Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள்

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள்

சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.

அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல

முடியாது தங்களுக்குள்  மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனை வியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கி யம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார் கள்.

“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றி ஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.

இது பொய்யான செய்தி அல்ல. அமெரி க்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.

ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல்செய்து (stimulate) உணர்வெளுச்சியையும், இன்பத் தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் ப ண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுயஇன்பம் என்கி றோம்.

ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

இது தப்பான காரியம் அல் ல என்பதை மேலே சொன் னோம். ஆயி னும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடை யாளங் காணுங்கள்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனி மை, பொழுது போக்கின்மை, போன்றவை அணு காமல் தவிருங்கள்.

சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையு ங்கள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம், இசை வாத் தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலு த்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்ற வை உடலுக்கும் உள்ளத் திற்கும் நல த்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.

ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவ து உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

*

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • Shanmuga Sundaram

    all your sexual related informations are really vv good. more informative and creating awareness to every one thank you for this tips for Healthy relationship mutually.All the best.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: