சாலையோரக் கடைகளில் சாப்பிடவேண்டாம்? எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் – அதிர்ச்சிச் செய்தி
இன்றைய மாணவர்கள் வகு ப்பு இடைவேளைகளிலும் சரி, பள்ளி முடிந்து வீட்டுக்குச் செ ல்லும்போதும் சரி, சிற்றுண்டி மற்றும் குளிர் பானங்களைக் குடிப்பதற்காகச் சாலையோர க் கடைகளை மொய்க்கின்றன ர். இந்தப் பழக்கம் ஆரோக்கிய த்துக்கு ஆபத்து தருகிறது என்று எச்சரித்துள்ளது, உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில் அதிக அளவுக்கு
டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் கா மாலை, வயிற்றுப்போக்கு, கால ரா, வாந்தி பேதி, சீதபேதி போன்ற தொ ற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சுத்தமும் சுகாதாரமும் குறைந்து ள்ள சாலையோர உணவகங்களி ல் மக்கள் சாப்பிடுவதுதான் முக் கியக் காரணம் என்று அந்த நிறு வனம் சுட்டிக் காட்டியுள்ளது.
தள்ளுவண்டிகளில் உணவுவியா பாரம் செய்வோர் சமைத்த உண வுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். அதி லும் குறிப்பாக மீன், இறைச்சி போன்றவற்றைப்பல துண்டுகளா க் கி, அவற்றில் மசாலாவைத் த டவி, சிவப்பு நிறத்தில் ஒரு செய ற்கை நிறமூட்டியைப் பூசி, எண் ணெயில் வறுப்பதற்குத் தயாரா க வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். அதேநேரத்தில் சா லைகளில் கிளம்பும் புழுதியும், வாகனங்கள் கக் கும் புகையும், மாசு நிறைந்த காற்றும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து, நச்சுக்கிருமிகளைத் தந்துவிடு ம். இவற்றில் ஈக்கள் மொய்க்கும். இது தொற்று நோய்களுக்கு வழி விடும்.
அடுத்து இந்த உணவகங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் கள் தரம் குறைந்தவை; கலப் படம் மிகுந்தவை. உதாரணமா க, இவர்கள் சமையலுக்கு ஆகு ம் செலவைக் குறைக்க வேண் டும் என்பதற்காக, தேங்காய் எ ண்ணெயையும் அரிசித்த விட்டி லிருந்து எடுக்கப்படும் எண் ணெயையும் கலந்து இறைச்சி யை வறுக்கவும் பொரிக்கவும் பயன்படுத்து கிறார்கள். நெய்க்குப் பதிலாக டால்டாவையும், நல் லெண்ணெய்க்குப் பதிலாக பாமாயிலையும் பயன்படுத்துகிறார்கள்.
இவற்றில் ‘எல்.டி.எல்.’ எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இத ன் காரணமாக சாலை யோர உணவகங்களில் அடிக்கடி சாப்பிடுவோ ருக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பாதிப்புகள் இளம் வயதிலேயே ஏற்படுகி ற வாய்ப்பு பத்து மடங்கு அதி கரிக்கிறது என்று ‘இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்’ ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.
இன்னொன்று, இம்மாதிரி உணவகங்களில் சமையல் எண்ணெயை ச்சிக்கனப்படுத்துவதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய எண் ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயா ரிப்பார்கள்; பலகாரம் சுடுவார் கள். இதில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெயைத் திரும் பத் திரும்பக் கொதிக்க வைக்கு ம்போது ‘டிரான்ஸ் கொழுப்பு அமிலம்’ உற்பத்தியாகிறது. இது தான் இருக்கிற கொழுப்புகளி லேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நே ரடியாகவும் விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியா க வரவழைக்கும் ஆபத்து நிறைந்தது.
மேலும், இனிப்புப் பண்டங்களின் சுவையைக் கூட்ட வும், அவற்றைக் கவர்ச்சிகரமாகக் கா ட்டவும் ‘தேசிய உணவு மற்றும் மருந்துத் தர க்கட்டுப்பாட்டுத் துறை’ அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமி ல்லாத எசன்ஸ், அஜினோமோட்டோ போன்றவற்றை யும் கலப்பதுண்டு. இந்த வேதிப் பொருள்கள் கல ந்த உணவைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்றுப் போ
க்கில் தொடங்கி, இரைப்பை, குடல், கணையப் புற்று நோய் வரும் வாய்ப்பு ம் உண்டு.
ஆகவே, வீட்டில் சுகாதாரமான முறையில் தயாரிக்க ப்பட்ட உணவு களையும் சிற்றுண்டிகளையும் பள்ளிக் கு எடுத்துச் சென்று சாப்பிடுவதே ஆரோக்கியத்துக் குப் பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
– மருத்துவர் கு.கணேசன்