Sunday, November 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் தொழிலதிபராக ஜொலிக்க நீங்கள் இழக்க‍ வேண்டியவைகள் என்னென்ன?

நீங்கள் தொழிலதிபராக ஜொலிக்க நீங்கள் இழக்க‍ வேண்டியவை கள் என்னென்ன?

நீங்கள் தொழிலதிபராக ஜொலிக்க நீங்கள் இழக்க‍ வேண்டியவைகள் என்னென்ன? ஆம்! ஒன்றை நாம் பெறும்போது மற்றொன் றை நாம் இழந்துதான் ஆகவேண்டும்! அது போலத்தான் நீங்கள் மிகச் சிறந்த தொழில திபராக சமுதாயத்தில் ஜொலிக்க கீழ்வருப வற்றை நீங்கள் இழந்தால்தான் ஆக முடி யும். அவை என்னென்ன பார் ப்போமா?

1. நேரம்:

தொழில் முனைவோரானாலே உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை. உங்கள் பிஸினஸை ஓரளவுக்கு

நல்லநிலைக்குக் கொண்டுவரும் வரை நேரம் உங்களை முழுமை யாக கையி ல் எடுத்துக் கொள்ளும். கல்யாணம் கா ட்சி, ஊரில் திரு விழா, பேரன்ட்ஸ் டீச்ச ர்ஸ் மீட்டிங், சினிமா, பார்க் என்பதெல் லா ம்கூட ஆரம்ப கட்டத்தில் முற்றிலும் மறக்க வேண்டியதுதான்.

2. உறவுகள்:

உறவுகள் மேம்பட பணம் காசு தேவையில்லை. நேரம் ஒதுக்குவது தான் முக்கியம். மனைவி, குழந்தைகள் மற் றும் நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரத்தி ல் நீங்கள் உடனிருந்தால்தான் உறவுகள் மேம் படும். உங்கள் தொழில் உங்கள் தினசரி கால ண்டரை நிர்வா கம் செய்தால், தொழில் மட் டும்தான் மேம்படுமே தவிர உறவுகள் அல்ல. தொழில் நிலைத்து நிற்கும் வரை உறவுகளை மறக்க வேண் டியிருக்கும்.

3. உடல் நலம்:

ஆரம்ப காலத்தில் 24 x 7 வேலை என்றிருக்க வேண்டியிருக்கும். பி ன்னர் அது பழகிப்போய் விடும் இப்படி 24 மணிநேரமும் முழு கியிருக்கும்போது உங்கள் உட ல்நிலை சரியில்லை என்றா ல் உடனடியாக டாக்டரிடம் போக வே மாட்டீர்கள். அப்புறம் என்ன பெரிய ரிப் பேர்தான் உங்களை கட்டாய ஓய்வெடுக்க வைக்கு ம். உடலுக்கு ஓய்வு, பராமரிப்பு மற்றும் மனதுக்கு என்டர்டெய் ன்மென்ட் போன்றவை அவசிய ம். ஹெல்த்தைப் பார்க்காமல் தொழில் நிலைகொள் ளும் வரை ஓடி க்கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.

4. வாய்ப்புகள்:

இருக்கும் தொழில்தவிர மற்ற வற்றில் நிறைய வாய்ப்புகள் கண்முன்னே தெரிந்தபோதிலு ம் அவற்றைச்செயல்படுத்த மு டியாமல் போகும். பிள்ளையை நல்ல ஸ்கூலில் சேர்க்க அப்ளி கேஷன் வாங்கும் தேதியைத் தவறவிடுவதிலிருந்து, நல்ல இடத்தில் விலைக்கு வரும் வீட்டுமனையைத் தவறவிடுவது வரை பல்வேறு வாய்ப்புகள் கை நழுவிப்போகும்.

5. பணம்:

பணம் சம்பாதிக்கத்தானே தொழி ல் என்கின்றீர்களா? அதுஉண்மை தான். ஆனால், புதிய தொழில் மு னைவோர்கள் பல்வேறு விதத்தி லும் பணத்தினை இழக்க வேண் டியிருக்கும். நிறைய விஷயத்தை ப் புதிதாகச் செய்வதால் ஒன்றுக் கு ரெண்டாக பல இடங்களில் செ லவாகும்.

6. சகிப்புத் தன்மை:

புதுத்தொழில் அல்லவா? நம்மிடம் வேலைக்கு இரு க்கும் நபர்கள் கூட கொஞ் சம் இளக்காரமாகப் பார்க் கும் காலமாக இருக்கும். செலவுகளுக்குத் தடுமாறு ம்போது (குறிப்பாக சம்பள நாட்களில்) இந்த கம்பெனி எத்தனை நாளைக்கு ஓடும் என்ற இளக்காரம் ஆபீஸ் பையன் முதல் சப்ளையர் வரை பலருக்கும் இருக்கும். அதை எல்லாம் புன்முறுவலோடு சகி த்துக்கொள்கிற தன்மை வரவேண்டும்.

7. நான் என்கிற எண்ண ம்:

உங்கள் புராடக்ட் தரமா னதாக இருந்தாலும் புதுசா அதை எடுத்துக் கொண்டு போய் மார்க் கெட் செய்யும்போது படும் கஷ்டமும் அவமா னமும் சொல்லிமாளா து. ‘என்ன குவாலிட்டி அடிமாட்டு விலைக்குத் தர்றேன். கடைக்கார ர் கண்டுக்கவே மாட்டேங்குறாரே” என்று கு மைந்து போவீர்கள். நான் என்கிற எண்ணத் தை ஒழித்துக்கட் டிவிட்டால், நம்மையோ நம்பொருட்களையோ தவறாகப்பேசினாலும் கோபப்படாமல், அடுத்த வேலையைப் பார்க் கப் போய்விடு வோம்.

8. மானம் மரியாதை:

மூன்று வருஷ குடும்ப மற்றும் தொழில் ரீதி யான செலவுக்குத் தேவையான முழுப் பணத் தையும் பேங்கில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்துக்கொண்டு யாரும் பிஸினஸ் ஆரம் பிக்க முடியாது.

கடனை உடனை வாங்கித்தான் பிஸினஸ் நட த்த முடியும். சப்ளை யரிலிருந்து வீட்டுச் செல வு வரை பணம் தேதியில் தராவிட்டால் கொ ஞ்சம் மரியாதைக் குறையத்தான் செய்யும். அதையும் தியாகம் செய்யத்தான் வேண்டும்.

இப்படிப் பல தியா கங்களைச் செய்து தொழில் முனைந்தா ல் தான் பங்களா, கார் என பல வசதிகள் கிடைக்கும். இந்தத் தியாகங்களைச் செ ய்ய மனம் வராவிட்டால் உங்களுக்கு மிஞ்சுவது தொழிலதிபராக வேண்டும் என்கிற தாகம் மட்டுமே

– சத்தியவதி

Leave a Reply