Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், செய்திகளை பரிமாற உதவும் கோடென்னா!

செல்போன் சிக்னலைப் பயன்படுத்தாமல், தங்களுக்குள் செய்தி களை பரிமாற உதவும் கோடென்னா!

வாட்ஸ் ஆப், பிபிஎம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் பல வந்துவிட்டாலும் சரியான நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை எனில் இவை எதையுமே பயன்படுத்த முடியாது. இதைப் போக்கும் வகையில்

மீபத்தில் ‘கோடென்னா’ (goTenna) என்ற கருவி வெளியாகியுள்ளது.

சிற்றலை (Low frequency) மூலம் இயங்கும் இந்தக் கரு வி எந்த செல்போன் நெட் வொர்க்கின் உதவியும் இல் லாமல் டெக்ஸ்ட் மெசேஜை அனுப்பவல்லது. அதாவது, இந்த ‘கோடென்னா’ கருவியை இரண்டு நபர்கள் வைத்திருந்தால், அவர்கள் இருவரும் செல்போன் சிக்ன லைப் பயன்படுத்தாமல், தங்க ளுக்குள் செய்திகளை பரிமாற லாம். மௌத்-ஆர்கன் போலத் தோற்ற மளிக்கும் இந்தக்கருவி யின் மேல்புறத்தை ஆன்டெனா போல இழுத்துவிடலாம்.

நீண்ட தூரத்திலும் பயன்படுத்து ம் வகையில் 151-154 MHz அலைவரிசையை இந்தக் கருவி பயன்படுத்துகிறது. 147 mm உயரமும் 56.7 கிராம் எடையும் கொண்ட இந்தக் கருவி தண் ணீர் மற்றும் தூசிகள் உள்ளே செல்ல முடியாதபடி அமைக்கப் பட்டு ள்ளது.ஒரு இண்டிகேட்டர் லை ட் மற்றும் ஃப்ளாஷ் மெமரி யைக் கொண்டுள்ளது ‘கோடெ ன்னா’. இந்த ஃப்ளாஷ் மெமரி பல்லாயிரக்கணக்கான மெசே ஜ்களை சேமித்துக்கொள்ளும் தன்மையுடையது. லித்தியம் -ஐயான் (Lithiyum-ion) பேட்டரியைக் கொண்டுள்ள இந்தக் கருவி யை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்தக் கருவியை இரண்டு வெவ்வேறு இடத்தில் வைத் திருக்கும் நபர்கள் அவர்கள து ஸ்மார்ட்போனில் ‘கோடெ ன்னா’வை கட்டாயமாக இன் ஸ்டால் செய்திருக்க வேண் டும். தற்சமயம் இந்தக் கருவி ஆப்பிளின் ‘ios’ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ்களில் மட்டும்தான் கிடைக்கிறது. பரபரப்பான நகரத்தில் 2.5 கி.மீ தூரத்திலும், பாலைவனத்தில் 10 கி.மீ, வரையில் இந்தக் கருவியைக் கச்சிதமாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்கச் சந்தையில் இரண்டு ‘கோடென்னா’ கருவிகள் $149.99 என்ற விலையில் தற்போது முன் பதிவு நடந்து வருகிறது. இந்தத் தொ ழில்நுட்பம் செல்போன் உலகத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசெல்லு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=> செ.கிஸோர் பிரசாத் கிரண்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: