அந்நிய தேசமா இந்திய தேசம்?
– (சுட்டெரிக்கும் வார்த்தைகள்)
2014, ஆகஸ்டு (இந்த) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
பாரத நாடு பழம்பெரும் நாடு, பாரத தேச மென்று தோள் கொட்டுவோம், இந்திய நாடு என் வீடு இந்தியனென்பது என் பேரு என்றெல்லாம் பாடி மகிழ்வதுடன் இப் பொழுதெல்லாம் நமது சுதந்திரசிந்தனை சிலநிமிடங்களில் முடிந்து விடுகிறது.
வெள்ளையனிடமிருந்து பூரண சுதந்திர ம் பெற்ற நாம் . . இன்று, அந் நிய முதலீடு என்கிற பெயரில் வெளிநாட்டு பண முத லைகளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் அடிமையாகி
வருவதை நினைத்தால் சுதந்திரம் இனிக்கவா செய்யும்?
பெட்டிக்கடை முதல் பெரிய வர்த்தகம் வரை தனது ஆக்டோபஸ் கால்களை விரித்த அந்நிய முதலீட்டிற்கு இப்போ து இரயில்வே, காப்பீட்டுத் துறை, ஏன் இராணுவத்துறையும் பலியாகப்போவ தை நினைத்தால் பயமாகஇருக்கிறது.
அந்நிய முதலீடு நம் தேசத்தை செழிக் க வைக்கும் என்கிற மாயா ஜால வார்த்தையை பல காலமாய் சொ ல்லி வருகிறார்கள். ஆனால்
நடந்தது என்ன? நம் மானமும், மரியாதையும், உழைப்பும்,திற மையும், மாயமானது தான் மிச்ச ம். நம் வீட்டுப் பிள்ளையை பக்க த்து வீட்டுக்காரர் பணம்கொடுத்து பட்டாடைப்போடு வளர்க்கிற கதை தான் இது. முதலில் பாசம் காட்டி பின்பு பிள்ளை எனக்கே சொந்தம் என்கிற நிலைதான் ஏற்படும். உதாரணத்திற்கு வங்கித் து றை, தொலைத் தொடர்புத் துறை, மருத்து வத்துறை இவையெல்லா ம் இன்று சுயமுகம் இழந்து மெலிந்து காணப்ப டுவதைப் பாருங்கள்
என்ன வளம் இல்லை இந்த திருநா ட்டில். . . ஏன் கையை ஏந்த வேண்டு ம் வெளிநாட்டில் . .. என்று பாடியது எப்ப டி பொய்யானது என்கிறீர்களா? இரு க்கிற வளத்தையெல்லாம் இங்குள்ள வர்கள் சுரண்டி வெளிநாடுகளில் அந் நிய முதலீடு செய்ததன் பின்விளைவு தான் இங்கே அந்நிய முதலீடு.
இந்திய உற்பத்தியாளர்களை ஊக்கு வித்து, வரிச்சலுகைவழங்கி, கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர் க ளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? நம் தேசத்தின் திறமைமிக்க . . . தகுதி படைத்த இளைஞர்களு கு இங்கேயே வாய்ப்புக்களையும் வசதிகளையும் மறுத்ததால் நம் தேசத்தின் உழைப்பு வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாதி இருக் குமா?
காப்பீட்டுத் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞான த்துறை, இராணுவ த்துறை என்கிற இவற்றில் எல்லாம் அந்நிய முத லீடு என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. இது தவிர்க்கப்பட வே ண்டும்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது ஜன நாயகம்,
இந்தியராய் இருப்போம். .இந்தியப் பொருட்களையே வாங்குவோம் ..
என்கிற அடிப்படை உணர்வுகளை மறக்க வைக்கும்.
அந்நிய முதலீட்டுடன் வரும் இரத் த சிந்தனையாளர்களை இந்த தேசத் தை விட்டு ஓடவைப்பதுதான் உரத்த சிந்தனையுடன் கூடிய உண்மையா ன சுதந்திர சிந்தனை.