Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! – ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடன் படங்கள்

கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! – ஆச்ச‍ரிய, அபூர்வ, அதிசய‌, காட்சியுடம் படங்கள்

Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென

என் முன் தெரிந்தது.

கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி.. என் தேகம் சிலிர்த்தது.

இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும் காணவேண்டும் என விரும்புகிறேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

thanks to vidya subramaniam and padma mani on facebook

5 Comments

    • இந்த பதிவின் கீழ் நான் எனது பெயரைக் குறிப்பிட வில்லை! அந்த பதிவிற்கு உரியவர் மற்றும் அந்த பதிவை எனது பார்வைக்கு வைத்தவர் ஆகிய இருவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருக்கிறேன்.
      இன்னொருவரது பதிவை நான் எப்போது சொந்தம் கொண்டாடியது கிடையாது. இணையத்தில் நான் படித்த பதிவு நன்றாக இருக்கும்பட்சத்தில்,அந்த பதிவை எனது இணையத்தில் பகிர்ந்து அந்த பதிவின் கீழே உரியவர் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவிப்பேன். பல வேளைகளில் ஒரே பதிவு பல்வேறு இணையங்களில் வெளிவந்திருக்கும் பட்சத்தில் அந்த பதிவிற்கு உரிமையாளர் யார் என்றே தெரியாத போது, இந்த பதிவு விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல என்ற வாசகத்தை தவறாது குறிப்பிட்டு வருகிறேன்.
      கருத்தை தெரிவித்த‍வர் அவரது பெயரைக்கூட வெளியிட துணிச்சல் இல்லையே!
      ஆகையால் மேற்காணும் த்ங்களது நாகரீகமான கருத்து தவறானவையே ஆகும்.
      மேலும்
      கைலாயத்தில் மெய்சிலிர்க்கும் அபூர்வ காட்சி – மாறுபட்ட கோணத்தில் சிவன்! – படங்கள் இணைப்பு என்ற தலைப்பில் கீழ் வெளிவந்த பதிவில் உள்ள‍ புகைப்படங்கள் யாவும் நான், நேற்றைய தினம் நண்பகல்12.50 மணிக்கு கூகுள் எர்த்தில் தேடி கண்டுபிடித்த‍ புகைப்படங்கள் ஆகையால் இதில் எனது பெயரை வெளியிட்டுள்ளேன். இதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. தற்போது உள்ள‍ நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, மேலே பகிரப்பட்டுள்ள‍ புகைப்படங்களை, ஆய்ந்து பார்த்தால், எனக்கு உரிமையானவை என்பது தெள்ள‍த் தெளிவாக தெரியும்.
      எதையும் ஆராயாமல் அவசர கோலத்தில் உணர்ச்சி வயப்பட்டு, கருத்து தெரிவிக்காமல், நன்றாக ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply