Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டின் ரம்மியத்தைக் கூட்டும் கண்ணாடியிலான அலங்காரத் தரைகள்

வீட்டின் ரம்மியத்தைக் கூட்டும் கண்ணாடியிலான அலங்காரத் தரைகள்

வீட்டின் ரம்மியத்தை அழ காக வெளிபடுத்துபவை தரைகள். வீட்டுக்கு எடுப் பான தோற்றத்தை ஏற்படு த்தி கொடுக்கும் வண்ணம் டைல்ஸ், மொசைக், மரத்த ரைகள், வினைல் தரைகள் , சிமெண்ட் தரைகள், கார்பெட் தரைகள் என பல வகைகளைக் கொ ண்டு அறையின் தன்மைக்கு ஏற்ப

தரைகளை அழகுபடுத்துகி றார்கள். அந்த வகையில் தற்போது உடைந்த பாட்டி ல்களை கொண்டு தரைக ளை அழகுப் படுத்தும் மு றை கட்டுமானத்தில் கால டி எடுத்து வைத்துள்ளது.

பாட்டில் தரைகள்

பாட்டில்களை கொண்டு தரைகளை அமைப்பதால் சுற்றுப்புற சூழலுக்கு பெருங்கேடாக அமைந்திருக்கும் வீணாகும் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய ஏதுவாகிறது. இத்தரைகள் சுற்றுப்புறத்திற்கு பயனுள்ளதாக அ மைவதுடன் அறையின் அழகையும் அதிகரிப்பதில் பங்கெடுக்கிறது. மொ சைக் மற்றும் கான்கிரீட் போன்றவைகளுடன் சேர்த்து இந்த பாட்டி ல் தரைகளை எளிதாக அமைத்திடலாம்.

பாட்டில் தரைகளை அமை க்க பிரத்தியேக கருவிகள் தேவைப்படுவதில்லை. பொ துவாக இம்மாதிரியான த ரைகள் ரெடிமேட் கற்களாக வும் சந்தைகளில் கிடைக்கி ன்றன. மேலும் கட்டுமான பணியின்போது இவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும். தே வைப்படும் வண்ணங்களி லு ம் வடிவங்களிலும் இதனை வடி வமைத்துக் கொள்ளலாம். மக் களின் ரசனைக்கு ஏற்ப பல வடி வங்களில் இந்த பாட்டில் தரை கள் கிடைக்கின்றன.

கண்ணாடி தரைகள்

கண்ணாடிகளை கொண்டும் தரைகளை அமைக்கலாம். இக்கண்ணாடி தரைகள், மரக்கட்டைக ளை கொண்டு அமைக்கப்படும் தரைகளைபோன்றே அமைந்து ள்ளன. இந்த தரைகளை அமை க்க கட்டுமான தளங்களுக்கு ஏ ற்ப அதன் தடிமன் தேர்வு செய் யப்படுகிறது. கண்ணாடிகள் பொதுவாக வழுக்கும் தன்மை கொண்டவை.

ஆனால் தளத்தில் பதிப்பதற்கா கவே பிரத்தியேக முறைகளில் தயாரிக்கப்படும் இக்கண்ணாடி தரைகள் தண்ணீர் மற்றும் பிசு க்கு பொருட்கள் பட்டாலும் வழுக்குவதில்லை. ஏனெனில் வழுக்கு தன்மையை போக்கும் வ கையில் இதன் மேற்பரப்புகள் சொரசொரப்பாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் தரைகள் அமைப் பதற்காகவே தயாரிக்கப்படும் கண்ணாடிகள் அனைத்தும் அ தீத அளவிலான எடைக ளை தாங்கும் திறன் கொண்டவை யாகவே உருவாக்கப்படுகின் றன.

வலுவானவை

இதனால் வலுவான பொருட்க ளை வைத்தாலும் தரைகள் உடைவதில்லை. இத்தகைய கண்ணா டி தரைகள் மீது வண்ண பேப்பர் களை ஒட்டுவது தரைக்கு கூடுத லான அழகினைக் கொடுக்கும். அத்துடன் கண்ணாடி தரைகளின் மீது ஏற்படும் கீறல் மற்றும் உரா ய்வுகளை தடுப்பதாக அமையும். இந்த கண்ணாடி தரைகள் கான் கிரீட் தரைகளை விட பயன்படுத் துவதற்கு மிகவும் எளிமையா னவை. இத்தரைகளில் கறைகள், அழுக்குகள் படிவதில்லை.

அதற்கு மாறாக அழுக்குகள் படிந் தாலும் சோப்பு கரைசல்களை கொண்டு எளிமையாக துடைத்து விடலாம். அதனால் கண்ணாடி தரைகளை பராமரிப்பதற்கு எளிதா கவே இருக்கும். கட்டுமானத்தின் புதிய பரிணாமமாக இத்தரைகள் விளங்குகின்றன.

– தினத்தந்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: