Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வேண்டிய நற்குணங்கள்

ஒரு நல்ல‍ குடும்பத்திற்கு வே ண்டிய நற்குணங்கள்

1. நாம் பெற்ற ஞானத்தைப் பய ன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன்-மனைவி உறவுக் கு இணையாக உலகில் வே றெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க

வேண்டும். எந்நிலையிலும் உணர்ச் சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்க ள். அது குடும்ப அமைதியைக் காக்கு ம். வீண் செலவுகள் செய்ய வேண்டா ம். அது குடும்ப அமைதி யை குலைக் கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோ ருக்கும் பொருளீட்டும் திறன் வேண் டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம் பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது , பிறரு க்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண் டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் ம னைவியோ, மனைவிக்குத் தெரி யாமல் கணவனோ சம்பாதிப்பது ம், செலவு செய்வதும், சேமிப்பதும் சரி யாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டி ருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வே ண்டும் என்றால் சகிப்புத்தன்மை, வி ட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வே ண்டும்.

8.பிறர் குற்றத்தைப்பெரிதுபடுத்தாம ல் பொறுத்தலும், மறத்தலும் அமை திக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடு த்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப்பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமை தி இன்றியமையாததாகும்.

– ராகவி ராகவன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: