Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராமனோடு சீதை வனவாசம் போனதுபோல் லட்சுமணனோடு அவன் மனைவி போகாதது ஏன்? – அறியா அரிய தகவல்

ராமனோடு சீதை வனவாசம் போனது போல் லட்சுமணனோடு அவன் மனைவி ஊர்மிளா போகா தது ஏன்? – அறியா அரிய தகவல்!

இராமாயணக்கதையில் வரும் மிதிலை அரசன் சனகனின் மக ளும். சீதையின் தங்கையுமான ஊர்மிளா . இவளை இராமனின் தம்பி இலக்குவன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும் தர்மகேதுவும் ஆவர். மேலும்

ராமனைப் பிரிந்து சீதை அசோக வனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரி ந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமயணத்தில் ஒரு பாகத்தி ல் கூறப்பட்டுள்ளது. மேலும் இல க்குவன் தனது சகோதரன் ராமனு க்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுகாக தனது வாழ்வை தியாகம் செய்தாள். ரமாயணத்தில் வரும் மற்ற பெண்களைப்போல் அல்லாமல் எதையு ம் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா. அது எப்ப‍டி என்று பார்ப்போம்

கைகேயியின் ஆணைப்படிதான் 14ஆண் டுகள் வனவாசம் புறப்பட்ட‍ இராமனோ டு, லட்சுமணன், தர்ம நியாய அடிப்படை யில் வாதாடி, தானும் ராமனுடன் காட்டு க்கு வர அனுமதி பெற்று விடுகிறான். இந்நிலையில் சீதாதேவியும் ராமனுடன் கானகம் செல்ல முடிவெடுத்து விட்டாள் என்ற செய்தி கேட்டு, லட்சுமணனின் மன தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது. அதாவது, அண்ணனுக்கும் அண்ணிக் கும் சேவை செய்வதற்காகவே கானகம் செல்லும் தன்னோடு தன் மனைவி ஊர்மிளையும் வருவதாகப் பிடி வாதம் பிடித்தால் அவளை எப்படிச் சமாதா னம் செய்வது என்பதே அவன் கவலை. இந் தக் கலக்கத்துடனேயே மனைவி ஊர்மி ளையை அவளது அந்தப்புரத்தில் பார்க்கச் சென்ற லட்சுமணனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ராமனின் வனவாசச் செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் கண் ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிரு ந்த அந்த நேரத்தில், ஊர்மிளை மட்டும் சீவி முடித்து, சிங்காரம் செய்துகொண்டுல பொ ன்னாடைகளும் அணிகலன்களும் தரித்து மஞ்சத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்தாள். கோபத்தால் கண்கள் சிவந்த லட்சுமணன், இது என்ன கோலம் ஊர் மிளா? ஊரே அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உனக்கு ஏன் இந் த ஆடம்பரம்? என்று கேட்டான். அதற்கு அவள் நேரடியாக பதில் சொல்லாமல், ஸ்ரீ ராமன்தானே காட்டுக்குச் செல்ல வேண்டு ம்? உங்களை யாரும் போகச் சொல்ல வில்லையே! நீங்கள் ஏன் மரவுரி தரித்து அலங்கோலமாக நிற்க வேண்டும்? என்று திருப்பிக் கேட்டாள். ஊர்மிளைக்குப் பைத்தி யம் பிடித்து விட்டதோ என ஒரு கணம் பதறினான் லட்சுமணன், சமாதானமாகப் பேசி, பல நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவள் செய்வது சரியல்ல என்று விளக்கினான். ஆனால் ஊர்மிளை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

நீங்கள் கோசல நாட்டின் இளைய ராஜகுமார ன், உங்கள் ராணியாக அரச போகங்களை அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டுத் தான் உங்களைத் திருமணம் செய்து கொண் டேன். அரச போகங்களைத் துறந்து செல்வது ஸ்ரீராமனின் விதி என்றால் அதில் நீங்கள் ஏன் பங்குகொள்ள வேண்டும்? நான் ஏன் என் சவுபாக்கியங்களை இழக்க வேண்டும்? என் று கேட்டாள். லட்சுமணனின் ரத்தம் கொதித் தது. தாடகையைவிடக்கொடிய அரக்கிபோ ல் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் ஊர்மி ளை. பெண் இனத்துக்கே அவளால் அவமானம் எனக் கருதினான். அவளை மனைவியாக அடைந்த தன் துர்பாக்கிய த்தை எண்ணி நொந்து கொண்டான். அடிப்பாவி! நீ கைகேயியைவிடக் கொடியவளாக இருக்கிறா யே! அரசு போகத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலு ம் ஆசை கொண்டவள் நீ. பதிபக்தி இல்லாதவள். உன்னை மனைவி என்று சொல்வது கூடப் பாவம். இக்கணம் முதல் உன் சிந்தனையை என் மனத்தி லிருந்து அகற்றிவிட்டேன். இனி நமக்குள் பந்தமி ல்லை, உறவில்லை. ஊர்மிளை என்ற சொல்லுக் கே அர்த்தமில்லை. இன்று முதல் நீ யாரோ, நான் யாரோ! என்று கோபத்தில் கொந்தளித்தவன் போய் வருகிறேன் என்றுகூடச் சொல்லாமல், போகிறேன் என்று கூறிப் புறப்பட்டான். தன் உணர்ச்சிகளை எல்லாம் கொன்றுவிட்டு, அவனுடன் உரையாடிய ஊர்மி ளை, கணவன் லட்சுமணனின் தலைமறைந்ததும் விக்கி விக்கி அழுதாள். கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினாள்.

ராமனுக்கும் சீதைக்கும் 14 ஆண்டுகள் பணிவிடை செய்யப் போகும் லட்சுமணனுக்குத் தன் னைப் பற்றிய ஆசா பாசங்கள், காதல் நினைவுகள் ஏற்பட்டு, அதனால் அவர் செய்கின்ற பணிக்கு இடையூறு வராமல் இருக்கவேண்டும் என்ப தற்காகவே அவள் இப்ப டியொரு நாடகமாடி, தன் மீது அவனுக்கு முழு வெறுப்பு ஏற்படும் படியாகச் செய்து கொண்டு, கணவன் ஏற்று க்கொண்ட கடமை எனும் யாகத் தீயில் தன் னையே நெய்யாக்கி ஆஹூதி தந்தாள் ஊர் மிளை, 14 வருடங்கள் அன்ன ஆகாரமின்றி மிக எளிமையாக சனியாசியாக வாந்தாள். தான் செய்த இந்த தியாகத்தைப் பற்றி அவள் யாரிடமும் கூறவில்லை. லட்சுமணனுக்கும் ஊர்மிளை செய்த இந்தத் தியாகம் தெரிகிறது. வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டான். அப்போதும் லட்சுமணன் ஊர்மிளையை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

தொகுப்பு – விதை2விருட்சம்

4 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: