Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றுவரை தொடரும் 'கிருஷ்ணரின் ராசலீலை'! – அதிர்ச்சியூட்டும் மர்மங்களும் ஆதாரங்களும்!

இன்றுவரை தொடரும் கிருஷ்ணரின் ராசலீலை பற்றியும் அதிர்ச்சி யூட்டும் மர்மங்கள் – அதிர வைக்கும் ஆதாரங்கள்

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொ ன்மங்கள்!!!

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண் டிகையாகும். மதுராவில் பிற ந்த கிருஷ்ணர் யமுனை நதி யில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார். கோகுலத்திலு ம் பிருந்தாவனம் போன்ற அதனை சுற்றியுள்ள இடங்களிலும் தான் தன் ராசலீலைகளை கிருஷ்ணர் புரிந்திருக்கிறார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இடங்களில்

ன்றாக விளங்கியது பிருந்தாவனம். அங்கே தான் ராதையுடனும் கோகுலத் தை சேர்ந்த பிற கொபியர்களுடனும் அவர் ராசலீலை புரிந்துள்ளார்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணா பரமாத் மாவை ஸ்ரீ பங்கே பிஹாரி என்ற பெயரில் அழைத்துள்ளனர். இந்த இடத்திற்கு வரும் ஸ்ரீ பங்கே பிஹாரி கோபியர்களுடன் ராசலீலை புரிவார் என இது நாள் வரை நம்பப்பட்டு வருகிறது. பிருந்தாவனத்தில் உள்ள ஒரு சிறிய சோலையை நிதிவன் என அழைத்தனர். இந்த இடத்திற்கு ஒவ் வொரு இரவும் கிருஷ்ணர் வந்து தன் தெய்வீக புல்லாங்குழலை வாசிப்பார் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். அந்த இசையில் அந்த சோலை யில் உள்ள மரங்கள் மனிதர்களாக மாறி நடனம் ஆட தொடங்கி விடுமாம். காலையில் மீண் டும் மரங்களின் தோற்றத்தை பெற்று விடுவார்கள்.

அந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா இருப்பதை மிக நன் றாக உணர முடியும் என்பது மிகவும் சுவாரசியமான தகவல் ககும். சொல்லப்போனால் பிரு ந்தாவனம் முழுவதும் இதனை உணர முடியுமாம். மேலும் நிதி வன் சோலைக்கு வந்து வணங்குபவர்களுக்கு வேண்டியது எல்லா ம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் கிருஷ்ண பரமா த்மா உண்மையிலேயே நிதிவனுக் கு தினமும் இரவு வருகிறாரா? அதற்கு என்ன சாட்சி?

நிதிவன்பற்றியும் கிருஷ்ணரின் ராச லீலை பற்றியும் அதிர்ச்சியூட்டும் மர்மங்களைபற்றி தெரிந்துகொள் ள தொடர்ந்து படியுங்கள். படித்த பிற கு அப்படியே ஆடி போவீர்கள்.

1) நிதிவன்: மர்மங்கள் நிறைந்த வனம் (இது இங்கு பிடிக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம் )

நிதிவன் என்ற சிறிய சோலை முழுவதும் சிறிய பச்சை மரங்கள் நிறைந்திருக்கிறது. அதன் வடிவங்களை பார்ப்பதற்கு விந்தையாக இருக்கும். இந்த மரங்களின் கிளைகள் ஒன்றுக்கொன்று பிணைந் திருக்கும். அதனை சற்று உற் றுப் பார்க்கையில், பார்ப்பத ற்கு மனித வடிவில் தெரியும் . சாயங்காலாம் 8 மணிக்கு மேல் இந்த வனத்திற்குள் மனிதர்கள் நுழைய அனுமதி யில்லை. சொல்லப்போனால், விலங்குகள் கூட இந்த வனம் பக்கம் இரவு நேரத்தில் போகாதாம். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த வனத்திற்குள் செல்ல முற்பட்டவர்கள், குருடாகவோ அல்லது செவிடாகவோ அல்லது ஊமையாகவோ அல்லது இறந்தும் கூட போய் விட்டார்கள்.

2) மரங்களின் மர்மங்கள் (இது இங்கு பிடிக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம் )

நிதிவனில் உள்ள மரங்களிடம் விசித்திரமான அம்சம் இருக்கும். அங்கே இருக்கும் மரங்க ளின் கிளைகள் ஒன்றுக் கொன்று பிணைந்திருக்கு ம். இதனை பார்ப்பதற்கு அவைகள் கட்டிப்பிடிப் பதை போலவே இருக்கும். இந்த மரங்கள்தான் கிருஷ் ணரின் பெண் தோழிகளா ன கோபியர்கள் எனவும் சாயங்கால நேரத்தில் அவ ர்கள் உயிரை பெறுவார்க ள் எனவும் நம்பப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மாவிடம் இரவு முழுவதும் ஆடி பாடி அவர்கள் விளையாடுவார்கள். மறுநாள் காலையில் அவர்கள் மீண்டும் மரங்களாக மாறி விடுவார்கள். அதனால் தான் பார்ப்பதற்கு நடனம் ஆடும் அமைப்பில் உள்ள அந்த மரங்கள் தினமும் அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கு மாம்.

3)கிருஷ்ணரின் புல்லாங்குழ ல் (இது இங்கு பிடிக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம் )

புகழ் பெற்ற இதிகாசங்களின் படி, தினசரி இரவுபிருந்தா வன த்திற்கு வருகை தரும் கிருஷ் ணர் தன் புல்லாங் குழலை வாசிப்பார். இந்த வனத்தில் இருந்து தினமும் புல்லாங்குழலின் தெய்வீக இசை கேட்பதாக பலரும் கூறுகின்றனர்.

4) கிருஷ்ண லீலா (இது இங்கு பிடிக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம் )

ஒவ்வொரு நாள் இரவும் நிதிவனில் உள்ள ஒரு குடிசை யில் இரண்டு பல் துலக்கும் தூரிகை கள், ஒரு ஜாடியில் புனித நீர் மற்றும் இனிப்புகளை பூசாரி கள் வைத்து விடுவார் கள். சாயங்கால ஆரத்திக்கு பின் படுக் கையையும் போட்டு வைப்பார்கள். காலையில், அந்த படுக்கை படுத்த நிலையில் காணப்படும். மற்ற பொருட்களையும் யாரோ பயன்படுத்திய நிலையில் இருக்கும்.

5) ராதா கிருஷ்ணாவின் ஓய்வெடுக்கும் இடம் (இது இங்கு பிடிக்க‍ப்பட்ட‍ ஒளிப்படம் )

நிதிவன் தான் கிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதை யின் ஓய்வெடுக்கும் இடம். தங்களின் ராசலீலைக்காக தினமும் இரவு இங்கே அவர் கள் வருவார்கள்.

தமிழ் போல்டு ஸ்கை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: