எபோலா என்னும் உயிர்க்கொல்லி நோய் – அறிகுறிகளும் பரவும் வழிகளும்! – எச்சரிக்கைப் பதிவு
எபோலா… என்ன செய்ய வேண்டும்?
இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸி ன் தாக்குதலுக்கு இதுவரை பலியா னோர் எண்ணிக்கை 932. ‘உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக் குதல் குறித்து அதீத முன்னெச்சரிக் கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறு வனம்!
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா… என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றை விட
எபோலாவுக்கு உலகம் கூடு தலாக அலறுகிறதே. ஏன்? ஏ னெனில், எபோலா வந்தால் மரணம் நிச்சயம். அதற்கான தடுப்பு மருந்துகளோ, குண மாக்கும் மருந்துகளோ இன் னும் கண்டறியப்படவில் லை. திடீர் காய்ச்சல், கடும் அசதி, தசை வலி… எனத் தொடங்கி, கடும் வயிற்றுப் போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசி வது வரை சென்று
இறுதியில் மரணம்.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள் ள கினியா, லைபீரியா, நைஜீ ரியா, சியரா லியோன் ஆகிய நான்கு நாடுகளில்தான் இப் போது எபோலாவின் தாக்குத ல் அதிகம். ஆக ஸ்ட் முதல் வார நிலவரப் படி இந்த நாடுகளில் மொத்தம் 1,603 பேர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி, அதில் 932 பேர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர் . ‘எபோலா வைரஸ் கண் டறியப்பட்டதில் இருந்து இது வரை மிக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது இது வே முதல்முறை’ என்கிறார் கள் மருத்துவ விஞ்ஞானிகள். 1976-ம் ஆண்டு காங்கோ குடி யரசு நாட்டில் எபோலா வைர ஸ் முதன் முதலாகக் கண்டறி யப்பட்டது. அதைத் தொடர்ந்து உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன.
தற்போதை ய எபோலா தாக்குதல் முழு க்க, முழுக்க உள்ளடங்கிய கிராமப்புறங்களில் நிகழ்கிற து. மருத்துவ வசதிகள் உடனு க்குடன் சென் று சேர முடியாத அந்தப் பகு திகளில், நோயின் தீவிரமும் பரவுதலு ம் மிக வேகம்!
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்கரெட் சான், ‘நமது கட்டுப்பாட்டு வரம்புக்கு அப் பாற்பட்டு எபோலா பரவிக் கொண்டிருக்கிறது’ என்று பதறுகிறார். எபோலா தாக்குதலுக் குள்ளான நான்கு ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 44,700 இந்தியர்கள் வசிப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர் ஷவர்தன் நாடாளு மன்றத்தில் தெரிவித்து ள்ள நிலையில், இவர்கள் மூல ம் எபோலா இந்தியாவுக்குள் வரக்கூடும் என்ற அச்சம் நிலவு கிறது.
மற்றொரு கோணத்தில், திடீரென எபோலா பயம் பரவ என்ன கார ணம் என்ற ரீதியிலும் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. எபோலா மருந்துக்கா ன மார்க்கெட்டை உண்டாக்கும் முயற்சி, எபோலா வைரஸ்களை ‘உயிரியல் ஆயுத மாக’ நிலைநிறுத்தும் முயற்சி என்றெல் லாம் ஏக பரபரப்புகள்.
இப்பிரச்னையில் தென்னிந்தியா, அதிலும் குறிப்பாக சென்னை மிகுந்த எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். ஏனெனில் சென் னை, ‘இந்தியாவின் மருத்துவத்தலை நகர ம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டினர் சிகிச்சைக்காக இங்கு வந்துசெல்கின்றனர். இந்தியாவுக்கு மருத் துவச் சுற்றுலா வருபவர்களில் 45 சதவிகிதம் பேர் சென்னைக்குத் தான் வருகின்றனர். சராசரி யாக ஒரு நாளைக்கு 150 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். இவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பரவுவதற்கான சாத்தியங் கள் ஏராளம். இரண்டாவது , தமிழ் நாடு மற்றும் கேர ளாவில் இருந்து ஏராளமா ன நர்ஸ் கள் வெளிநாடு களுக்குச் சென்று பணிபுரி கிறார்கள். அதில் ஆப்பிரிக் க நாடுகளும் உண்டு. இவர் கள் திருவனந்தபுரம் அல் லது சென்னை விமான நிலையத்தின் வழி யேதான் ஊர் திரும்ப வே ண்டும். இவர்
கள் மூலமாகவு ம் எபோலா வரலாம். தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களி ல் நிறைய ஆப்பிரிக்க மாண வர்கள் படி க்கிறார்கள். அவர் கள் சொந்த ஊர் சென்று திரு ம்பு ம்போது எபோலாவைச் சுமந்து வரக்கூடும். இவற் றையும், இன் னும் மற்ற சாத்தி யங்களையு ம் யூகித்து,முன் தடுப்பு நடவ டிக்கைகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டாக வேண்
டும்.
நகர் மயமாதலில் நாட்டில் முத ல் இடத்தில் இருக்கும் சென் னையில் மக்கள் நெருக்கடி மிக அதிகம். ஆக , மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டி யது அவசியம்!
எபோலா… அறிகுறிகள் என்ன?
எபோலா வைரஸ் மூன்று வழிக ளில் பரவுகிறது.
1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்… அதாவது ரத் தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து… போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும்போது எபோ லா தாக்கும்.
2.எபோலா தாக்குதலுக்கு உள் ளான மிருகங்களின்மாமிசத்தை ச் சாப்பிட்டால் பரவும்.
3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப் புடன் இருக்கும். அந்தச் சடலத்தை த் தொட்டு புழங்கும்போது எபோ லா தாக்கும்.
எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.
எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைர ஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன் கூ டிய இருமல், கடும் வயிற்றுப் போக் கு… போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள் காமா லை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித் தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வே ண்டும்.
மேலே சொல்லப்பட்ட அறிகுறி களுடன் ஒருவர் மரணமடைந் தால், அவரை உடனடியாக அட க்கம் செய்துவிடவேண் டும்.
எபோலாவுக்கு மருந்து கிடை யாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப் பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண் டும்.
சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோ கித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர்களு டன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்துஉண்பது, சுகாதாரமற்ற பகுதிக ளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன் னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக் கும்!
எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469