Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

துரியோதனன், பாண்டவர்களைநோக்கி, "சகோதரர்களே எங்களைக் காப்பாற்றுங்கள்!" – அழுத காட்சி!- அரிய தகவல்

துரியோதனன், பாண்டவர்களை நோக்கி, “சகோதரர்களே. எங்க ளைக் காப்பாற்றுங்கள்!” எனக்கதறி அழுத காட்சி!- அரிய தகவல் 

போரில் கர்ணன் தோற்று ஓடி ஒளிந்த நிகழ்வும், துரி யோதனன் போர்க்கைதி யான நிகழ்வும்! -அரிய தொரு தகவல்

துரியோதனனின் வஞ்சக வார்த்தைகளை நம்பி சூதாட வந்த பாண்டவர்கள் , பொருள், நாடு, தங்களையும் இவ்வ‍ளவு ஏன்? தனது மனைவியை யும் வைத்து சூதாடி சகுனியிடம் தோற்ற‍தால், பாண்டவர்கள், துரி யோதனின் சொல்படி வனாசம் சென்றனர்.

ஆனால் அங்கே

காட்டில் பாண்டவர் நி லையோ இந்திரன் வழங் கிய அட்சய பாத்திரத்தால் வேளை தவறாமல் உண வருந்தி மகிழ்ச்சியா க இருப்பதை அறிந்த துரி யோதனன் கவலையுற்றான்.பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார் கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி..துரியோதனனிடம்..’நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து. நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்’ என்றா ன் .

திருதிராட்டினனிடம்..’பசுக்குலங்கள் காட்டில் கொடிய மிருகங்க ளால் அவதிப்படுகின்றன.அவற்றைக் காக்க கானகம் போகிறோம்’ என்றான் துரியோதனன்.

பின் துரியோதனன் முதலானோர்..மனைவி மக்களுடன்..உயர்தர ஆடை..அணிகலன்கள்..அணிந்து பாண்டவர் இருக்குமிடம் அருகே கூடாரம் அமைத்து தங்கினர்.

அருகில் இருந்த தடாகத்தில்..கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந் து நீராடுவது..கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க. கந்தர்வர்க ளை உடனடியாக விலகுமாறு..துரியோதனன் கட்டளையிட்டான்.

இதனால் கந்தர்வர்களுக்கும் துரியோதனன் கூட்டத்திற்கும் இடை யே போர் மூண்டது. சித்திரசேனன் தலைமையில். கந்தர்வர்கள் போரிட சித்திரசேனனும் மாயப்போரில் ஈடுபட கர்ணனின் தேர் உ டைந்தது.அவன் போர்க்களத்தை விட்டு ஓடினான்.துரியோதனின் தம்பியரும் புறமுதுகிட்டனர்.எஞ்சிய..துரியோதனன்..மற்றும் சில ரை கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

கௌரவர்களின் எஞ்சிய வீரர்கள் சிலர்..தர்மரிடம் வந்து.. ‘துரியோ தனனைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டனர். ஆனால் பீமனோ ‘அவர்கள் தீவினையின் பலனை அனுபவிக்கிறார்கள்.. அனுபவிக்க ட்டும்’ என்றான்.

தம்பி..ஆபத்தில்..யார் இருந்தாலும் உதவ வேண்டுவது உலக இயல் பு மேலும் இப்போது நம் சகோதரர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனே காப்பாற்ற வேண்டும்..என்றார் தருமர்.

இப்படி..இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது துரியோதனனின் அப யக் குரல் கேட்டது. ‘சகோதரர்களே. எங்களையும். எங்கள் மனை வியரையும் கந்தர்வர்கள் கட்டி இழுத்துச் செல்கிறார்கள் உடனே வந்து காப்பாற்றுங்கள்’

உடன்…பாண்டவர்கள்..கந்தர்வர்களை தடுத்தி நிறுத்தி பலரை அழி த்தனர். அப்போது. அர்ச்சுனனுக்கு. சித்திரசேனன். தனக்கு. இந்திர லோகத்தில். பல நுணுக்கங்களை போதித்தவன் என்ற உணர்வு வர..அவன் பாதம் பணிந்து…நடந்த விவரங்களை அறிந்தான்.

‘அர்ச்சுனா…இந்த துரியோதனன்..உங்களை அவமானப் படுத்த வந் தான்.அதை அறிந்த தேவர்கோமான்…அவன் கூட்டத்தை கட்டி இழுத்துவர என்னைப் பணித்தான்’ என்றான் சித்திரசேனன்.

பின்னர் தருமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க..துரியோதனன் கூட்ட ம் விடுவிக்கப்பட்டது.

போரில்..இறந்த கந்தர்வர்களை..இந்திரன் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தான்.நாணித் தலைக்குனிந்திருந்த துரியோதனனை நோக்கி தருமர் ‘நகரம் சென்று நல்லாட்சி செய்வாயாக’ என்றார்.

புறங்கொடாப் போர் வீரன் என்ற பெருமித வாழ்வு பறிப்போக கர்ண னிடம் துரியோதனன் புலம்பினான். பின். .துச்சாதனனை நோக்கி’ தம்பி நீ ஆட்சியை மேற்கொள். நான் உயிர் துறக்கப்போகிறேன்’ என்றான்.

பதிலுக்கு, கர்ணன் ‘இதுவா க்ஷத்திரியர் இயல்பு..நாம் இப்போது சந்தித்தது இறுதிப்போர் அல்ல’ என்றான்.

கர்ணன்..மேலும் துரியோதனனுக்கு..உற்சாகம் ஊட்டினான். போரி ல் அர்ச்சுனனை தான் கொல்வேன் என்றான்.

அசுரர்களும்…போரில்..தேவர்கள் பாண்டவர்களுக்கு உதவினால் அசுரர்கள் துரியோதனனுக்கு உதவுவதாகக் கூறினர்.

இதனால்…துரியோதனன் மனம் மாறி..அஸ்தினாபுரம் வந்தான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: