Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என்றுமே நான் மாணவிதான்"! – மாணவி (நடிகை) மனிஷா

என்றுமே நான் மாணவிதான்! – மாணவி (நடிகை) மனிஷா யாதவ்

வழக்கு எண் பட்சத்தில் அறி முகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாத தால் அடுத்த பட வாய்ப்பு கிடை க்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் ஒப்பந்தமாகி, பின் னர் அதிலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார், இந்த நிலையில்

மனீஷா ரொம்பவும் நம்பிக் கொண்டிருப் பது எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி உள்ள பட்டைய கிளப்பணும் பாண்டியா படத்தை த்தான்.

இப்படம் இரண்டு வருடங்களுக்கு முன் பே தயாரானது. வழக்கு எண் படத்திற்கு பிறகு மனீஷா கமிட்டானது இந்தப் படத்தி ல்தான். பழனியிலிருந்து பாப்பம்பட்டிக்கு செல்லும் ஒரு மினி பஸ்சை மையமாக வைத்து இந்தப் படத்தை ராஜ்குமார் இயக்கி உள்ளார், இதில் பஸ் டிரைவராக விதார்த்தும், நடத்துனராக சூரியும் நடித்து ள்ளனர், பஸ்சில் பயணம் செய்து பக்கத்து ஊருக்கு படிக்கப்போகும் மாணவியாக மனீஷா நடித்துள்ளார்.

“வடிவேலுக்கு நான் எழுதிய காமெடிக ளை மக்கள விரும்பி ரசித் தார்கள், அதே போல இந்தப் படத்தையும் ரசிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன். மு்ன்று பேரை சுற்றி நடக்கிற காதல் காமெடி கதை. பட த்தில் மினிபஸ்சும் ஒரு கேரக்டராகவே நடித்துள்ளது. பல்வேறு சூழ்நிலைகள் கா ரணமாக படம் தாமதமாகிவிட்டது என்ற லும் இது எப்போது வெளிவந்தாலும் வெ ற்றி பெறக்கூடியது. அடுத்த மாதம் ரிலீசா கிறது” என்கிறார் இயக்குனர் எஸ்.பி. ராஜ;குமார்.

இப்படத்தில் மாணவி வேடம் ஏற்று நடிக்கும் மனிஷாவிடம் கேட்ட‍ போது, எனக்கு மாணவியாக நடிப்ப‍து பிடித்துள்ள‍து. ஏனென்றால், இந்த உலகத்தில் உள்ள‍ ஒவ்வொருமே எத்த‍ னை வயதானாலும் மாணவனாக மாணவியா கவே இருக்க‍ முடியும். ஏனென்றால், ஒவ்வொ ரு நாளும் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம் அவர்களிடமிருந்து சில நல்ல‍ குணங்களையும் சில நல்ல‍ பழக்க‍ங்களையும், சில தொழில் நுட்பங்களையும் தெரிந்து கொள் கிறோம் அல்ல‍வா? அதனால் என்றுமே நான் மாணவிதான் என்றார். மாண வி வேடம் ஏற்ற‍ இல்லை இல்லை மாணவியாக இருக்கும் நடிகை மனிஷா யாதவ்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: