Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பகுதிநேரத்தில் பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? – சில டிப்ஸ்

பகுதி நேரத்தில் பிடித்த தொழிலை துவங்குவது எப்படி? – சில டிப்ஸ்

சொந்தமாக தொழில் செய்ய வேண்டு ம் என்று கனவு காண்பவர்கள், அவர்க ளின் கனவை நனவாக்க முடிவதில் லை என்ற தவறான புரிதல் இருக்கிற து. இந்த தவறான புரிதல் பொய் மட்டு மல்லாது சிறிய வணிக சமுதாயத்திற் கு ஆபத்தாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு தொழில் முனைவர்க ளும் பெரு நகரங்களில் ஒரு சிறிய அலுவலகத்தில் அமர்ந்து,

விலை குறைவான உணவுகளை உட் கொண்டு, இரவு முழுவதும் கண் விழி த்து தன் தொழிலை பெரிதாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருப்பார்கள் என்ப து உண்மைஅல்ல. தொழில்முனைவர் கள் பலரும் வறுமையில் வாடி, என்றை க்காவ து ஒரு நாள் லட்சக்கணக்கான வணிகம் வந்தடையும் என்ற கனவில் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் நம் கற்பனைக்கு ம் நிஜத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடு கள் உள்ளது. கவுஃப்மேன் ஃபவு ண்டேஷன் நடத்திய ஆய்வின் படி, தொழில்முனைவர்கள் 45-54வயது வரம்பிற்குள் தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

தாங்கள் பார்க்கும் வேலையை தவிர தங்கள் தொழிலை இரண் டாம் பட்சமாக அவர்கள் தொடங் கலாம். இருப்பினும் அவர்கள் கூட சரி யான சூழ்நிலையை நமக்கு எடுத்துக் காட்டுவதில்லை. சொல் லப்போனால் பல தொழில் அதிபர்களும் தங்களின் தொழிலை சைட் (பகுதி நேர) தொழி லாகதான் கவனிக்கிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை விடாமல், தங்க ளின் அறிவாற்றல் மற்றும் தகுதிகளை பயன்படுத்தி இவ்வாறான சைட் தொழி ல்களை துவங் குகின்றனர். இந்த தொழிலை நம்பி அவர்கள் வாழா விட்டாலும் கூட இந்த தொழி லின் முன்னேற்றத்திற்கு அவர் கள் முட்டுக்கட்டை போடுவதி ல்லை. முதலில் சிறிய அளவி ல் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்ப டும். ஒரு வேலை அந்த தொழி ல் தோல்வியில் போய் முடிந் தால் நஷ்டமும் குறைவாக வே இருக்கு ம். சரி பகுதி நேர தொழிலை (சைட் பிஸ்னஸ்) ஆரம் பிப்பது எப்படி? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.

வாய்ப்புகளை உற்று நோக்க வேண்டும்!!

உங்களுக்கு சமைக்க பிடிக்குமா? அப்படி யானால் உங்கள் நேரத் தை முழுவதுமாக எதிர்ப்பார்க்கும் ஒரு உணவகத்தை நீங்க ள் ஆரம்பிக்கலாம். அதற்கு அதிகளவில் மூலதனமும் தேவைப்படும். அல் லது வார இறுதியில் செயல்படும் காடேரிங் நிறுவ னத்தை தொடங்கலாம். அல்லது நடமாடு ம் வண்டியில் சிறிய உணவகத்தை கூட தொடங்கலாம். உங்களுக்கு கிடைக்கும் குறைந்த நேரத்தில் துவங்கும் இவ்வகை யான தொழில்கள் காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கலாம். அதனால் ஒரு தொழில் துவங்கும்முன் அதில் அடங் கியிருக்கும் அதிகப்படியான வாய்ப்புகளை பாருங்கள்.

முறையான மார்க்கெட்டிங் தேவை..

உங்களின் வணிகம் அதிகரிக்க வேண் டும், ஆனால் அதற்குண்டான மார்கெடி ங்கிற்கு அதிக அளவில் முதலீடு செய் தால் இரண்டு எதிர் மறையான விளை வுகள் உண்டாகும். ஒன்று – சிறிதளவே நடக்கும் வணிகத்திற்கு அதிகளவில் பணத்தை முதலீடு செய்தல், மற்றொன் று – வணிகத்தின் அளவு பெருமாரியாக அதிகரித்து விடும், ஆனால் அதை கையாள உங்களுக்கு நேரம் இரு க்காது. அதனால் குறைந்த செலவில் முறையாக செய்யும் விளம்பரத்தை பயன்படுத்தி கடன் இல்லாமல் தொழி லை நடத்துங்கள்.

தொழில் வேறு, வேலை வேறு…

உங்கள் வேலை பகலில் என்றால் உங் கள் தொழிலையும் வேலையும் ஒரே நேரத்தில் செய்ய முற்படாதீர்கள். உங் கள் வாழ்வாதாரத்தை கவனித்து, உங் களுக்கு உடல்நலத்திற்கு முக்கியதுவம் அளித்து, ஓய்வூதிய சலு கைகள் அளிக்கும் வேலையில் தான் அதிக நேரத்தையும் ஆற்றலையும் செலுத்த வேண்டும். அதன்மீது நாட்ட ம் குறைந்தாலும் கூட அதில் தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின் உங்களின்தொழிலை கவனியுங்கள்.

முக்கியமான ஒன்று!!..

உங்கள் பகுதி நேர தொழிலை துவங்கும் முன், உங்கள் எதிர்ப்பார்ப் புகளை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இந்த தொழிலை பகுதி நே ரமாகத்தான் செய்யப்போகிறீர்கள் என்றால், முழு நேரமாக இத்தொ ழிலை செய்யும் உங்கள் போட்டி யார்களை தொழில் ஆரம் பித்த சில வருடங்களிலேயே வீழ்த்துவ து முடியாத காரியமாகும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்க ள் உங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குறைவான வருமானம் கிடைத்தாலும் உங்கள் மனதுக்கு பிடித்த தொழிலைசெய்யும்போது உங்கள் இலக்கு சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக் கும்.

உங்களுக்கு சொந்ததொழில் தொ டங்க வேண்டும் என்ற கனவு இரு ந்தால், அதற்காக நீங்கள் பார்த்து க் கொண்டிருக்கும் வேலையை விடவேண்டும் என்ற தவறான நம் பிக்கைக்கு ஆளாகாதீர்கள். மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அந்த உங்களைஎங்கே எடுத்துச்செல் கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இது எல்லோருக்கும் அல்ல. தொழிலி ல் முன் அனுபவம் இல்லாத, நல்ல வேலைக்கு சென்று கொண்டிருப்பவ ர்களுக்கு மட்டுமே.

தொழில் உலகத்திலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: