Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு? – எச்சரிக்கைப் பதிவு!

பெண்கள், உடலுறவில் ஈடுபடக்கூடாது! ஏன்? எதற்கு? – எச்சரிக் கைப் பதிவு!

எந்த மாதிரியான பெண்கள் எநதெந்த நேரத்தி ல், எந்தெந்த சூழ் நிலைகளின் போது உடலு றவில் ஈடுபடக்கூடாது.

உடல்நலக் கோளாறு காரணமாக படுக்கை யில் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்ட பெண்கள் அந்த ஓய்வுக் காலம் முடி கிற வரை செக்ஸைத் தவிர்ப்பது நலம்.

குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக் கான சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தில்

எச்சரிக்கையாக இருக் க வேண்டும்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களு க்கும் குறிப்பிட்ட காலம் வரை செக்ஸ் உற வைத் தவிர்க்கச் சொல்லியே அறிவுறுத்த ப்படும். அறுவை செய்த காயம் முழுவதுமாக ஆறும் வரை செக்ஸ் கூடாது என்பார்கள் மருத்துவர்கள்.

இருவரில் யாராவது ஒருவருக்குப் பால்வி னை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டா லோ, அப்படி இருக்குமோ என்கிற சந்தேகம் இருந்தாலோ கூட செக்ஸ் உறவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டு ம். இந்தக் கண்டிஷன் எய்ட்ஸுக்கு மட்டுமின்றி எல்லா விதமான பால்வினை நோய்களு க்கும் பொருந்துமாம்.

தம்பதியர் இருவரில் ஒருவருக்கு த் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் (அம்மை, சருமநோய் உள் பட) இருந்தாலும் அவர்கள் செக் ஸ் உறவைத் தவிர்க்க வேண்டு ம். அந்த நோய் முற்றிலும் குணமாகிற வரை அல்லது அது மற்றவ ருக்குத்தொற்றாது என்கிற நிலை உண் டாகும் வரை உறவு தவிர்க் கப்படுவது பாதுகாப்பானது என் கிறார்க ள் மருத்துவர்கள்.

உறவின் போது வலியை உணர்ந் தால், உடனடியாக அந்த உறவு நி றுத்தப்பட வேண்டுமாம். வலி எ ன்பது ஒருவரது உடலில் உண்டா கி யிருக்கிற ஏதோ ஒரு பிரச்சினைக்கான அலாரம் மாதிரி. அதை சகித்துக் கொண்டு உறவைத் தொட ர்கிற பட்சத்தில் விளைவுகள் வேறு மாதிரி மாறலாம்.

மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளா ல் பாதிக்கப்பட்ட தம்பதியர் செக்ஸ் உறவிலிருந்து விலகியிருப்பது நல் லது. அளவுக்கதிக மன உளைச்சல், மனச்சோர்வு, படபடப்பு போன்றவற் றால் பாதிக்கப்பட் டவர்களும் அடக்கம்.

கர்ப்பம் தரித்த ஆறாவது வாரம் முதல் பனிரெண்டாவது வாரம் வரை தாம்பத்திய உறவைத் தவி ர்ப்பது கருச்சிதைவிலிருந்து காப் பாற்றும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களும் அ தைத் தவிர்ப்பது நல்லது. கடைசி மாதங்களில் கொள்கிற உறவா னது, பனிக்குடத்தை உடையச்செய்து, ஆபத்தை உண்டாக்க லாம் என்பதே காரணமாம். பிரசவத்து க்குப் பிறகு முதல் ஆறு வாரங்க ளுக்கு செக்ஸ் வேண்டாம் என் பதே மருத்துவர்களின் பொதுவா ன அட்வைஸ். அதன்பிறகு அந்த த்தாயின் உடல் பரி சோதிக்கப் பட்டு, பிரச்சினைகள் இல்லை என்று உறுதியளிக்கப்பட்ட பிற கே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

தம்பதியருக்குள் சண்டை, சச்சரவு நிகழும் போது, அதற்கான ஒரு சமாதான நடவடிக் கையாக செக்ஸ் உறவைக் கையிலெடுப்ப வர் களே அதிகம். மிகப்பெரிய சண்டையைக் கூட அந்த உறவு சமாதானத்துக்குக் கொண் டு வந்து விடுவதுண்டு. ஆனால் உண்மை யில் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பிரச்சினைக்கான தீர்வு முதலில் காணப்பட வேண்டும். மனங்கள் லேசாக வேண்டும். மனத்தளவில் இருவரும் நெருக்கமாக உண ர்ந்த பிறகே உடலளவிலான நெரு க்கம் தொ டர வேண்டும். இல்லாதபட்சத்தில் காலப் போக்கில் அது அந்த தம்பதியருக்கிடையே யான நெருக்கத்தையே சிதைக்கிற வாய் ப்புண்டாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: