Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூப்படைதல் என்பது மாதவிடாய் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில்லை! – ஒரு நீண்ட விளக்க‍ம்

பூப்படைதல் என்பது மாதவிடாய் ஏற்படுவதோடு நின்றுவிடுவதில் லை! – ஒரு நீண்ட விளக்க‍ம்! – ஒரு நீண்ட விளக்க‍ம்
பூப்படைதல் ஒரு நாள் நிகழ் வா ?

வெறுமனே உள்ளாடையில் உள்ள ரத்தக்கறையை வைத் துக்கொண்டே நம் பெண்கள் பூப்படைந்து விட்டார்களா இல்லையா என்பதை தீர்மா னிக்கும் சமூகமாகவே நாம் இன்னும் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தன் பிள்ளை பூப்படை ந்து விட்டதா என்று 12 அல்லது 13 வயதில்தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலைமை அதுவல்ல. முதன் முதலாய்

மாத விடாய் ஏற்படுவதல்ல பூப்படைதல். முதன் முதலாக மாத விடாய் ஏற்படுவது மெனார்க்கே (menarche) எனப்படுகிறது, இது பூப்டைதலின் ஒரு அங்கமே. இந்த menarche எனப்படுவது நாம் அறிந்தது போல11-12 வயதளவில்தான் ஆர ம்பிக்கிறது. ஆனாலும் பூப்படைதல் என்ற செயற் பாடு பெண்களிலே 8 வயதிலேயே தொடங்கி விடுகிறது.

நாம் நம் குழந்தைகள் இன்னும் பூப்டையவில்லை என்று வைத்திய ரிடம் அழைத்துச் செல்வது பெரு ம்பாலும் 15 வயதுக்குப் பிறகு தான். பாருங்கள் 8வயதில் நிகழ வேண்டிய ஒரு நிகழ்வு நிகழவி ல்லை என்று நாம் அறிந்து கொ ள்வது 15 வயதில்.

இன்னும் நாம் பின்னுக்கு நிற்கி றோம் என்பதில் எந்தச் சந்தேக மும் இல்லை.

ஆக பூப்படைதல் என்பது ஒரு நாளில் நடந்து முடியும் நிகழ்வ ல்ல. இது பெண்களிலே 8 வய தில் தொடங்கி 14 வயதில் முடி வடையும் ஒருநீண்ட கால தொடர் நிகழ்வாகும்.

பூப்படைதல் நிகழ்வில் என்ன நடைபெறுகிறது?

பூபடைதலின் போது ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து இள முதிர் பருவத்திற்குச் செல்கிறாள். அப்போது அவள் உடல் மற்றும் உளம் என்பவை பக்குவப்பட்ட முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாற் றப்படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ்வது ஹார்மோன்களால்.

பூப்படைதல் என்ற செயற்பாடு முதலில் ஆரம்பிப்பது மார்பக வளர்ச் சியோடு, பின் இது ஏற்கனவே சொன்னது போல கிட்டத்தட்ட எட்டு வயதில் ஆரம்பிக்கும். அதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணில் உடல் வளர்ச்சி சடுதியாக ஏற்படத் தொடங்கும் தொ டங்கும். அதைப்போல உடற்பருமனும் சற்று முதியவ ருக்கு உரிய வகையில் மாறும். குறிப் பாக இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரிக்கும்.

பின்பு கொஞ்சம் கொஞ்சமாக முதியவர்களில் காண ப்படுவது போ ன்ற மயிர் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண் உறுப்புக்கு மேல், மற்றும் அக்குள் பகுதிகளி லே. ஆரம்பத்தில் இந்த மயிர்கள் செறிவு குறைந்த தாக மெல்லியதாக இருந்தாலும் போகப் போக முதிர் நிலையை அடையும்.

இவ்வாறு 8 வயதில் ஆரம்பிக்கும் பூப்படைதலி ன் முக்கிய நிகழ்வான முதல் மாதவிடாய் பூப்ப டைதல் ஆரம்பித்து கிடத்தட்ட 2 வருடங் களின் பின்பே நிகழும். இந்த ஒரு தனி நிகழ்வைத்தான் நாம் பூப் படைதல் என்று கொண்டாடுகிறோம்.

மாதவிடாய் ஏற்படுவதோடு பூப்படைதல் நின்று விடுவதில்லை. நான் மேலே சொன்ன நடை முறைகள் தொடர்ந்து நடைபெற்று பூப் படைதல் நிறைவு பெறுவது 14 வயதில்.

அனேகமாக ஆரப்பத்தில் மாத வி டாய் ஒழுங்கு அற்றதாகவே இரு க்கும் . இது ஒழுங்காவதற்கு சில காலங்கள் செல்லாலாம். இது பற்றி பூரண அறிவு அந்தப் பிள் ளைக்கு தெளிவு படுத்தப்பட வே ண்டிய ஒன்று. இது பெற்றோரின் கடமை யாகும்.

இது தவிர முதன் முதலாக அந்தப் பிள்ளை செக்ஸ் பற்றி சிந்திக்கத் தொடங்கும். சுய இன்பம் போன்ற செயற்பாடுகளும் ஆரம்பிக்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: