Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீஷ்மர், இறப்பதற்குமுன் இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1)

இறப்பதற்கு முன் பீஷ்மர், இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1)

அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங் கள்

தருமர், கண்ணனையும் பீஷ்மரையும் வணங்கி விட்டுத் தம் சந்தேகங்களை, அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மரிடம் கேட்கத்தொடங்கினார்..

‘ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள் ளன. ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜ தருமங்களை எனக்கு விரிவா க எடுத்துரைக்க வேண்டும்’ என்றார்.

பீஷ்மர், அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொ டங்கினார்..

‘நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின்

உதவி கிடைக்காது. வண்டிக்கு இரு சக்கரங்களைப் போல வாழ்க் கைக்கு இவ்விரண்டும் தேவை. இவ்விரண்டில் முயற்சியே மேலா னது. ஒருவேளை உன் முயற்சி வீணாய்ப்போனாலும் அது குறித்து வருந்தக்கூடாது. எப்போதும் விடாமுயற்சி என்பது அரசர்களின் மிகப் பெரிய நீதியாகும். “முயற்சியற்ற மன்னனையும்..வேதம் ஓத வெளியே செல்லாத வே தியனையும் பாம்பு எலிகளை விழுங்குவது போல இப்பூமி விழுங்கிவிடும்” என்று சுக்கிராச்சாரியார் கூறியிரு க்கிறார்.

ராஜ தருமத்தில் இரட்சண தருமம் என ஒன்றை அரசன் கவனிக்க வேண்டும்..இந்த இரட்சண தருமத்தை அரச தருமங்களுள் வெண் ணெய் போன்றது எனப் பிரகஸ்பதியும், சுக்கிரரு ம், விசாலாட்சாரும், பர த்வாஜரும், கௌரசிரசு ம், இந்திரனும் போற்றி யுள்ளனர். இந்த இரட்ச ண தருமம் நிறைவேறு ம் வகையைக் கூறுகி றேன்.

பொறாமையின்மை,யுக்தியால் வரி வசூலித்தல், உபாயமின்றி வரி வாங்காமை,நல்லவர்களை அணைத்துச் செல்வது ,சூரத்தனம், சுறு சுறுப்பு, உண்மை,குடிமக்களின் நன்மை, நேராகவும். கபடமாக வும் பகைவர் பலம் பெறாமல் பார்த்துக் கொள்வது, பழுதான கட்டிட ங்க ளைப் பழுது பார்ப்பது, காலத்திற்கேற்ப உடல் தண்டனை. பொருள் தண்டனை விதிப்பது, படைகளை மகிழ்விப்பது,செயலில் சோர் வின்மை, கருவூலத்தைப் பெருகச் செய்வது,நகரைப் பாதுகாப்பது, காவற்காரரிடம் நம்பிக்கை வைக்காமலிருத்தல், நண்பர் .பகைவர் நடுநிலையாளர் இவர்களைப் பகுத்தறிதல், வேலைக்காரரைப் ப கைவரிடம் சேராதிருக்குமாறு செய்தல், நகரை வலம் வந்து நேரா கப் பார்வையிடுவது, துன்புற்றோர்க்கு ஆறுதல் கூறுவது, பகைவ ரை அலட்சியப் படுத்தாமை, இழிந்த செயல்களை விலக்குதல், நியாயத்துடன் பொருந்திய விடாமுயற்சி ஆகிய இக்குணங்கள் இரட்சண தருமங்களாகும்.

இந்திரன் விடாமுயற்சியால் தான் அமுதத்தைப் பெற்று அசுர ர்களைக்கொன்று இவ்வுலகிலு ம் தேவர் உலகிலும் பெரும்புகழ் பெற்றான். முயற்சியால் சிறந்த வன் கல்வியில் சிறந்த பண்டித னை விட மேலானவன்.அரசன் அறிவுடையவனாக இருந்தாலு ம் அவனிடம் முயற்சியில்லை எ னில் அவன் பகைவரால் வெல் லப்படுவான். அர சன் மிக்க பலமுடையவனாக இருந்தாலும்..பகை சிறிதென்று அல ட்சியமாக இருக்கக் கூடாது.நெருப்புச் சிறிதாயினு ம் சுடும்..நஞ்சு கொஞ்சமாக இருந்தாலும் கொல்லும் இவற்றை யெ ல்லாம் கவன த்தில் கொண்டு ஆளும் அரசன் இறந்த பிறகும் புகழப்படுவான்.

உன் செயல் அனைத்தும் சத்திய த்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தவத்தோர்க்கு எப்ப டிச் சத்தியம் முதற்பொருளாக இருக்கிறதோ அப்படி அதுவே அரசர்க்கும் முதற்பொருளாகு ம். நற்குணமும், நல்லொழுக்க மும், புலனடக்கமும், தெளிவு ம், தானமும் உள்ள அரசனை விட்டு ராஜ்யலட்சுமி விலக மாட்டாள்..

தருமரே! வெளியிடத்தகாத அரசாங்க ரகசியங்களைத் தவிர மற்ற வற்றில் உண்மை பேச வேண்டும்..எப்போதும் அரசன் சாந்த குணம் கொண்டவனாக இருக்கக் கூடாது.எப்போதும் சாந்த குணம் கொ ண்ட அரசனை உலகம் மதிக்காது மீறி நடக்கும்..யானையின் தலை யில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமை உள்ள அரசனை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவான்.அதற்காக அர சன் எப்போதும் கடுமையாகவும் நடந்து கொள்ளக் கூடாது. கடுமை யான அரசனிடம் மக்கள் அன்பு பாராட்ட மாட்டார்கள்.ஆதலால் அர சன் எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி நடக்க வேண்டுமோ  அந்த ந்த நேரத்தில் அப்படி அப்படி நடந்து கொள்ள வேண்டும்.அதாவது அதி கத் தட்பமும் அதிக வெப்பமும் இல்லா வசந்த காலத்துச் சூரியனிப் போல இருக்க வேண்டும்.

மேலோரிடம் பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.இது பொது விதி. ஆயினும் மேலோர் தவறிழைத்தால் அவர்களையும் தண்டிக் கத் தயங்கக் கூடாது.மகரிஷி சுக்கிராச்சாரியார் இது சம்மந்தமாகச் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டும்..போர்க்களத்தில் தன து தருமத்தை மீறி அந்தணன் ஆயுதம் ஏந்திப் போர் புரிவானாயின் அரசன் அந்த அந்தணனை ஆயுதத்தால் தண்டிக்க வேண்டும்.. அரச தருமம் அனைத்துத் தருமத்தை விடச் சிறந்தது. அரசாங்கத்திற்குத் தீங்கு இழைப்போர் நண்பராக இருந்தாலும்..குருவாக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்.

அரசன் பதினெட்டுக் குற்றங்களை விலக்க வேண்டும்..இவற்றில் வேட்டை, சொக்கட்டான், பகல் உறக்கம், பிறரை நிந்தித்தல், பெண் மயக்கம்,மதம், வீண் பாட்டு,கூத்து, வாத்தியங்கள்,குடி ஆகிய இப்பத்து ம் காமத்தால் உண்டாவன .தெரியா த குற்றத்தை வெளிப்படுத்துவது, குற்றமற்றவனைத் தண்டிப்பது, வ ஞ்சனையாக ஒருவனைக்கொலை செய்வது,பிறர் புகழ்கண்டு பொறா மை கொள்வது,பிறர் குணங்களை க் குற்றமாகக் கூறுவது,பிறர் பொ ருளைக் கவர்ந்துகொள்வது ,கடுஞ் சொல் கூறுவது,கடுமையான தண் டனை வழங்கு வது. ஆகிய எட்டும் சினத்தால் வருவன.அரசன் இவற்றை அறவே விலக்க வேண்டும்.

அரசன் எப்போதும் கர்ப்பிணியின் தருமத்தில் இருக்க வேண்டும். கர்ப்பிணி தன் மனதிற்கும், நாவிற்கும் சுவையான உணவு உண்ணா மல்..கர்ப்பத்தை வளர்க்கத் தக்க வழியில் இருப்பதுபோல , அரசனு ம் தனக்கு வேண்டும் என்ற செயலைத் தள்ளிவிட்டு உலகுக்கு நன் மை பயக்கும் தரும வழியில் செல்ல வேண்டும்..தைரியமாக நியா யமான தண்ட நீதியைச் செலுத்த வேண்டும்..அப்படி நடந்துக் கொ ண்டால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.

அரசன் வேலைக்காரருடன் பரிகாசமான வார்த்தைகள் பேசக்கூடா து. பரிகாசமாகப் பேசும் மன்னனை ஏவலர்கள் அவமதிப்பார்கள். அரசனின் உத்தரவை மீறி நடப்பார்கள்..ரகசியத்தைக் கேட்பார்கள். அத்துடன் நில்லாது அதனைப் பறை சாற்றுவார்கள்.லஞ்சம் வாங்கி அரச காரியத்தைக் கெடுத்து விடு வார்கள். அரசன் உத்தரவு எனப் பொ ய்ச் செய்திகளை பரப்புவர்.அரசன் எ திரில் அநாகரிகமாக நடந்துக் கொ ள்வர்.நான் சொன்னால் சொன்னபடி அரசன் நடப்பான் என ஆணவத்துட ன் உரைப்பர். ஆகவே வேலைக்கார ர்களிடம் விழிப்பாக இருக்க வேண் டும்.

அரசன் எப்போதும் அமைச்சர்களுட ன் செய்யும் ஆலோசனைகளைப் பிறர் அறியாவண்ணம் மறைவாகச் செய்யவேண்டும். காலையில் அறத்திலும்..மாலையில் பொருளிலு ம், முன்னிரவில் இன்பத்தி லும், பின்னிரவில் தெய்வ சிந்தனையி லும் ஈடுபட வேண்டும். அரச ன் நான்கு வருணத்தாரின் தர்மங்களை யும் காக்க வேண்டும். எல் லோரையும் நம்பி விடக் கூடாது.நம்பத் தக்கவர்களை மட்டுமே நம் ப வேண்டும்.அவர்களிடமும் அளவு கடந்த நம்பிக்கை கூடாது.

ஓதுவிக்காத ஆசிரியன், ஓதாத ரித்விக், பாதுகாவாத மன்னன், விரு ப்பம் இல்லாதவற்றைக் கூறு ம் மனைவி, கிராமத்திலேயே இருக்க விரும்பும் இடையன், காட்டிலேயே இருக்க விரும் பும் நாவிதன் ஆகிய இந்த அறுவரையும் கடலில் உடை ந்த கப்பலைப்போல தள்ளிவி ட வேண்டும் என பிராசேதச மனு கூறியுள்ளார்.

நாட்டை நன்கு பாதுகாப்பதை விட மேலான ராஜ தர்மம் வேறேதும் இல்லை.’ எனக் கூறி முடித்தார் பீஷ்மர்.அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த வியாசர்,கண்ணன்,சாத்யகி ஆகியோர் மகிழ்ந்தனர்.

– டி. வி. ராதாகிருஷ்ணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: