Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிரிப்பு யோகா செய்வதால் கிடைக்கும் பஞ்ச பலன்கள்

சிரிப்பு யோகா செய்வதால் கிடைக்கும் பஞ்ச பலன்கள் அட அதாங்க 5 பலன்கள்

‘சிரித்து வாழவேண்டும்… பிற ர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என் பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிக வும் அர்த்தம் உள்ள தாகும். சிரிக்கும்போது கிடைக்கும் நல்ல பலன்களை

சிரிப்புயோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் காண் போம்.

மிகுந்த மன அழுத்தத்துடன் கவ லையான வாழ்க்கையை வாழ்ந் து வருகின்றீர்களா? உங்கள் வா ழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? கவலைவேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சிசெய்து அதன் நன் மைகளை அனுபவியு ங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.

நல்ல மன நிலை:

தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலை யாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ் வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்ற ன. அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெ ளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழு தும் வழக்கமாக சிரிப்பதைவிட அ திகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.

மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்பயிற்சி

ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத் திற்கு பயிற்சி அளித்து அதிகளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளை க்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற் சாகத்துடனும் ஆரோக்கியத் துடனும் இருக்கமுடியும். சிரி ப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சிதொடர்பான அனை த்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

ஆரோக்கிய பலன்கள்

நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ்ச்சி யாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகாமூலம் நமது நோ ய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்ற து. அதுமட்டுமல்லாமல் சர்க்க ரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி , மாதவிடாய்கோளாறுகள், புற்று நோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின் றது.

வாழ்வாதாரம்

சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். இதனை நாம் ந ல்ல நண்பர்கள் மூலமும் மற் றும் நம் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்களிடமு ம் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்க ளுடன் இருப்பது நல்லது. அது மட்டுமல்லாமல் நாம் சிரித்து ப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கின்றனர்.

கடினமான காலத்தில் சாதிக்கும் மனப்பக்குவம்

‘துன்பம் வரும் போது சிரி’ என்று சில பேர் சொல்வதைக் கேட்டிரு ப்பீர்கள். நல்ல சமயங்களில் யா ராயினும் சிரித்து மகிழலாம். ஆ னால் மிகுந்த கடினமாக காலங் களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரி க்கும் போது நமக்கு அந்த காரிய ங்களிடமிருந்து மீண்டு வரவும், அத்தகைய கடினமான காரியங்க ளை செய்யு ம் துணிவும் கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: