Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெச்சரிக்கைத் தகவல்கள்! – ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி பற்றிய முன்னெ ச்சரிக்கைத் தகவல்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி…

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில்,

இது உங்களின் தேவை, பட் ஜெட் ஆகியவற்றைப் பொறுத் து அமையும். ஒரு குடும்பம் எடுக்கும் பாலிசி இன்னொரு குடும்பத்துக்குப் பொருந்தாது. எனவே, ஒரு திட்டத்தைத் தேர் ந்தெடுக்கும் முன் அதன் சாதக, பாதகம் என்ன என்பதைத் தெ ரிந்துகொள்வது நல்லது. மே லும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் கீழ்க் கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வது அவசியம்.

1.பாலிசியின் கவரேஜ் தொகை போதுமானதா?

உங்களுக்கும், உங்கள் மனை விக்கும் வேலை பார்க்கும் நிறுவன த்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரனஸ் பாலிசி எடுத்திருந்தாலும், குடும்பத்துக்கு தனியாக ஒரு ஹெல்த் பாலிசி எடுப்பது அ வசியம். ஏனெனில், நிறுவனத்தி ல் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகை உங் களுக்குப்போதுமானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. எனவே, தனி யாக ஒரு டாப்அப் பாலிசி எடுத்து க் கொள்ளலாம்.

குடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுக்கும்போது யோசித்துப் பார்க்க வேண்டும். அதா வது, தனிநபர் பாலிசி எடுக்கப் போகிறீர்களா, ஃப்ளோட்டர் பா லிசி எடுக்கப்போகிறீர்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தனிநபர் பாலிசி பிரீமியத்துடன் ஒப்பிடும் போது ஃப்ளோட்டர் பாலிசியின் பிரீமியம் குறை வாகஇருக்கும். பிரீமியம் குறை வாக இருக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும் போது கவரே ஜ் போனமானதாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண் டும்.

குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்போது அவர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப் பது நல்லது. பொதுவாக, ஃப்ளோட்டர் பாலிசியில் கணவன், மனைவி மற்று ம் இரண்டு குழந் தைகளுக்குத்தான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், சில நிறுவனங்கள் பெற்றோர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும் வகையில் ஃப் ளோட்டர் பாலிசியை வடிவமைத்துள் ளன.

கவரேஜ் என்கிறபோது நீங்கள் குடியி ருக்கும் நகரத்தின் மருத்துவச் செல வை கவனத்தில் கொள்வது அவசிய ம். நீங்கள் எடுக்கும் பா லிசி கவரேஜ் தொகை மற்றும் நோ க்ளைம் போனஸ் மூலம் கிடைக்கும் கூடுதல் கவரேஜ் ஆகிய இரண்டும் சே ர்த்து மருத்துவச் செலவுகளை ப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்க வேண்டு ம்.

2.எதற்கு க்ளைம் கிடைக்கும், கிடைக்காது?

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நீங்கள் முக்கிய மாகக் கவனிக்கவேண்டியது, எந் தெந்த வியாதிகளுக்கு க்ளைம் கிடைக்கும், எந்தெந்த வியாதிகளு க்கு கிடைக்காது என்பதைத் தான். ஏனெனில், பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்கள் என்பதைவிட எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்பதைத் ததா ன் கவனிக்க வேண்டும்.

ஹெல்த் பாலிசி எடுக்கும்போது, இதுவரை உங்களின் உடல்நலம் குறித்த கணிப்பு தவறாகப் போவ தற்கான வாய்ப்பு அதிகம். அதாவ து, இதுவரை எனக்கும், எனது குடும்பத்துக்கும் எந்தவிதமான வியாதியும் வந்ததில்லை. எனவே, நான் குறைவான அளவு கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறுவது தவறு. வயதாகும்போது வியா தி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.

தேவைகளின் அடிப்படையில் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது, நீங்கள் தீவி ர நோய் பாதிப்பு, விபத்தினால் மருத்துவ மனையில் அனுமதி க்கப்படும்போது மற்றும் பொது வான மருத்துவச் செலவை ச மாளிப்பது என எதற்காக பாலிசி எடுக்கிறீர்கள் என்பதை முன் கூட் டியே முடிவு செய்துகொள்வது நல்லது.

ஹெல்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில நோய்களுக்கு நிரந்தரமாகவும், சிலவற் றில் குறிப்பிட்ட காலத்துக்கும் க்ளைம் செய்ய முடி யாது. விண்ணப்ப படிவத்தை கவனமாகப் படித்து இதைத் தெரிந்து கொ ள்ளலாம்.

3.பிரீமியத்தைப் பாருங்கள்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன், நீங்கள் செலுத்து ம் பிரீமியத்துக்குத் தரும் மொத்த கவரேஜ் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். சரியான பிரீ மியத்தில் விரிவான கவரேஜ் கி டைக்கும் வகையில் பாலிசி இரு க்க வேண்டும்.

நீங்கள் எடுக்கும் பாலிசியில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களின் பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிரீமியத்தை மட்டும் ஒப்பிடக் கூடாது. மேலும், இப்படி ஒப்பிடு ம் போது, கோபேமென்ட் (மருத்து வச் செலவில் நாம் கட்டவேண்டி ய சதவிகிதம்) எத்தனை சதவிகி தம் செலுத்த வேண்டும் என்பதை யும் சேர்த்துதான் பார்க்க வேண் டும்.

4.மருத்துவமனை நெட்வொர்க்கை கவனியுங்கள்!

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உங்கள் பகு தியில் உள்ள சிறந்த மருத்துவ மனைகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகள் உங்கள் வீட்டு க்கு அருகில் உள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும். அவசரதேவை  ஏற்படும்போது விரைவாக மருத்து வமனைக்குச் செல்வதற்கு இது வசதியாக இருக்கும். கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை முக்கிய மாகப் பார்க்க வேண்டும்.

5. பாலிசி புதுப்பிப்பு, நிபந்தனைகளைப் புரிந்துகொள்ளவும்..!

பாலிசியைத் தொடர்ந்து புதுப்பிக்கும்போது, சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோய்களுக்கான காத்திருப் புக் காலம் என்பது குறைவாக இருக்கும். பாலிசியில் க்ளைம் எதுவும் செய்யவில் லை எனில் நோக்ளைம் போனஸ் கிடை க்கும்.

அடுத்து, பாலிசியின் நிபந்தனைகளை நன்றாகப் படித்து புரிந்து கொ ள்வது நல் லது. பாலிசியில் ஏதாவது புரியவில்லை எனில், அது குறித்த சந்தேகத்தை ஏஜென்ட் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கேட் டு தெரிந்துகொள்வது கட்டாயம். பாலிசியி ல் கையெழுத்துப் போடுவதற்குமுன் இதை ச் செய்வது நல்லது.

=>அஜய் பிம்பெட், நிர்வாக இயக்குநர், ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்ஷூரன்ஸ்.

Leave a Reply