினாகவோ மாறுவார்க ள். தோழியாக இருந்து ஹீரோயின் ஆன வர்களில் த்ரிஷா முக்கியமானவர். அந்த வழியில் இப்போது ஹீரோயின் ஆகியிரு க்கிறார் மிஷா கோஷல். இதுவரை 20 க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தவர். கடைசியாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாகவு ம், வடகறி படத்தில் ஸ்வாதி தோழியாக வும் நடித்தார்.

தற்போது மூச் என்ற படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார். பாரதிராஜாவின் உதவியா ளர் வினு பாரதி இயக் குகிறார், பாரதிரா ஜாவின் தம்பி ஜெய ராஜ் முக்கிய கேரக்ட ரில் நடிக்கிறார். நித்தின் என்ற புது முகம் ஹீரோ. “இது திகில் படம் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு பேயும், தாயும் உரிமை கொண்டாடு கிறார்கள். இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை” என்கிறார் வினு பாரதி.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: