Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செலவுகளைக் குறைத்து, சேமிப்பை உயர்த்த சில ஆலோசனைகள்

செலவுகளைக் குறைத்து, சேமிப் பை உயர்த்த சில ஆலோசனைக ள்

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

பெரும்பாலான வீடுகளில் வர வைவிட செலவு அதிகமாக உள் ளது. இந்தச் செலவுகளைக் கட் டுக்குள் வைத்துக் கொள்வதற் காகப் பல வழிகளை முயற்சி செ ய்கிறார்கள் பலரும். இதில் பலர் தோல்விய டைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டு விடுகிறார்கள்.

செலவைக் குறைப்பதற்கு சின்னச் சின்ன

விஷயங்களைச் செய்தாலேபோ தும்; அதைக்கட்டுக்குள் வைத்து க் கொள்ள முடியும். அவை என் னென்ன என்பது குறித்து சொல் கிறார் நிதி ஆலோசகர் பி. பத்ம நாபன்.

சேமிப்புக்கு முதலிடம்!

”சம்பளம் வந்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத் து வைத்துவிட வேண்டும். சேமிப்புக்கு போக மீதமுள்ள தொகையில் செலவுக ளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. உங்கள் மொத்த வருமானத்தில் வாட கைக்கு இத்தனை சதவிகிதம், மளிகை க்கு இத்தனை சதவிகிதம், குழந்தைகள் பள்ளி/கல்லூரி கட்டணத்துக்கு இத்த னை சதவிகிதம் என நீங்கள் திட்டமிடுகி ற மாதிரி, எத்தனை சதவிகித பணத்தை சேமிக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்தப் பணத்தை முதலிலேயே எடுத்து வைத்துவிடுவது அவசியம். இப்படி செய்யும் போது சேமிப்பதில் எந்தவித மான தடங்கலும் வராது.

இதேபோல, மியூச்சுவல் ஃபண் ட், ஆர்.டி, இன்னும் பிற சேமிப் புக்கு முடிந்தவரை இசிஎஸ் கொடுத்துவிடுவது நல்லது. இ ல்லையெனில் இன்றுகட்டலா ம், நாளை கட்டலாம் என கடைசியில் பணம் செ லுத்தாமல் போவ தற்கான சூழ்நிலை உருவாகும்.

செலவு செய்யும் மனோபாவம்!

மாத சம்பளம் வாங்குபவர்கள், பிசினஸ் செய்பவர்கள் என யாராக இருந்தாலும் கையில் பணம் கிடைத்தவுடன் என்ன செலவு செய்ய லாம் என்று யோசிக்கக்கூடாது. எவ்வளவு பணம் கிடைத்துள்ளது, இதில் அவசியம் செய்யவேண்டிய செ லவுகள் என்னென்ன, அதற்கு எ வ்வளவுசெலவு ஆகும் என்பதைத் திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் 

செலவு என்று வரும்போது, முதலில் கட்டாயம் செய்யவேண்டிய செலவுக ளுக்கு முன்னுரிமை தரவேண்டும். இது போக உள்ள செலவுகள், இப்போதைக் கு உடனடியாகத் தேவைப்படாது என்ப தால், நிதானமாக யோசித்து, அவசியம் என்றால் மட்டுமே செய்யலாம்.

பட்ஜெட் அவசியம்!

அடுத்து, சம்பளம் வந்தவுடன் பட்ஜெ ட் போடுவது முக்கியம். இப்படி பட் ஜெட் போடும்போது கடந்த மாத பட் ஜெட்டையும் எடுத்து வைத் துக்கொ ண்டு, பட்ஜெட் போட வேண்டும். அப் போதுதான் கடந்த மாதம் எவ்வளவு செலவு ஆனது, இந்த மாதம் எவ்வ ளவு செலவு உள்ளது என்பதைத் தெரிந்துக்கொள்ள முடியும்.

மேலும், பட்ஜெட்போட்டு செலவுசெய்வதோடு, தினசரி செலவுக ளையும் எழுதிவைக்க வேண்டு ம். அப்போது தான் பட்ஜெட்டை விட அதிகமாக ஏதாவது செல வாகியுள்ளதா என்பதைத் தெரி ந்துகொண்டு அதைக் குறைக்க முடியும்.

பார்த்ததும் வாங்கக் கூடாது!

பெரும்பாலான பெண்கள் உணர்ச்சி வசப் பட்டுப் பொருட்கள் வாங்கும் மனநிலை யில்தான் இருக்கிறார்கள். அதாவது, ஏ தாவது ஒரு ஆஃபர் என்றதும் உடனே அதை வாங்கத் துடிக்கிறார்கள். எந்த ஆஃ பர் என்றாலும் அதனால் நமக்கு என்ன நன்மை என்பதை ஒன்றுக்கு பல முறை யோசித்துப் பார்த்து வாங்குவது நல் லது. இப்படி செய்தால், அநாவசியமாகச் செல வு செய்வதையும் நம்மால் தடுக்க முடியு ம். தேவையில்லாதப் பொருளை வாங்கி விட்டோமே என்று பிற்பாடு கவலைப்ப டவு ம் தேவை இருக்காது.

கிரெடிட், டெபிட் கார்டு வேண்டாம்!

ஷாப்பிங் செல்லும்போது என்ன வாங்கப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டு, அந்தப் பொருட்கள் வாங்க தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு செல் லாம். கையில் காசிருக்கும் போது தான் தேவையில்லாதப் பொருட்களையும் நாம் வாங்குகிறோம் . இது கஸ்டமர் சைக்காலஜி சொல்லும் உண்மை! இதேபோ ல, கிரெடிட், டெபிட் கார்டில் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். இதன்மூலமும் தேவையில் லாதப் பொருட்கள் வாங் குவதை நம்மால் தடுக்க முடியும். தவிர, வட்டிச் செலவும் மிச்சமா கும்.

சின்ன, சின்னச் சேமிப்பு!

மாத சம்பளம் வாங்குபவர்களுக்குக் கட்டாயம் பிஎஃப் பிடிக்கப்படு ம். இதனுடன் கூடுதலாகக் குறிப்பிட்ட அளவு தொகையைச் சேமிப் பது புத்திசாலித்தனமாக இருக் கும். இந்தத் தொகை உங்களின் ஓய் வுக்காலத் தேவைகளுக் குக் கைகொடுக்கும். மேலும், வீடு வாங்குவதற்கு, திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் உயர் கல்வி என முக்கியமான தேவை களுக்கு இதிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல, பிபிஎஃப் முதலீட்டுக்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. ஏ னெனில், இதில் முதலீடு செய்யப்ப டும் தொகை 15 ஆண்டுக ளுக்குத் திரும்ப எடுக்க முடியாது. 2014-ம் ஆ ண்டுத் தொடங்கி, மாதம் ரூ.1000 என அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய் தால், 2029-ம் ஆண்டு உங்கள் கையி ல் சுமார் ரூ.3,71,000 இருக்கும். இதில் குழந்தை களின் உயர்கல்வி, திருமணம் போன்ற செலவுக ளைச் செய் யலாம்.

மேற்கூறிய முதலீடுகள் ஆண்டுக் கூட்டு வட்டி தரக்கூடிய திட்டங் கள். இப்படி செய் யப்படும் சின்னச் சின்னச் சேமிப்புகள் நமக்கு சுமை யாக இருக்காது. பிற்காலத்தில் பெரிய தொகையாக நம்மிடம் சேர் ந்து இருக்கும்.

அடிக்கடி வாங்கும் சேலைகள்!

அடிக்கடி சேலை வாங்குவதும், அழகு சாதனப் பொருட்களை வாங் குவதும் பெண்களுக்கு இஷ்டமான விஷயங்கள். இளவயதில் இப்படி ஓர்ஆசை இருப்பதில்தவறே இல் லை. ஆனால், குடும்ப உறுப்பினர் களின் எண்ணிக்கை அதிகமாக அதி கமாக, இதற்கான செலவு களைக் குறைத்துக் கொள்வது நல்லது. விலை குறைந்த பத்து சே லைகளை வாங்குவதைவிட, நல்லதரத்தில், டிசைனில் ரிச்சாக ஐந் து சேலைகளை வாங்குவது புத்திசாலித் தன ம். தவிர, குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் சிக்கனமாகச் செலவு செய்யும்போதுதான் குழந்தைகளும் பார்த்துப் பார் த்து செலவு செய்யும் பழக்கத் தை உருவாக்கிக் கொள்வார் கள். பெற்றோர்களே தாம்தூம் என்று செலவு செய் தால், கு ழந்தைகளும் பிற்காலத்தில் அப்படித்தான் இருப்பார்கள்.

சமையலிலும் சிக்கனம்!

பெண்கள் நினைத்தால் சமையலிலும் சிக்கனத்தைப் பின்பற்றி குடு ம்பத்துக்கு நிறைய சேமித்துத் தரமுடியும். அதா வது, பருவநிலைக்கு ஏற்ப விலை குறைவாக உ ள்ள காய்கறிகள், பழங்களை வாங்கலாம். அதே போல இறைச்சி வாங்க வேண்டுமெனில் வாரம் ஒரு முறை மட்டும் வாங்கலாம். காய்கறி விலை அதிகமாக இருக்கும் போது பயறு வகைகளைப் பயன்படுத்தலாம்” என செலவுகளைக் குறைத் து,சேமிப்பை உயர்த்தும் பலவழிகளைச் சொன் னார் பத்ம நாபன்.

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே கிடையா து. முயற்சித்துப் பாருங்களேன்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: