Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

17-8-14- 'ஓரினசேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும்'!

அன்புடன் அந்தரங்கம் (10-8-14) ஓரின சேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும்

அன்புள்ள அம்மாவிற்கு —

ன் வயது 21; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறே ன். ஒரு தங்கை இருக்கிறாள்; என் குடும்பம், ஒரு காலத்தில் வசதியாய் வாழ்ந்து, தற்போது வறுமையில் வாடி கொண்டி ருக்கிற ஏழைக் குடும்பம். என் அம்மா மிகவும் பொறுமை சாலி என் தந்தை, 20 பேருக்கு வேலை கொடுத்தவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளை ச்சலுக்கு ஆளாகி,

கவலையை மறக்க, மது அருந்த துவங்கியவர், இன்று குடிக்கு முழு அடிமையாகி விட்டார்.

வாழ்க்கையில் யாருமே படாத துன்பங்களை நாங்கள் அனுபவி த்துக் கொண்டிருந்தாலும், உறவினர்களின் உதவியால் சற்று நம்பி க்கையுடன் வாழ்கிறோம். நானும், எப்படியாவது குடும்பத்தை நல் ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வைராக்கியமு ம், லட்சிய வெறியும் கொண்டு நன்றாக படித்து வருகிறேன். ஆனா ல், சிறு வயதிலிருந்தே என் தந்தையை கண்டு அஞ்சியதாலோ என்னவோ, பயம் நிறைய உண்டு. இதனால் ஒரு செயலை செய்ய நினைத்தால், பலவிதமான எதிர்மறை எண்ணங்களும் வருகின் றன. இத்தகைய மனத் தடுமாற்றத்தினால், ஒரு சில இடங்களில் தோல்வியை தழுவுகிறேன்.

நான், பிளஸ் 1 படிக்கும் போது பள்ளியில் புதிய மாணவன் ஒருவ னின் நட்பு கிடைத்தது. அவன் மிகவும் நல்லவன்; பிற ருக்கு உதவி செய்வான். ஆ னால், அவனை எல்லாரும் தவ றாக பேசினர்; அவன் நடையை யும், பாவனையையும் கேலி செய்தனர். ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் எதுவும் தோன்றி யதில்லை. ஒருமுறை அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன்; என் எண்ணம் அனைத்தும் மாறியது. அவன் எல்லா தவறான பழங்கங்க ளையும் கொண்டிருந்தான். என க்கு ஆபாச படங்களை காட்டியது டன் மட்டுமல்லாமல் என்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தான். சொல்வதற்கே வெட்கமாக இருக்கி றது… ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டான்; நானும் அவனுக்கு இண ங்கி விட்டேன். மேலும், என க்கு தவறு என்று தெரிந்த இந்த விஷய த்தை மீண்டும் மீண்டும் செய் தேன்; கட்டுப்பாடாக இருக்க நினைத் தும் என்னால் முடியவி ல்லை.

தற்போது, ஒரு பெண்ணை காதலிக்கிறேன்; அவள் தான் என் மனை வி என்று முடிவு செய்து விட்டேன். அவள் மிகவும் நல்லவள்; ஆனா ல், பொறுமைசாலி அல்ல. நான் தவறு செய்தால், தட்டிக் கேட்கும் ஒரே ஜீவன் அவள். அவள் மேல் கொண்ட காதலால் என் படிப்பிற்கு, எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

அவளிடம் என் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் சொல்லி விட் டேன். ஆனால், அந்த பழக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அவ ளிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என, பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். தற்போது அந்த மாதிரியான தவறான செயல்களில் ஈடுபடவில்லை. என் காதலியிடம், குடும்ப நிலையை மேம்படுத்திய பின், திருமணம் செய்து கொள் வதாக கூறி, எட்டு ஆண்டுகள் காத்தி ருக்க சொல்லியிருக்கி றேன்; அவளும் சம்மதம் தெரி வித்து விட்டாள்.

அம்மா… என் நண்பரிடம் கொ ண்ட அந்த தவறான பழக்கத் தை அவளிடம் சொல்லி விட வா… எனக்கு அவளிடம் எதை யும் மறைக்க பிடி க்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தை சொன்னால், கண்டிப்பாக என்னை ஏற்க மாட்டாள்; என்ன செய்வது என்று எனக்கு வழி காட்டுங்கள் அம்மா.

இப்படிக்கு,
உங்கள் மகன்.

அன்புள்ள மகனுக்கு —

உன் கடிதம் கிடைத்தது; பொது வாகவே, 16 வயது என்பது ஹார் மோன் குழப்பங்கள் நிகழும் வய து. இந்த வயதில் தடுமாற்றங்கள் நிகழ்வது சகஜம். கெட்ட நண்பன் சகவாசத்தால் ஓரின சேர்க்கை யாளனாக மாறியிருக்கிறாய். தற் போது அதிலிருந்து விலகி விட்ட தாகவும் கூறுகிறாய். பின், ஏன் இந்த விஷயத்தை அவளிடம் சொ ல்வதற்கு இத்தனை தவிக்கிறாய் ? நீ என்ன கின்னஸ் சாதனையா நிகழ்த்தியிருக்கிறாய், உன் காத லியிடம் பெருமையுடன் சொல்லி மகிழ துடிக்கிறாய்?

மகனே… புரியாத வயதில் தெரியாத ஒரு காரியத்தை செய்து விட் டாய்; அதையே ஏன் திரும்பத் திரும்ப நினைத்து மருகிக் கொண்டி ருக்கிறாய்?

கால் இடறி சேற்றில் விழுந்து விட்டோம் என்பதற்காக அதையேவா காலத்துக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்… இல்லை தானே! இந்த இடத்தில் பள்ளம் இருக்கு என்று சுதாரித்து, அடுத்த முறை அ ந்த இடத்தைக் கடக்கும் போது கவனமாக காலை வைத்து, சுற்றிப் போவோமா இல்லையா? அதே போன்று, மீண்டும் அந்த புதைக் குழியில் விழுந்து விடாம ல் எச்சரிக்கையாக இரு; அது போதும்.

கண்ணா… நிகழ்காலம் மட்டும் தான் நமக்கானது; இறந்த காலம் புதைக்கப்ப ட்ட சவம்; அதை தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்ய நி னைக்காதே; நாற்றம் தான் அடிக்கும். அதைவிடுத்து, மனசுக்குள் நீ வெறுக்கும் அந்த கடந்த காலத்தை கடந்து போ… உனக்கான கட மைகளும், நீ புரிய வேண்டிய சாதனைகளும் கடல் போல் விரிந்து கிடக்கு!

காதலில் ஈடுபடும் காதலனோ, காதலியோ தங்கள் எதிர்பாலினரிட ம் தங்களின் இருண்ட பக்கங்களை, வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்போதைக்கு மன்னிப்பதாக கூறுபவர்கள் பின்னாளில், குத்திக் காட்டி துன்புறுத்துவர். அதன்பின், சொர்க்கத்தின் கதவுகள் மூடி, நரகத்தின் கதவுகள் திறந்து கொள்ளும். காதலியை எட்டு ஆ ண்டுகள் காத்திருக்க சொல்லியிருக்கிறாய்; இதுமிக நீண்ட இடை வெளி. இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஓரினச்சேர்க்கை பழக்கம் உன்னை தொற்றிக் கொண் டாலும் தொற்றிக் கொள்ளு ம்; ஜாக்கி ரதை!

எதற்கும் முன்னெச்சரிக் கையாக, ஹெச்.ஐ.வி., டெ ஸ்ட் எடுத்துப் பார்த்து விடு; ஓரின சேர்க்கையாளர்க ளை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும். டெஸ்ட் ரிப்போர்ட் நெகடிவ் வந்தால் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ்க்கையை தொ டரலாம். எட்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாமல் உன் காதலி, உன் கை நழுவிபோகக்கூடும் அல்லது அவளுடையபெற்றோர் அவளுக் கு திருமணம் செய்துவைத்துவிடலாம். அம்மாதிரியான சூழ்நிலை வந்தால், மனமொடிந்து விடா தே… தங்களுடைய இருண்ட ஏழ்மை க்கு, உன் மூலம் விடிவு கிடை க்கும் என்று, கண்களில் ஏக்கத்தை நிரப்பி, உன் கைகளை நம்பி, ஒளிமயமான எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருக்கும், உன் பெற்றோரையும், தங்கையையும் மனதில் இருந்திக் கொள்; உன் லட்சியத்தில் உறுதியாக இரு.

படிப்பு முடிந்ததும், வேலைக்கு போய், பொறுப்புமிக்க அண்ண னாய் உன்தங்கைக்கு திருமண ம் செய்துவை. தாயை அன்பாக பார்த்துக் கொள்; குடி நோயிலி ருந்து தந்தையை மீட்டு பராமரி. நீண்ட நாள் காத்திருக்க வைக் காமல், உன் கடமை அனைத்து ம் முடிந்த பின், உன் காதலி உனக்காக காத்திருந்தால் அவளை மணந்து கொள்; வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர் நாளிதழிலிருந்து . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: