Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"துரியோதனா.. நில்.. நீ ஒரு வீரனா? உனக்கு மானம் இல்லையா?"

துரியோதனா..நில்..நீ ஒரு வீரனா? உனக்கு மானம் இல்லையா? இது அர்ஜுனன் சொன்ன‍து

பதின்மூன்று ஆண்டுக்காலம் முடியும் நேரம் நெரு ங்கியதும் துரி யோதனன் கலக்கம் அடைந்தான். எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான். ஒற்றர்களை

அனுப்பினான். அவர்களாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அப் போது ஒரு ஒற்றன் புது செய்தி கொண்டு வ ந்திருந்தான். விராட நகரில். கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்பதே அச்செய்தி.

உடனே துரியோதனன்’ அப்பெண். திரௌப தியே என்றான். கீசகனைக் கொன்றவன் பீமனாகத்தான் இருக்கவேண்டும் என்றான். பாண்டவர்கள் மாறு வேடத்தில் விராட நக ரிலேதான் இருக்கிறா ர்கள். நாம் விராட நா ட்டு மன்னனை முற்றுகையிட்டால்.. அவ னைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள். கண்டுபிடித்துவிடலாம். மீண்டும். நிபந்த னைப்படி பன்னிரண்டுகாலம் வனவாசம் அனுப்பிவிடலாம்’ என்றா ன்.

உடனே விராடநாட்டின்மீது போ ர் தொடுக்க‍ ஆயத்தமானான் து ரியோதனன், துரியோதனன் தன க்குத் துணையாகப் பீஷ்மர், து ரோணர், கிருபர், துச்சாதனன் , கர்ணன் ஆகியோரை அழைத் துக்கொண்டு பெரும்படையுட ன். விராட நாட்டின் வடக்குப்பக் கம் இருந்த பசுக்களைக் கவர்ந் தான். அரண்மனையில் இருந்த அரசகுமாரன் உத்தரனுக்கு செய்தி போயிற்று. ‘எனக்கு நல்ல சாரதி கிடைத்தால் அர்ச்சுனனைப் போல் போரிட்டு பகைவனை வெல்வேன்ய என்றான். அதனைக் கேட்ட சைரந்தரி..’பிருகன்னளை ஆடல் பாடலில் மட்டுமல்ல. .தேரோட்டு வதிலும் வல்லவள் . இவளை சா ரதியாகக் கொண்டு போருக்குப் போகலாம்’ என்றாள்.

போருக்கு கிளம்பிய உத்தரன். கௌரவர் சேனையைக் கண்டு திகைத்தான்.தேரினின்று குதித்து ஓடினான்.அவனை விரைந்து பிடி த்த பிருகன்னளை. அவனுக்கு ஊக்கம் பிறக்கும் வண்ணம் உ ரையாடியதோடு மட்டுமின்றி பாண்டவர்கள் ஒளித்து வைத்திருந்த‌ ஆயுதங்களையும் பாண்டவர்களின் சோக கதையையும் சொன்னா ன்.

இவற்றைக் கேட்ட உத்திரன்..’பாண்டவர்கள் இப்போது எங்கே?” என்றான். அப்போது பிருகன்னளை தான் அர்ச்சுனன் என்றும். மற்றவர்க ள் பற்றியும் விளக்கி, ‘நாங்கள் ஓரா ண்டு மறைந்திருக்கவேண்டி.. உங்க ள் அரண்மனையில் அடைக்கலம் புகுந்தோம்..சில நாட்களில் எங்க ளை வெளிப்படுத்திக் கொள்வோம். அதுவரை எல்லாம் ரகசியமாக இரு க்கட்டும். உன்னைச் சார்ந்தவர்களீட ம் கூட இதை வெளியிடாதே’ என்றான். உடன் உத்திரன் வியப்படை ந்தான் .’இனி நான் யாருக்கும் அஞ்சேன்..நானே உனக்கு பாகன்’ என்றான் மகிழ்வோடு.

பின் அர்ச்சுனன் ஊர்வசியை நினைத்துத் தனது பேடி உருவம் நீங் கினான்.தேரில் இருந்த சிங்கக் கொடியை இறக்கிக் குரங்கின் சின் னக் கொடியை ஏற்றினான். வருவ து.. அர்ச்சுனன் என்பதை அனைவ ரும் அறிந்தனர்.’யாரானால் என்ன.. போர் தொடரட்டும்’ என்றான் துரி யோதனன். ‘நானே அர்ச்சுனனைக் கொல்வேன்’ என்றான் கர்ணன்.

அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஒரே சமயத்தில் செலுத்தினான். அவற்றுள் ஒன்று..துரோணரின் பா தத்தில் விழுந்து குரு வணக்கம் செலுத்தியது.மற்றொன்று அவர் கா தோரம் சென்று.. போரிட அனுமதியும், ஆசியும் வேண்டியது .முதல் கடமையாக பசுக்களை மீட்க .. சரமாரியாக அம்பெய்தினா ன்.பேரொலி கேட்ட பசுக்கள் பகைவரின் பிடியிலிருந்து தப்பி ஓடித் தங்கள் ப ண்ணை யை அடைந்தன. கிள ர்ந்து எழுந்த கௌரவ வீரர்க ளைக் கடந்து..கர்ணனைத் தாக்கி னான், அர்ச்சுனன்.எதிர் நிற்க முடியாது..போர்க்களத்தை விட்டு கர்ணன் ஓடினான். பின்னர் துரோணர்..அஸ்வத்தாமன், கிரு பாச்சாரியார்.. ஆகியோர் எதிர்  க்க முடியாது தலைக்குனிந்தன ர்.

பின்னர் .பீஷ்மருடன் அர்ச்சுனன் போரிட்டான். பிதாமரும் சோர்ந் து திரும்பினார். பின். துரியோத னனும் சிறிது நேரமே போர் புரி ந்தான். பின்தோற்று ஓடினான்.

துரியோதனா. நில். நீ ஒரு வீரனா? உனக்கு மானம் இல் லையா? என அவன் மான உண ர்ச்சியைத் தூண்டினான் பார்த் திபன்.பின் மோகனாஸ்திரத்தா ல். அர்ச்சுனன் அனைவரையும் மயங்கச் செய்தான். பின் அர்ச்சு னன் பீஷ்மரைத் தவிர மற்றவர் கள் அணிந்திருந்த பட்டுத் துணிகளை கவர்ந்து வருமாறு உத்திரனி டம் கூறினான்.அவனும் அவ்வாறே செய்தான்.

மோகானாஸ்திரத்தால் மயங்கி விழுந்தவர்கள்..மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள்..தோல்வியால் மனம் உடைந்தனர்.வெட்கத்தோடு அஸ் தினாபுரம் திரும்பினர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: