Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

10-8-14 – நான் ராமனைப் போல் நல்ல மனிதனாக மாற, என்ன செய்ய வேண்டும்?

அன்புடன் அந்தரங்கம்(10-8-14) – நான் ராமனைப்போல் நல்ல மனி தனாக மாற, என்ன செய்ய வேண்டும்.

அன்புள்ள‍ அம்மா

என் வயது, 27; மும்பையில் இன்ஜினியராக பணிபுரிகி றேன். சராசரி கனவுகளில் வாழும் இந்திய இளைஞர் களில் நானும் ஒருவன். ‘களவும் கற்று மற’ என்ற வாக்கியத்திற்கு ஒரு எல்லை உண்டு என்பதை உணராமல்,

புகை, குடி, பலான பட ங்கள் போன்ற பழக்கங்க ளை பழகினேன். புகை, குடியை எளிதாக புறந் தள்ளிய என்னால், பலான படம் பார்ப்பதை மட்டு ம் தவிர்க்க முடியவில்லை.

மேலும், பி.இ., இறுதியாண்டு படித்த போது, என் அண்ணனின் திரு மண உதவிகளுக்காக, எங்கள் வீட்டிற்கு வந்த உறவுக்கார முறைப்பெண்ணிட ம் நட்பு ஏற்பட்டது. குடிகார, துன் பு றுத்தும் கணவனை கொண்ட அவளுக்கு, ஆறுதல் சொன்ன நான், மனதளவில் ஒன்றி போன துடன் மட்டுமல்லாமல், தவறும் நடந்து விட்டது.

கண்டு, கேட்டு, கற்பனையில் மட்டுமே கண்டு வந்த கலவியலில், நான் பெற்ற நேரடி அனுபவம், முற்றிலும் வேறாக இருந்தது. ஒரு குழந்தைக்கு தாயான அவளி டம், பாலியல் உணர்ச்சிக்கு அடிமை ப்பட்டு போனேன். பின், அவள் கணவனுக்கு, நாங்கள் இருவரும் துரோக ம் இழைப்பதை எண்ணி, குற்ற உணர்ச்சியில் பரஸ் பரம் மன்னிப்பு கேட்டு பிரிந்துவிட்டோம். ஆனால், என் னால் அந்த உணர்விலிருந்து தப்பிக்க முடியவில்லை.

என் அலுவலகத்தில் பணிபுரியும் விவாகரத்து ஆன ஒரு பெண்ணி டமும், விதவைத் தோழி ஒருவரிடமும், உறவு வைத்து கொண்டேன். என்னால் ராமனாக இருக்க முடிய வி ல்லை; என் வேலை, சம்பளம், அபார்ட்மென்ட் இவை யாவும் அவற்றுக்கு ஏதுவாக அமைந்த து.

என்னை நான், சற்று உற்று நோக்கிய பின் தான் ஒன்று புரிந்தது. எந்த பெண்ணையும் சக தோழியா கவோ, உடன் பிறந்தவளா கவோ என்னால் பார்க்க இயலவில்லை; சற்று வயதான பெண்களை, அம்மா வாக பார்க்க முடிகிறது. ஆனால், சற்று வயது குறை ந்தவர்களை அவ்வாறு நினைக்க முடியவில்லை. நான் உடற்பயிற்சி, யோகா செய்பவன்; ஆன்மிகம், அறிவியல் என, எந்த புத்தகம் கிடைத்தாலு ம் தூக்க மின்றி படித்து, புரிந்து கொள்வேன். கவிதை எழுது வேன்; பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றோரின் படைப்பு களை ஆர்வமுடன் படிப்பவன். புத்தகம் படித்து அதனை விவாதிப்பதால், என் குடும்ப வட்டாரத்தில், மத்திம வயது உ டைய அனைவருக்கும், நான் நண்பன்!

அம்மாவிடம், குழந்தை போல் விளை யாடி, அவளை கொஞ்சுவேன்; அப்பா விடம் காரல் மார்க்ஸ்சும், ஜனநாயக மும் பேசுவேன். அண்ணனிடம் ஆன்மி கம் பேசுவேன்; என் நண்பர்கள் மத்தியில், நான் ஞானி; என் கிராம த்தில், நல்ல இளைஞர்களு க்கான எடுத்துக் காட்டு.

னால், எனக்கு என்னைப்பற்றி தெரியும்… நான் ஒரு இரண்டும் கெட்டான்; குளிக்காமல், புதுசட்டை அணிபவன் என்று!

அம்மா… எனக்கு எழும் பிரச்னை இதுதான்…

* என் வயது ஒத்த மற்றும் குறைந்த வயது பெண்களிடம், எனக்கு ஈடுபாடு வருவது இல் லை; மாறாக, என்னை விட மூத்த பெண்க ளிடம் மட்டுமே ஈடுபாடு வருகிறது.

*நான் ராமனைப்போல் நல்ல மனிதனாக மாற, என்ன செய்ய வேண்டும்.

* எனக்கு செக்சுவல் அடிக் ஷன் பிரச்னை இருக்கிறதோ என்று சந் தேகம்.

* சுய இன்பம் மற்றும் பலான படங்கள் பார்க்கும் பழக்கமும் உண்டு. நண்பர்க ள் இதை தவறு இல்லை என்று சொல் கின்றனர்; ஆனாலும், இதை விட்டுவிட நினைக்கிறேன்; முடியவில்லை.

* தாமதமாக எழுவது, மாமிசம்உண்பது , தனிமை போன்ற காரணிகள், காம உணர்வுகளை அதிகரிக்கும் என்பது உண்மைதானா?

* என் வீட்டில் பெண் பார்க்கின்றனர்; அவர்களுக்கு நான் என்ன பதில் சொல் வது என்னுடைய இந்த பலவீனங்களை எப்படி நிவர்த்தி செய் வது?

* மேற்கண்ட பிரச்னைகளுக்கு, எந்த விதமான கவுன்சிலிங் மற்றும் மருத்து வரை அணுகுவது? தங்கள் ஆலோச னை மற்றும் அறிவுரை யின்படி முடிவு எடுக்க நினைக்கிறேன் அம்மா.

*கடைசியில் ஒருசம்பந்தமில்லாத கேள்வி… என் அலுவலக தோழி ஒரு விதவை; என்னை விட, 2 வயது மூத்த வள். இரண்டு வயது குழ ந்தை உண்டு; அவளுடைய நட்பு மட்டும் தொடருகிறது. இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட விரும்பும் என்னை திருமணம் செய்ய விரு ம்புகிறாள். அவளுடன் உறவு கொள்ளும் போது தான், பெண் என்பவள் சதைக் குவி யல் இல்லை… அன்பும், ஈர மனமும் உடை ய சக மனுஷி என்று உணர முடிகிறது; உணர முடிகிறதே தவிர, செயல்படுத்த மு டியவில்லை. இந்த திருமணம், சரியாக வருமா? அவள் கட்டாயப்படுத்தவில்லை. ‘மனம் கொண்ட நட்பாலும், உடல் கொண்ட உறவாலும், தோழனா க, குழந்தையின் கார்டியனாக பொறுப்பேற்பாயா…’ என்று கேட்கி றாள்; நான் என்ன பதில் சொல்வது?

— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு—

உன்னை நீயே தாழ்த்தி எழுதியிருக் கும், உன் கடிதம் கிடைத்தது. குடும் ப வட்டாரம் உன்னை, ‘மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ்’ என, புகழ்கிறது. நண்பர்களோ, உன்னை ஞானி என்றும் இளைஞர்களின் ரோல்மா டல் என்றும், ராமன் என்றும் போ ற்றுகின்றனர். ஆனால், நீயோ உன் னை ரெண்டும் கெட்டான் எனக் கூறிக் கொள்கிறாய்.

மகனே. காமம் என்பது ஆண், பெண் ணின் மரபியல் சார்ந்த குணா திசய ம். எந்தப் பெண்ணையும் நேர்மையான கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை என, குறைப்பட்டிருக்கிறாய். இது எல்லா ஆண்களு க்குள்ளும் மறைந்திருக்கும் சேவல் குணம் தான்; இதற்காக நீ, குற்ற உணர்ச்சியில் புழு ங்க தேவையில்லை.

ஒன்பது கேள்விகள் கேட்டுள்ளாய்; அதற் கான பதில்களை பார்ப் போம்.

* வயது மூத்த பெண்களிடம் மட்டுமே உனக் கு ஈடுபாடு வருவதற்கு காரணம், ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ என கூறப்படும் மனநோய் தவி ர வேறொரு காரணமும் இருக்கிறது. விவா கரத்து ஆன, விதவை பெண்களிடம் தொடர்பு கொண்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த மாட்டர் என்ற அசட்டு நம்பிக்கை உனக்குள் ஒளி ந்திருக்கிறது.

* மகனே… செய்த தவறுகளுக்கு வருந் துவது, பாவமன்னிப்பு கேட்பதே மனித னாக மாறுதற்கான முதற்படிதான்.

* உனக்கு செக்சுவல் அடிக் ஷன் பிரச் னை இருக்கிறதா என, கேட்டிருக்கிறா ய். எல்லா பருவ வயது ஆண்களுக்கும் கொப்பளிக்கும் காமம் தான் உனக்குள் ளும் கொப்பளித் திருக்கிறது; இதில் எந்த அசாதாரணமும் எனக்கு தென்பட வில்லை.

* சுய இன்பம் காண்பதும், நீலப்படங்கள் பார்ப்பதும் மரண தண்ட னைக்குரிய குற்றமல்ல; திருமணமானதும் இவ்விரு பழக்கங்களு ம் படிப்படியாக குறைந்து விடும். விட்டுவிட வேண்டும் என, நினை ப்பதே முதல் வெற்றி தான்.

* பின்னிரவு வரை குடித்து விட்டு படுத்தால், தாமதமாக எழுவது இய ற்கையே! மாமிசம் உண்பது, காம உணர்வை அதிகரிக்கவே செய்யும். தனிமை, சாத்தான் விளையாடுமி டம்; தனிமையில் மனித மனம், பல வக்கிர ங்களை யோசித்து பார்த்து மகிழும். அதைத் தவிர்க்க, உன் பொழுது போக்குகளை மாற் று; எழுதுவது, ஓவியம் வரைவது, புத்தகம் வாசிப்பது, இசையை ரசிப்பது, சமைப்பது என, தூக்கம் வரும் வரை, உன் மனதை வேறொரு விஷயத்தில் ஐக்கியமாக்கு!

* வீட்டில் உனக்கு பெண் பார்ப்பதாக எழு தியிருக்கிறாய்; தவறுகளுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தாராளமாய் திருமணம் செய்து கொள். இல்லாத பிரச்னையை இருப்பதாக நினைத்து, குற்ற உணர்ச்சி யில் உழலாதே!

* உனக்கு எந்த புதிய ஆலோசனையும், மருத்துவமும் தேவையில் லை; கடந்த கால தவறுகள் இனி நிகழாமல் பார்த் துக் கொண்டால் போதும். அறிவு ஜீவி யான நீ, உன்னை நீயே ரெண்டும் கெட் டான் என, மட்டப்படுத்திக் கொள்வது, உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

கடைசியில், அலுவலக விதவைத் தோழியை மணந்து கொள்ளலா மா  என, கேட்டிருக்கிறாய்.

பரிதாபம் தவிர்த்த உண்மையான அன்பும், அக்கறையும், அவள் குழ ந்தையை உன் குழந்தையாக நி னைக்கும் பரந்த மனமும் இருந் தால், தாராளமாக மணந்துகொ ள். ஆனால், நீ சம்பந்தமில்லாத கேள்வி என்று ஆரம்பித் திருக்கு ம்போதே, உனக்கு இக்கல்யாணத் தில் பெரிதான ஈடுபாடு இல்லை என்பது புரிகிறது. அதனால், இத் திருமணம்குறித்து, உன்னை நீயே சுய பரிசோதனை செய்துபின், முடி வு செய்.

*எத்தனையோ மகன்களின்கடித ங்களுக்கு, பதில்எழுதியிருக்கிறே ன்; அப்போதெல்லாம் ஏற்படாத மன திருப்தி, உன் கடிதத்துக்கு பதி ல் எழுதும்போது கிடைத்தது. நீ, எந்த தாய்க்கும் நல்ல மகன்; உன்னை மகனாக பாவிப்பதில், எனக் கும் மனநிறைவே!

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
 தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: