Friday, April 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

25வயதில் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன்?

25 வயதில் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால் என்ன பயன்?

பகவத் கீதையைப் புனித நூலாக்கியதுதான் நாம் செய்த மிகப் பெரிய தவறு. இன்று பல வீடுகளில் பூஜையறைகளில்

அந்தப் புனித நூல் இருக்கிறது என்பது உண்மைதான்.

செய்தித்தாள்கள், வார இதழ்கள் வரவேற்பு அறையிலும், படுக்கை யறையிலும் சிதறிக் கிடக்கின்ற ன. ஆனால் நாம் பத்திரிகைகளை ப் பக்கம்விடாமல் வாசித்து வருகி றோம். பகவத்கீதையைப் பிரித்து க்கூடப்பார்க்காமல் பூஜை செய்கி றோம். அதன்மேல் மலர் தூவுகிறோம். அதற்குத் தீப ஆரத்தி காண்பி க்கிறோம்.

புனிதநூல்களைப் படிக்கக் கூடாது என்று எழுதப்படா த ஒருவிதியை வைத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த அறிவீனம் எப்படி நம க்குள் புகுந்து கொண்டது என்பது இன்றுவரை புதிராகவே இருக்கிறது.

இன்னும் ஒருசாரார் பணிஓய்வுபெற் றபின் படிக்கலாம் என்றுபகவத் கீதை  யை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அறுபது வயதில் உடலில் ஆயிரம் வியாதிகளையும் மனதில் லட்சம் பிர ச்னைகளையும் வைத்துக்கொண்டு கீதையைத் திறந்து பார்த்தால் கொட் டாவிதான் வரும். அந்த வயதில் பகவ த் கீதையை ஒரு தூக்க மாத்திரை யாக மட்டுமே பயன்படுத்தலாம்!

கீதை போர்முனையில் சொல்லப்பட் ட அறிவுரை. போர் தொடங்கு வதற்கு முன் சொல்லப்பட்ட பாடம். வாழ்க் கையில் பின்வாங்காதே. எதையும் எதிர்கொள்வாய். போராடி வெற் றி கொள்வாய் என்று ஓர் அரசனுக்குச் சொல்லப்பட்ட உபதேசம். அதனை நம் வாழ்க்கையை த் தொடங்குவதற்கு முன் படித்துவிட வேண்டும்.

25 வயதில் படிக்கவேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்ப தால் என்ன பயன்? தேர்வுகள் எழுதி முடி த்தபின் பாட ங்களைப் படிப்பதில் என்ன பிரயோஜனம்? இது தெரிந்திருந்தால் இந்த க் கேள்விக்கு இன்னும்  நன்றாக விடை எழுதியிருக்கலாமே என்ற பச்சாதாப உண ர்வுதான் மிஞ்சும். இப்படி ஒரு நூல் இருப்ப து தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத் துவிட்டோமே என்ற கழி விரக்கமும் குற்ற உணர்வும்தான் மிஞ்சும்.

இன்னும் சிலர் கண்மூடித்தனமாகக் கீதை யைப் பயன்படுத்துகின்றனர். பகவத் கீதை ஒரு சர்வரோக நிவாரணி என் று சத்தியம் செய்கின்றனர். கொலையாளிகளுக்கு கீ தையை உபதேசித்தால் மனம் திருந்தி வாழ் வர் என்று நினைக் கின்றனர்.

ஒழுக்கம் கெட்டவர்கள் கீதையை ஒரு மு றை கேட்டால் போதும். ஒழுக்கத்துடன் வாழ்வார்கள் என்று து ண்டைத் தாண்டி சத்தியம் செய்கின்றனர். இப்படியெல்லா ம் நம்பிக் கை இருக்கிறது.

கண்ணா வருவாயா – வாழ்வியல் விளக் கங்கள் என்ற நூலில் . . . வரலொட்டி ரெங்கசாமி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: