Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், பேயாடுவது ஏன்?- விரிவான அலசல்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? – விரிவான அலசல்

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும் தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களு க்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பா ர்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு , பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?

இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவைய னைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன

கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க் காதவர்கள் யாரும் இருக்க முடி யாது. எல்லோருக்கும் ஸ்வீட் என் றால் இனிப்பு என்றுதெரியும். இனி ப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அத ன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டு தான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல் லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவ ரும் ஒப்புக்கொண்ட அனுபவம்! ஆ னால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாரு ங்கள்! அந்த கேள்விக்குறி யை மட்டும் சற்று நேரம் உற்றுப் பாருங்கள்.. அதுவும் ஒரு பேய் ஆடுவதைப் போலத்தான் தெரி யும். (மிரண்டவன் கண்ணுக்கு ) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லை யே! என சிலர்… பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கி றேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி, மதம், இன வேறுபாடு இவற்றி ற்கு உண்டா? எனக்கும் தெரி யாது… ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங் கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதி ல்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட் டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றி ற்கு பல பெயர்களும் உண்டு அதை அவ ர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

ன்னை யாருன்னு நினைச் சடா? நான் ஆத்தா…

யாராலும் அடக்க முடியாத சங் கிலி கருப்பன்டா நான்!

இதைத்தவிர,

மாரியாத்தா, காளியாத்தா, பச் சையம்மா, சுடலை மாடன், சவு டம்மா, தொட்டம்மா, காட்டேரி, ரத்தக் காட்டேரி, பில்லலு காட் டேரி இப்படி பல பல பெயர் களைக்கூறி ஆடுவதைப் பார்த்திரு க்கிறோம்.

இந்த ஆட்டங்களின் போது, சிலர் மற்றவர்களுக்கு நடந்த, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கின்றனர். (ஓரிரு வரிகள் மட்டும்). அதை எதிர்பா ர்த்து இருந்தவர்களுக்கு சம்ம தமாக தோன்றும் போது சரியா கிவிடுகிறது. அதாவது கடந்த காலத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள் என கூறுகிறோம்.

சிலர் ஆட்டங்களின்போது, மற் றவர்களை அதிகப்படியாய் துன்புறுத்துவதைப்பார்க்கிறோ ம். குறிப்பாக பளார் என அறை வது, ஹும்.. பேசாதே! நான் சொல்வதைச் செய் எனக்கூறி.. வேப்பிலை வைத்து ஆடுவதை யும், சில நேரங்களில் தன்னை த்தானே வருத்திக் கொள்வதை யும் கீறிக்கொள்வதையும், கத் திகையில் ஏந்திக்கொண்டு ஆடுவதையும் கண்டிருக்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சிலர் ஆடும்போது நன்மை ஏற்படுகிறது, சிலர் ஆடும்போ து தீமை (காயம்) ஏற்படுகிறது.

இதை வைத்தே மக்கள் நல்ல பேய், கெட்ட பேய் என வகை ப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில்.. ஆதி வாசியிலிருந்து அல்ட்ரா மாடர் ன் மனிதன் வரை அடக்கம். இங்கே கல்விக்கு, பணத்திற்கு, பட்டத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, ஜாதிக்கு மதத்திற்கு என்று வித் தியாசம் கிடையாது.எல்லா மதங்களிலும் இந்த பேய் அல்லது ஆவி போன்றவற்றின் ஆதிக்கம் அதிகளவில் ஆளுகை செய் கிறது.

கிறித்தவ மதத்தில், கோயில் களில் ஆராதனை நடக்கும் போதே சில பெண்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள். அ வர்களை கட்டுப்படுத்த தண் ணீர் தெளித்து- ஜெபித்து அட க்குவதைப் பார்த்திருக்கிறோம். இதை அசுத்த ஆவி என்கின்றனர்.

முஸ்லீம் நண்பர்களை எடுத் துக்கொண்டால் அவர்கள் தொ ழுகை செய்யும் பள்ளியிலோ, அல்லது வேறு கூடும் இடங்க ளிலோ அவர்களுக்கு இதுபோ ன்று ஆவி வந்து ஆடுவது கி டையாது. ஆனாலும் சில பெ ண்கள் அல்லது ஆண்கள் வழ க்கத்திற்கு மாறாக சேஷடைக ள் செய்தால் அவைகளும் அவ ர்கள் இமாம் அல்லது அசரத் என்ற குருக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஊதி கட்டுப்படுத்துகிறார்கள் (வாய் மூலம் ஊதி அல்லது ஓதி) நல்ல ஆவியை நல்ல ஜானி என்றும், கெட்ட ஆவியை கெட்ட ஜானி என்றும் இவர்கள் அழைக்கிறார் கள்.

ஆக, மொத்தத்தில் அனைத்து மதத்தினரு ம் பேய், அசுத்த ஆவி அல்லது ஜானி இரு ப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோ ம்..

-இது நடைமுறை!

கெட்ட ஆவி என்று ஒன்று இருந்தால் நல்ல ஆவி என்று இருக்க வேண்டு மல்லவா?

அது எங்கே இருக்கிறது? இது நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி இந் தக் கேள்வியைக் கேட்டால் தெரியும்! எ ங்கே? சற்றே சிந்தி யுங்கள் பார்க்க லாம்!

கெட்ட ஆவியை படிக்க சுடு காட்டு க்குப் போகவேண்டும் என்றால், நல்ல ஆவி யை பிடிக்க வாழும் நாட்டுக்குள் வர வேண்டும்.

சுடுகாட்டில் கிடைப்பது இறந்தவர் சடல ம். வாழும் நாட்டில் கிடைப்பது ஜாவிப்பவரின் உடல்.

இப்போது இவற்றின் வித்தியாசம் என்ன என்று சற்றே உள்நோக்கு வோமா?

இறந்தவர் உடலின் உள்ளேயும், கண் மூக்கு, வாய், இதயம், நுரை யீரல், வயிறு, கை, கால் போன்ற வை இருக்கிறது

ஜாவனுடன் இருப்பவரின் உடலிலும் அதே கண், மூக்கு, வாய், இத யம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது.

இவற்றில் என்ன இல்லை? என்பதுதான் கேள்வி!

அசைவு இல்லை, சலனம் இல் லை.

துடிப்பு இல்லை, நடிப்பும் இல் லை.

ஊக்கமும் இல்லை, ஆக்கமும் இல்லை.

மொத்தத்தில் எதுவும் இல்லை.

அப்படியெனில் இந்நாள் வரை இத்துணை இயக்க ங்களையும், நடத்தல், மூச் சு விடுதல், பேசுதல், படுத் தல், இச்சை அல்லது அனி ச்சை செயல்கள்- போன்ற வற்றை செயல்படுத்த நம து உடலில் எங்கும் வியா பித்திருக்கும் ஆவி ஒன்று இருந்திருக்க வேண்டும் ! அதுதான் ஜாவ ஆவி அல்லது நல்ல ஆவி அல்லது பரிசுத்த ஆவி!

இந்த ஆவி நல்ல விதமான ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தால் நமக்கு உதவும் ஆவிதான்.

இது நமக்கு எதிராக அல்லது வித் தியாசமாக அல்லது வழக்கத்திற் கு மாறாக செயல்படும்போது அது கெட்ட ஆவி, வேண்டாத ஆவி, அச் சுறுத்தும் ஆவி (இறுதியில் பேய்) என பெயர் பெறுகிறது.

இந்த நல்ல ஆவியின் ஆரோக்கிய நிலை சீர் கெட்டுப்போனால், …. கெட்டுப்போய்விடுகிறது? எதினால் சீர் கெடுகிறது?..

பல நோயினால் இருக்கலாம்!

பல சந்தேகங்களினால்இருக்கலாம்!

பல சூழ்நிலைகளினால் இருக்கலாம் அல்லவா?

உங்கள் மனம் இதற்கு என்ன சொல் கிறது? இது வெறும் அறிவுப் பூர்வமா ன கேள்வி மட்டும்தானே! இந்த விள க்கம் நல்ல ஆவிக்கும் கெட்ட ஆவிக் கும்; உள்ள வித்தியாசத்தை மட்டுமே தரும் (தத்து வம்)

ஆக, மொத்தம் ஒவ்வோர் உடலிலும் ஆவி ஒன்று (ஜாவ ஆவி) உலாவிக் கொண்டிருக்கிறது. உயிருள்ள வரையில் என்பது தெரிகிற து.

நமது வாழ்க்கை நிகழ்ச்சிக ளை, நாம் மறக்க சில காலம் தேவைப்படுகிறது. அதுவரை இறந்தவர்களின் நினைவு வருகிறது. அவ்வள வுதான்.

மாறாக, சிலர் ஒருநாள், நா ன் மொட்டை மாடியில் படுத் துக் கொண்டு இருந்தேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெ ண் தூக்குப்போட்டு இறந்து போனாள் அதன் பிறகு இரவி ல் தினமும் ச்சல்..ச்சல் என்ற சத்தம் வருகிறது.. அஹாஹா .. என சிரிப்பது, வா..வா.. என அழை ப்பது போன்ற ஒலியை கேட்டேன் எனவும் கூறுகின்ற னர்.

காரணம், அந்த வீட்டில் போய் படுக்கும்போதே, ஏற்கனவே ஒரு பெண் தூக்குப்போட்டு இறந்தது ஞாபகத்தில் இருக்கும். ஒரு வர் மறந்து தூங்கினாலும் அவரின் ஆழ்மனதில் உள்ளே மறைந்து ஒளிந்திருக்கும் பய, அபய குரல் கத்தின கத் து, கூக்குரல் போன்றவை மீ ண்டும் முன் சுயநினைவுக் கு வந்து, கனவில் தோன்றி.. பாடாய் படுத்திவிடும். இதை த்தான் பேய் வந்து கூப்பிட்ட து என்று கூறுகிறோம்.

சற்று மாறாக, யோசித்துப் பார்ப்போமா?

கனவில் வந்தது ஓர் அழகிய பெண், வெள்ளை சேலை உடுத்தி தலை முடியை நீண்ட தூரமா ய் பறக்கவிட்டு, உங்களை கட்டிப் பிடி த்துக் கொண்டு இருப்பதைப் போல கனவு கண்டா லோ அல்லது பகல் கனவில் திளைத்துப் போனாலோ- அதை பேய் என்று கூறாமல் மோகி னி என்று கூறுகிறார்கள்.

இன்னும் கிராமப்புறங்களில் பெண்கள் ஆடி னால் பேய் என்றும், ஆண்கள் ஆடினால் முனீ ஸ்வரன் என்றும், ரத்த வாந்தி எடுத்தால் காட் டேரி என்றும், அதிகளவி மாதவிலக்குத் தோ ன்றினால் ரத்தக் காட்டேரி என்றும், ஒருவன் தன் மனைவியை விட்டு மாறிமாறி மற்ற பெண்களுடன் அதிகளவு தொடர்பு கொண்டுவந்தால் மோகினி பிசாசு என்றும், கருச்சிதைவு ஏற்பட்டால் பில்லலு காட் டேரி பிடித்திருக்கிறது என் றும், நீல நிறமாக மாறும் குழந்தைகள் அல்லது பெரி யவர்களாய் இருப்பின் நாகா த்தம்மா, நாகராஜா போன்ற பேய் பிடித்திருப்பதாகக் கூறு கிறார்கள்.

இயற்கையான மரணத்திற்கு ப் பிறகு யாரும் பேயாக உலவுவதாக கூறுவதில்லை. ஆனால் துர் மரணம், அகால மரணம், தூக்கு, நீரில் மூழ்கி இறத்தல், கழுத்தை நெரித்து அல்லது அறுத்து, குத்தி, அடித்து கொலை செய்தல், தற்கொலை செய்துகொள்ளல்,

மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி எரித் துக் கொல்லுதல், ரயில் தண்டவாளங்களில் தற்கொலை, விஷ மருந்து சாப்பிட்டு இறத்தல் போன்ற பல்வேறு யுக்திகளை கையா ளுகிறவர்கள் இறந்த பின்னர் மட்டுமே பேய் பிசாசு போன்ற பேச்சே வருகிறது. காரணம், பயத்தால் ஒ வ் வொரு மனிதனும் ஒவ்வொ ரு விதமாக அலைக்கழிக்கப்படுகின் றனர். நிஜத்தில் பேய் என்று ஒன் றும் இல்லை.

மனிதன் என்பவன் தெய்வமாகலா ம் என்பார்கள்.

மனம் பயந்து போனால் பேயுமாக லாம்! இதனால்தான் மிரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்று!

-ஒரு பெண் கோயிலுக்குச் செ ன்றவுடன் ஆடுவதைக் கண்டா ல்.. அவளுக்கு கற்ர ஆராதனை காட்டி அடக்குவது வழக்கம். காரணம் கற்ரத்தில் உள்ள கா ம்பா என்ற ரசாயனப் பொருள் அவளின் மூளை செல்லை தூண்டிவிட்டு, பின்பு சரிசெய்கி றது. இது வெறும் ஹிஸ்டீரியா என்று சொல்லப்படுகிற நிலை மட்டுமே!

இந்த ஹிஸ்டீரியா, ரத்த சோகை உள்ள ஆண்- பெண் இருவருக்கும் வரலாம். ஆனால் பெண்களுக்கு அதி கம். ரத்தப் போக்கு என்பது மாதவில க்கின்போது வெளியாகும். அளவு அதி கமானால் பேய் பிடித்து ஆடுபவர்கள் போல செய்யலாம். அல்லது உளறுவ து அல்லது அதிக கோபப்படுவது அல் லது பொருட்களை தூக்கி எறிவது அ ல்லது தன் குழந்தையைகூட அளவுக் கு மீறி அடிப்பது போன்றவை தோன் றலாம்.

மன விரக்தியினால், கணவனை இழந்ததினால், அல்லது நெருங்கி ய உறவினர்கள் இறந்ததினால், நண்பர்களின் மரணம், அல்ல து காதல் தோல்வி போன்றவற் றுக்குப்பிறகும் ஏற்படலாம். இ வற்றுக்கு எல்லாம் தீர்வு உண் டு. இது விஞ்ஞான காலம்- அஞ் ஞானத்துக்கு இடம் கொடுக்கா மல்- மெய்ஞானத்தை அறிந்து கொள்ளல் அவசியம்.

அடுத்து சிலர் குறி சொல்கிற ர் களே, நான் தஞ்சாவூரிலிருந்து வருகிறேன், ஆனால் வேலூர் பாலா ற்றங்கரையிலே இதைப் பற்றி கரெக்டாக சொல்கிறார்களே எப்படி எனக் கேட்கலாம்!

சிலருக்கு சற்றே ஈ எஸ். பி. மைண்ட் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதற்கு எக்ஸ்ட்ரா சென்சேஷன் பர்செப்ஷன் என்று பெயர்.

பொதுவாக குறி கேட்க வருபவர்கள் ஒரே வகையான மனோநிலை யில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறியி ல் நம்பிக்கை உடையவர்கள் தாம்.

குறி சொல்பவர்கள் அடுக்கடுக்காக கூ றும்பல அறிகுறிகளில் இவர்களுக்கு சரியாக உள்ளதை இவர்களே டிக் அடித்துக்கொள்கிறார்கள். அ வ்வளவுதான்.சாமி ஆடுதல் என்ப து அதிகளவு உணர்ச்சி வசப்படு தல் மட்டுமே! அது வேறுவேறு நி லைகளில் அமைகிறது.

சிலர் பயங்கரமாக மற்றவர்களை அடிப்பது, கொலை செய்யும் முய ற்சியில் ஈடுபடுவது, அழிக்கும் நோக்கத்துடன் ஆடுபவர்களை கேரளாவில் உள்ள சொட்டாணிக்காரா என்ற இடத்திலுள்ள பகவதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள சுவற்றில் பேய் பிடி த்தவரின் கைகளை வைத்து ஆணி அடித்து விடுவது வழக்கம். பின்பு அவர்கள் தெளீவு பெறுவதும்- பேய் விட்டுவிட்டது என்றும் கூறுகின்ற னர்.

இது முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை-எனக்கூறலாம். அழிக்கும் குண முடைய பேயை ஒரு சடன் ஷாக்ட்ரிட்மெண்ட் கொடுப்பதன் மூலம் (ஆணி அடித்தல்) வேகமான மென்டல் வைப்ரே ஷன்ஸ் உண்டாகிற சரிசெய்வது ஆகும்.

ஒரு பெண், மூன்று முறை சரியாக மூன்றாம் மாதத்தில் கருச்சிதை வுக்கு ஆளாகிறாள் என்றால், அவளுக்கு பில்லலு காட்டேரி பிடித்தி ருக்கு- அதை ஓட்டினல்தான் கருதரிக்கும் என்று கூறுவது மடத்த னம்.

மூன்று முறை தொடர்ந்து அ பார்ஷன் ஆனால் அது தொடர் அபார்ஷன் என்று பெயர். தை ராய்டு போன்ற சுரப்பிகள் மற்றும் ஒவேரியன் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் இதுபோன்ற கருச்சிதைவு தோன்று வது வழக்கம்.

சரியான காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால், பில்லலு காட்டேரி ஓடியே போய்விடும்!

மாதவிலக்கின்போது பெண்களுக் கு சில சமயம் கட்டுப்படுத்த முடியா த அளவு உதிரப்போக்கு தோன்றுமா யின் அது கர்ப்பப்பை கட்டியின் கார ணமாகவோ, நீர்ம கட்டியின் காரணமாகவோ இருக்கலாமே தவிர, ரத்தக்காட்டேரிதான் காரணம் என எப்படி சொல்ல முடியும்.

குழந்தை பிறந்தவுடன் பெண்களின் உடம்பில் 75% சக்தி உடனடியா க குறைந்துவிடுகிறது. அது சில மாதங்க ளில் படிப்படியாக தேற்றப் படுகிறது. இந்த நிலையில் அவள் மனம் (கணவனால்- உறவினரால்- மாமனார்-மாமியார் போன் றவர்களால்) நல்ல மகிழ்ச்சியான நிலை யில் இல்லாமல் இருக்குமானால் அந்நேர ங்களில் ஹிஸ்டீரியா போன்ற அறிகுறிக ள் தோன்றும்.

அப்போது நான் எங்கே இருக்கேன்! நீ யா ர்? என்று கணவனைப் பார்த்துக் கேட்பது போன்றவை தோன்றும். இதை பெர்ப்பியூ ரல்மேனியா என்றே கூறுகிறார்கள்.

இப்படி பெண்களின் வாழ்க்கையில் பல கால கட்டங்களில் இவர்கள் ரத்தத்தை இழந்து, ஹிஸ்டீரியா போ ன்ற நிலைக்கு தள்ளப்படுவதினால், பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கிறது என்ற பட்டப் பெயரையும் கொடுத்துவிடுகிறார்கள். (ஆண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்)

சில ஆண்கள் குழந்தைகளை அடிப்பது ம், உதைப்பதும் (கண்டிப்பு என்ற பெயரி ல்) கட்டி வைத்து அடிப்பதும்கூட ஆண் ஹிஸ்டீரியாதான்.

மனைவியின் ரத்தத்தை ஊசியில் இழு த்து, பிராந்தியில் குடித்ததாக ஆண்களி ன் கதைகளைப் படிக்கிறோம். இது ஆ ண் பேயில்லையா?

பேய் வாங்கி பிசாசுகிட்டே கொடுத்தே ன் என்பார்கள். அப்படியானால் பேயை பிடித்துக் கொண்டு வருபவர்கள் யார்?

இனியாவது பெண்கள் பேய் பிடித்து ஆடுகிறார்கள் என்று சொல்லா மல் அவர்கள் ஆடுவதற்கான உண்மையா ன காரணத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வோமா?

-சிவா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: